என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கனிமவளங்கள்"
- தாசில்தார் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் உடன்பாடு
- கனரக வாகனத்தில் இருந்து பாறாங்கல் விழுந்த விவகாரம்
பூதப்பாண்டி :
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் செல்லும் கனரக லாரிகளால் விபத்துகளும், சாலை சேதமும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தடை விதித்தார்.
ஆனால் லாரி உரிமை யாளர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவுக்கு அவகாசம் பெற்றனர். இதனை தொடர்ந்து கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் மீண்டும் செல்லத் தொடங்கின.
கடந்த வாரம் இறச்சகுளம்-களியங்காடு வழியாக ஒரு கனரக வாகனம், கனிமவளங்களை ஏற்றிச் சென்றது. அப்போது அந்த லாரியில் இருந்து பெரிய பாறாங்கல் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் அப்போது யாரும் இல்லாததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. அதே நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை போலீசாரதும் அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தன். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இன்று காலை தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறச்சகுளம்-களியங்காடு சாலையில் இரு வழியாகவும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளதாகவும், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் அந்த வழியாகச் செல்லும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக 15 நாட்களில் முடிவு செய்வது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அவர்கள் கூறுகையில்,15 நாட்களில் உறுதியான முடிவு காணப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
- போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
- 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை
தக்கலை :
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் தினமும் அதிக அளவில் சென்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கனரக லாரிகள் அதிக அளவு பாரத்துடன் செல்வதால், குமரி மாவட்ட சாலைகள் சேதமடைவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் கனரக லாரிகள் செல்வது குறைந்தபாடில்லை. இந்த நிலையில் 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
இதனை முன்னிட்டு தற்போது அதிக அளவிலான கனரக லாரிகள் நேற்று முதல் கேரளாவுக்கு படையெடுத்து சென்று வருகின்றன. இன்று அதிகாலையும் தக்கலை, சித்திரங்கோடு, முட்டைக்கோடு, செம்பருத்திவிளை வழியாக கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் சென்றன. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு பிறகு பள்ளி வாகனங்கள் செல்ல தொடங்கிய பிறகும், கனரக லாரிகள் சென்றதால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரி, துணை தலைவர் டேவிட் மற்றும் பொதுமக்கள் திரண்டு செம்பருத்திவிளை சந்திப்பில், கனரக லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கனரக லாரிகள் வரிசையாக சாலையில் நின்றதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொற்றிகோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
- பூமிக்கு அடியில் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்கின்றன.
- மாநில எல்லைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து கனிமவளம் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் முதல் நாகர்கோவில் வரை மலைப்பகுதிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்திற்கு கடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டம் கூடங்குளம், இருக்கன் துறை, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களிலும் கல் உள்ளிட்ட கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகின்றன.
அதேபோல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிகள், செயற்கை மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகின்றன.
பூமிக்கு அடியில் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்கின்றன.
தென் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல் குவாரிகள் அனைத்தையும் அரசு மூட வேண்டும். மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து கனிமவளம் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 7 வாகனங்களை சோதனை செய்த போது கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி வந்தத தெரிந்தது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிமவளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்ட கண்காணிப்பாளர் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 7 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகனரக கனிமவள வாகனங்கள் புளியரை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை செல்லும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கடையம்:
அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகனரக கனிமவள வாகனங்கள் செல்வதால் அதிகாலை 3 மணி முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அவ்வழியாக பஸ்சில் செல்லும் பொதுமக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர்.
எனவே முதல்- அமைச்சர் உடனடியாக தலையிட்டு அதிகனரக வாகனங்கள் செல்வதை தடுத்து போக்குவரத்தை சீர் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
- வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங் களில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 7 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்