என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் சிக்கினார்"
- இவர் ஒரு இளம்பெ ண்ணை காதலித்து வந்தார்.
- தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் அவர், வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் மஞ்சுநாதன் (வயது24). பட்டதாரியான இவர், போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார்.
இவர் ஒரு இளம்பெ ண்ணை காதலித்து வந்தார். அந்த இளம்பெண்ணும் அவரை காதலித்ததாக கூறப்ப டுகிறது. இந்தநிலையில் அவர்களிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் மஞ்சுநாதனிடம் பேசுவதை யும், பழகுவதையும் தவிர்க்க தொடங்கினார்.
இதுகுறித்து மஞ்சுநாதன், அந்த இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். மேலும் தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் அவர், வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த இளம்பெண் காதலை தொடர முடியாது என்று மறுப்பு ெதரிவித்துள்ளார். இதனால் மஞ்சுநாதனுக்கு அந்த இளம்பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. காதலை தொடர மறுத்த அந்த இளம்பெண்ணை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதனை சமூக வலைதலங்களில் மஞ்சுநாதன் வெளியிட்டார்.
இதுபற்றி அந்த இளம்பெண்ணுக்கு தகவல் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தருமபுரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மஞ்சுநாதனை நேற்று கைது செய்தனர்.
- ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
- இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு சம்பத் நகரில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு திருடி கொண்டு சென்று விட்டார்.
மோட்டார் சைக்கிள் திருட்டுப் போனதை கண்ட உரிமையாளர் உடனடியாக இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மோட்டார்சைக்கிள் வாகன எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.
அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை சவிதா சிக்னலில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது ரோந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பவானி குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த சேட் (36) என்பதும் சம்பத் நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததையும் ஒப்புக்கொண்டார்.
இவர் இதே போல் அம்மாபேட்டையில் ஒரு மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாசம். இவரது மனைவி கலைவாணி (வயது 40).
இவர் புதுவை புஸ்சி வீதியில் உள்ள தனியார் ரெஸ்டாரெண்ட் ஓட்டலில் துப்புரவு ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் தினமும் சைக்கிளில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.
அதுபோல் கடந்த 7-ந் தேதி மாலை வேலை முடிந்து சம்பள பணம் ரூ.10 ஆயிரத்தை வாங்கி லெதர் பேக்கில் வைத்து அதனை சைக்கிளின் முன் பக்க கூடையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
நைனார் மண்டபத்தில் வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென கலைவாணியை வழிமறித்து சைக்கிள் கூடையில் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
அந்த பையில் ரொக்க பணம் ரூ.10 ஆயிரத்துடன் தனது செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றையும் கலைவாணி வைத்திருந்தார்.
இதுகுறித்து கலைவாணி முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பணப்பையை பறித்து சென்ற இடத்தில் பொறுத்தி இருந்த சி.சி.டி. கேமராவை ஆய்வு செய்த போது பணப்பையை பறித்தவரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர்.
இதன் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த மோட்டார் சைக்கிள் புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் என்ற மவுலி (20) என்பவருக்கு சொந்தமானது தெரியவந்தது.
இதையடுத்து மவுலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பணப்பையை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். கஞ்சா போதையில் பணப் பையை பறித்து சென்றதாக போலீசாரிடம் மவுலி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மவுலியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலைவாணிக்கு சொந்தமான ரூ.10 ஆயிரத்துடன் கூடிய லெதர் பேக், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை கொரட்டூர் பகுதியில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக கொரட்டூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் என்ற வாலிபர் சிக்கினார்.
திருமங்கலம் என்.வி.எம். நகரை சேர்ந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மணிகண்டன் விலை உயர்ந்த 3 மோட்டார் சைக்கிள்களை திருடியிருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பு கொண்டவையாகும்.
மணிகண்டனை கைது செய்த போலீசார் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடியது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவருடன் ஒன்றாக ஊர் சுற்றுவதற்காகவே புதிது புதிதாக மோட்டார் சைக்கிள்களை திருடினேன் என்றும் தெரிவித்துள்ளார்.