search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலையரங்கம்"

    • செம்பனூர் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட செம்பனூர் ஊராட்சியில் உள்ள நாச்சியப்பன் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். இதையடுத்த அந்த இடத்தில் 2020-21-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    இதனை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா, கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செம்பனூர் அரசு பள்ளியில்12, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

    • நரிக்குடி அருகே கலையரங்கம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்திராநகர், கணையமறித்தான் மற்றும் கட்டனூர் ஆகிய பகுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பில், கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, பாப்பா போஸ், தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே புதிய கலையரங்கத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • மேலூர் ஊராட்சி ஒன்றியம், சருகு வலையபட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியம், சருகு வலையபட்டி ஊராட்சியில் உள்ள லட்சுமிபுரத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டது.

    இதை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சருகு வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருந்தேவி ராமநாதன், கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வராஜ், கிளைச்செயலாளர் ராமநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபாலன், பாலசந்தர், மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சருகுவலையபட்டி முருகேசன், கிடாரிபட்டி சுரேஷ், மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலையரங்கத்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8.30மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் இந்த கோவிலில் தரிசனத்துக்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நுழைவு வாசலில் எந்த நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    பகவதிஅம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமய சொற்பொழிவு நடத்துவதற்காக கோவிலின் நுழைவு வாசல் முன்பு மிக பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கலையரங்க த்தின் முன்பு கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் தாங்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களை காலையில் இந்த கலையரங்கம் முன்பு வைத்து விட்டு இரவு தான் திரும்பி வந்து எடுத்துச் செல்கிறார்கள்.

    இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்க பகுதி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் "பார்க்கிங்" இடமாக மாறிவிட்டது. தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தப்படுவதால் இந்த பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

    இதற்கிடையில் ஆட்டோ, கார், வேன், டிரக்கர், ஜீப், மினி பஸ் போன்ற பெரிய கனரகவாகனங்களும் இந்த சன்னதி தெரு பகுதியில் உள்ள லாட்ஜுகள் முன்பு ஆங்காங்கேபோக்குவரத்துக்குஇடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவிலில்வைகாசிவிசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் 10 நாட்களும் இந்த சன்னதி தெரு வழியாகத் தான் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்துகொண்டிருக்கிறது.

    மேலும் இந்த 10 நாட்களும் இந்த கோவிலின் முன்புஉள்ள கலையரங்கத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் கோவிலுக்குள் எளிதாக சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வர முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள்.

    எனவே கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் கலையரங்கம்முன்பு இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு போக்கு வரத்து போலீசார் தடை விதிக்கவேண்டும் என்றும் அதற்கு பதிலாக இந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இட வசதி செய்து தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோ, கார், வேன், ஜீ்ப் டிரக்கர், மினி பஸ் போன்ற கனரக வாகனங்களையும் கன்னியாகுமரி சன்னதி தெருவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×