என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள்வெட்டு"

    • அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர்.
    • டாஸ்மாக் கடை முன்பு பலத்த காயங்களுடன் கிடந்தார்.

    கோவை,

    கோவை பள்ளப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 31). டிரைவர். இவரது அண்ணன் பிரகாஷ் (34). சுமை தூக்கும் தொழிலாளி.

    இந்த நிலையில் வினோத்குமாருக்கு ஒண்டிப்புதூர் பட்டணம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பிரகாஷ் பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது அண்ணனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

    பின்னர் வினோத்குமார், பிரகாசிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது பிரகாஷ் தனக்கு தனது நண்பர் சந்தோஷ் என்பவர் செல்போனில் அழைத்தார். அவர் தன்னை பட்டணம் பகுதியில் யாரோ கடத்தி வதைத்து உள்ளதாக தெரிவித்தார்.

    எனக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் எனக்கு மணி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவருக்கு போன் செய்து விசாரித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மணி நெசவாளர் காலனி பகுதிக்கு என்னை வர கூறினார். நான் அங்கு சென்றேன். ஆனால் மணி அங்கு இல்லை. அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மணி மற்றும் அவரது நண்பர்கள் நீலதேவன், நவின்குமார் மற்றும் சிலர் அங்கு நின்று இருந்தனர்.

    அங்கு நான் சென்று எனது நண்பர் சந்தோஷ் குறித்து கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர் என்றார்.

    பின்னர் இதுகுறித்து அரவது தம்பி வினோத்குமார் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் வெட்டிய மணி, நீலதேவன், நவின்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

    • வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார்,. இதனால், இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள்.

    கடலூர்:

    புவனகிரி அருகே சாமி ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபருக்கு வெட்டு விழுந்தது. மாசிமகத்தை யொட்டி புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் சாமியை தீர்த்தவாரிக்கு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். தீர்த்தவாரி முடிந்ததும் சாமியை மீண்டும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்  புவனகிரி அருகே உள மேலமானகுடி பகுதியில் சாமியை கொண்டு வந்த போது அப் பகுதியை சேர்ந்த வாலிபர் அஜய் சாமி ஊர்வலத்தில் ஏன் அதிக சத்தத்துடன் மேளம் அடித்து வருகிறீர்கள் என தட்டிக் கேட்டார்.   இதனால் சாமியை ஊர்வமாக கொண்டு வந்தவர்கள் ஆக்திரம் அடைந்தனர். இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அஜயை அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  இந்த தகராறில் எதிர் தரப்பை சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • யுவராஜ் (வயது29). இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
    • 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் யுவராஜ் (வயது29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காராக பணிபுரிந்து வந்த இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூரில் பேருந்து ஏற முயன்ற யுவராஜை போலீசார் கைது செய்தனர்.

    • பஸ்நிறுத்தத்தில் நின்ற பயணிகள் அலறல்
    • இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

     சூலூர்,

    கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் இன்று காலை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு செல்வ ராஜா மில் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்தார். அவர் ஆனந்த்தை ஓட, ஓட அரிவாளால் வெட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க ஆனந்த் ஓட்டம் பிடித்தார். இருந்தாலும் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆனந்த்தை அந்த வாலிபர் வெட்டினார்.

    இதில் ஆனந்த்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்துப்பகுதியில் மற்றொரு வெட்டு விழுந்தது.

    பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓடினர். சிலர் ஆனந்த்தை வெட்டிய வாலிபரை கண்டித்து அவரை தடுத்தனர். கூட்டம் அதிகமாக திரண்டதால் அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து சர்வசா தாரணமாக தப்பிச்செ ன்றார்.

    ஆனந்த்தை பார்த்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறியபடியே அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    காயம் அடைந்த ஆனந்த்தை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

    விசார ணையில் ஆன ந்தை வெட்டியது கோவை ப்புதூரைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகார த்தில் ஆனந்த்தை அந்த நபர் வெட்டிய விவரம் தெரிய வந்தது. இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

    • அதிவேகத்தில் ஓட்டிச் சென்ற பள்ளி வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • சோமரசம் போலீசார் வாலிபர் மீது வழக்கு பதிவு

    திருச்சி,

    திருச்சி சோமரசம்பேட்டை பொம்மாணி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 27). இவர் வாசன் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு வாசன் நகர் 7-வது கிராஸ் ரோடு பகுதியில் பள்ளி வேனை வேகமாக இயக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் சுந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தை மனதில் வைத்து வாசன நகர் 8-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வாசன் நகர் நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்த சுந்தரை அரிவாளால் விட்டுவிட்டு தப்பி சென்றார். இதில் அவரது இடது கைகளிலும் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தொட்டியம் அருகே மாமனாரை, மருமகள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 72). இவருக்கு மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் தர்மராஜ் கடந்த 12- வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.மருமகள் கருப்பாயி (39) மற்றும் தர்மராஜன் இரண்டு மகள்கள் ரகசியா, வர்ஷா ஆகிய மூன்று பேரையும் பூனாட்சி தோட்டம் என்ற இடத்தில் துரைராஜ் குடி வைத்து பராமரித்து வந்தார்.இந்த நிலையில் கருப்பாயிக்கும், துரைராஜ் வீட்டில் பால் கறக்க வரும் வீரமலை என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை துரைராஜ் கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பாயி துரைராஜியை அரிவாளால் வெட்டியுள்ளார். வலி தாங்காமல் துரைராஜ் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயி மீது வழக்கு பதிவு செய்து தொட்டியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரசுராமன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஸ்ரீரங்கத்தில் ஆவின் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் ஆவின் பால் விற்பனை செய்து வருகிறார்.ராகவேந்திரா மடம் அருகே இவர் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வயல் வரப்பு பிரச்சினையில் மாமன்- மைத்துனர் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டி கொண்டனர்
    • பெரம்பலூர் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நொச்சியம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (வயது 38). நொச்சியம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் 35 இருவரும் மாமன் மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள். இருவரு க்கும் தங்களது வயல்களில் வரப்பு அமைப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் மாமுண்டி நில அளவையரை வைத்து நிலத்தை அளந்து வரப்பு போட்டார்.இதை அறிந்து ஆத்திரமடைந்த அருள்ராஜ் மாமுண்டி வீட்டுக்குச் சென்று என்னை கேட்காமல் நீ எப்படி வரப்பு போட்டாய் என கேட்டு தகராறு செய்து ள்ளார். பின்னர் சத்தம் போட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அருள்ராஜ் சிறிது நேரம் கழித்து மீண்டும் மாமுண்டி வீட்டுக்குச் சென்று அவரது இடது கையில் கொடுவாளால் வெட்டினார். உடனே சுதாக ரித்துக் கொண்ட மாமுண்டி குடி போதையில் இருந்த அருள்ராஜ் கையில் இருந்த கொடு வாழை பிடுங்கி அவரது இரண்டு கணுக்கா ல்களிலும் வெட்டினார்.உறவினர்கள் வெட்டு க்காயம் அடைந்த மாமுண்டி மற்றும் அருள்ராஜ் ஆகிய இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்து ள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரப்பு பிரச்சனை யில் மாமனும் மருமகனும் ஒருவருக்கொருவர் வெட்டி கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தொட்டியத்தில் கடன் தர மறுத்ததால் கறிகடைகாரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • ஏற்கனவே கடன் வாங்கிய நிலையில் மேலும் கடன் தர மறுத்ததால் வெறிச்செயல்

    தொட்டியம், 

    திருச்சி மாவட்டம் தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணிய மகன் முத்தையா (வயது 45). இவர் காட்டுப்புத்தூர் பிரிவு ரோட்டில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேலத்தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் ராஜா (44) என்பவர் முத்தையனிடம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பித் தரவில்லை. இந்த கடனை பலமுறை முத்தையா ராஜாவிடம் கேட்டு பணத்தை திருப்பி தரவில்லை. இந்நிலையில ராஜா, முத்தையாவிடம் மேலும் பணம் கேட்டு உள்ளார். ஆனால் முத்தையா பணம் தர மறுக்கவே, வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா அருவாளால் முத்தையாவை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் முத்தையா தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் தொட்டியும் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரசுராமன் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது
    • ரவுடி உள்பட தப்பி ஓடிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற முத்துவீரன் (வயது 51). புரோட்டா மாஸ்டர் . இவர் திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த மதன் குமார் என்பவரின் மனைவியிடம் பணம் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியும் கொடுத்துள்ளார். இந்நிலையில் வட்டி கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், மதன்குமார் இரண்டு பேருடன் சேர்ந்து புரோட்டா மாஸ்டர் முத்துவீரன் மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடிவிட்டார் . இது குறித்து முத்துவீரன் கொடுத்த புகாரி அடிப்படையில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். இதில் மதன்குமார் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்ததால், அண்ணனை அரிவாளால் தம்பி வெட்டியுள்ளார்
    • தோகைமலை போலீசார் தம்பி மீது வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சி குண்டன் பூசாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்கள் வெள்ளைச்சாமி (வயது 50). முருகேசன் (45). விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் தாய் கைலாசம் இளையமகன் முருகேசன் பராமரிப்பில் இருந்து வருகிறார்.தற்சமயம் கைலாசம் வேப்பம்பழங்களை சேகரித்து விற்பனை செய்து அந்த பணத்தை முருகேசனிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் குண்டன்பூசாரியூரில் உள்ள முருகேசன் வீட்டில் கைலாசம் இருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைச்சாமி, தனது தாய் கைலாசத்திடம் வேப்பம்பழம் விற்பனை செய்து வைத்து உள்ள பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அங்கிருந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி நல்லங்காள் ஆகிேயார் வெள்ளைச்சாமியிடம் தாய் கைலாசத்தை பராமரிப்பதும் இல்லை, உணவும் கொடுப்பதில்லை எப்படி பணம் கேட்கலாம் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த முருகேசன், நல்லங்காள் ஆகியோர் சேர்ந்து வெள்ளைச்சாமியை தகாதவார்த்தையால் திட்டி, அரிவாளால் வெட்டினர். இதில் வெள்ளைச்சாமி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் முருகேசன், நல்லங்காள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் வெள்ளைச்சாமியின் மனைவி தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி நல்லங்காள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஸ்ரீரங்கம் பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
    • அ.தி.மு.க. நிர்வாகி அதிரடி கைது

    திருச்சி,

    திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை மாணிக்கம்பிள்ளை தெரு அருகே கதிர்வேல் சென்றபோது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்து காயமடைந்தார். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கதிர்வேலை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தற்போது ரங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருவானைக்காவல் பகுதி அ.தி.மு.க. துணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.சுரேஷ், செல்வகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கொலை முயற்சி வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×