என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏலச்சீட்டு"
- சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
- 6 பேரை தவிர மீதமுள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், வள்ளிமலை அடுத்த மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாக:-
மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நாகதேவி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஏல சீட்டில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என மொத்தம் 40 பேர் பணம் செலுத்தினோம்.
இதில் 6 பேரை தவிர மீதமுள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால் எங்கள் 6 பேருக்கு மட்டும் பணத்தை தராமல் அவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
இது குறித்து கேட்டால் அவர்கள் மிரட்டுகின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- சுப்பையாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- காயத்திரி வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போரூர்:
சென்னை, ராமாபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் எம்.ஜி.ஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள முதல் தளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து ஏலசீட்டும் நடத்துகிறார்.
இதில் கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான சுப்பையா (வயது56) என்பவர் ரூ.1 லட்சம் சீட்டில் சேர்ந்தார். மாதம் ரூ.3,350 வீதம் 15 மாதங்களாக பணம் கட்டி வந்தார். மொத்தம் 30 மாதங்கள் கட்ட வேண்டும் என்று தெரிகிறது.
இதற்கிடையே சுப்பையாவால் தொடர்ந்து சீட்டு பணம்கட்ட முடியவில்லை. இதனால் அவர் இதுநாள் வரை தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு செல்வத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் மே மாதம் தான் பணத்தை தரமுடியும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே பண கஷ்டத்தில் தவித்து வந்ததால் விரக்தி அடைந்த சுப்பையா நேற்று இரவு தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி கொண்டு செல்வத்தின் ஏலச்சீட்டு அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது உடனடியாக பணத்தை திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் இங்கேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
இதை அங்கிருந்தவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த சுப்பையா திடீரென தனது உடலில் தீயை பற்றவைத்தார். இதில் உடல் கருகிய அவர் எரியும் தீயுடன் அங்கிருந்த பெண் ஊழியர் காயத்ரி என்பவரை பிடித்தார். இதில் அவரும் உடல் கருகினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடல்கருகிய சுப்பையாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காயத்திரி வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுப்பையாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு பணம் செலுத்தியவரிடம் முதிர்வு தொகை வழங்காமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு பகுதியில் ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீட்டு சேர்ந்து மாதந்தோறும் உரிய தொகையை செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு பணம் செலுத்தியவரிடம் முதிர்வு தொகை வழங்காமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே பணம் செலுத்திய பொதுமக்கள் பணத்தை திருப்பி தரக்கோரி அவரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் அவரிடம் 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தோம் . அவர் சுமார் ரூ.1½ கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்யும் நோக்கத்தில் காலம் தாழ்த்தி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டி வருகிறார் . எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நாங்கள் செலுத்திய பணத்தை மீட்டு தர வேண்டும் என்றனர் .
இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அவரை பிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்