என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆரல்வாய்மொழி"
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட நினைக்காதீர்கள்
நாகர்கோவில்:
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த தி.மு.க. அரசை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஆரல்வாய்மொழி நகர பூங்காவில் நடந்தது.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கிருஷ்ண தாஸ், இளைஞரணி இணை செயலாளர் சிவசெல்வராஜன், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் மகராஜ பிள்ளை முன்னிலை வகித்தனர்.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமார் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் அதிகாரியை அடித்த இயக்கம் தி.மு.க. தான். எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட நினைக்காதீர்கள். அது உங்கள் மீது பாய்ந் துவிடும். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் ஒளிமயமாக இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, லஞ்சம் தலைவிரித்து ஆடு கிறது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் நாள் வந்து விட்டது.
மக்கள் சந்தோசமாக வாழ தமிழகம் ஒளிமயமாக அ. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நாகர் கோவில் மாநகராட்சி கவுன் சிலர் அக் ஷயாகண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட்தாஸ், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பொருளாளர் திலக், மாவட்ட துணைச் செயலாளர் பார்வதி, குமரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சிவ குற்றாலம், மாவட்ட கவுன்சிலர் நீல பெருமாள், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன், விசு, நிர்வாகிகள் சந்துரு, சகாயராஜ், ரெயிலடி மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.
- 3 பேர் கோர்ட்டில் ஆஜர்
- போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் அனந்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.
இவர் மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 16-ந்தேதி இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் தாழக்குடி-மாதவலாயம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தபோது ஒரு கும்பல் ராஜ்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தவிளை யைச் சேர்ந்த பிரவீன் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ராம் சித்தார்த் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெபின் ஆகிய மூன்று பேரை கைது செய்த னர். கைது செய்யப் பட்ட மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயி லில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாகியுள்ள மேலும் 4 பேரை தேடி வந்த நிலையில் ராமன் புதூர் சாரோன் தெருவை சேர்ந்த ஜோன்ஸ் (34), அழகிய பாண்டிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சாம் ஈஷாக் (37), சீதப்பால் மேல தெருவை சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய மூன்று பேர் பத்நாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சரண் அடைந்த மூன்று பேரையும் காவல் எடுத்து விசாரிக்க ஆரல்வாய்மொழி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து உடனே அவர்களுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப் பட்டது. போலீஸ் காவல் வழங்கப்பட்டதையடுத்து ஜோன்ஸ், சாம் ஈஷாக், அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் போலீசார் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.
விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜ்குமாரை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.சம்பவத்தன்று பிரவீன், முருகன் இருவரும் சூப் கடையில் இருந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த ராஜ்குமார் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களை தீர்த்து கட்டி விடுவதாக ராஜ்குமார் மிரட்டி உள்ளார். இதை பிரவீன், முருகன் இருவரும் எங்களிடம் தெரிவித்தனர்.
உடனே நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு வந்த ராஜ்குமாரிடம் இது தொடர்பாக கேட்டோம். அப்போது ஏற்பட்ட தகரா றில் அவரை தீர்த்து கட்டிய தாக கூறியுள்ளனர். தொடர்ந்து 3பேரிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணைக்கு பிறகு இன்று மாலை 3 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தலை மறை வாகியுள்ள முருகனை போலீசார் தேடி வருகிறார் கள்.
- கொலை வழக்காக மாற்றம்
- ஆரல்வாய் மொழி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
பூதப்பாண்டி அருகே சீதப்பால் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ செபஸ்தியான் (வயது 50).
இவர் சீதப்பால் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது கோழிபண்ணையில் இருந்த தார்ப்பாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது.இது தொடர்பாக சீதப்பால் மேற்கு தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணிய பிள்ளை (50) அவரது மகன் சங்கர் (30) ஆகியோருக்கும் ஆன்றோ செபஸ்டியானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 17-ந்தேதி தந்தை-மகன் இருவரும் ஆன்றோ செபஸ்தியானிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் ஆன்றோ செபஸ்தியானை சரமாரியாக தாக்கினார்கள். காயமடைந்த ஆன்றோ செபஸ்தியானை சங்கர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆன்றோ செபஸ்தியன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.
இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சங்கர், சிவசுப்பிரமணிய பிள்ளை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.சங்கரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆன்றோ செபஸ்தியான் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான ஆன்றோ செபஸ்தியான் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கி றது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை
- இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள்
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே மாதவாலயம் அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.
இவர், கடந்த 16-ந்தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். கொலை யாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.
இந்த நிலையில் ராஜ்குமா ருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே சூப் கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்தி ருப்பது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக புது குடியிருப்பைச் சேர்ந்த பிரவீன் (23), அவரது நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ராம சித்தார்த் (26)ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீ சார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகர்கோவில் ராமன் புதுரை சேர்ந்த ஜெபின் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட ஜெபினை ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினார்கள்.
அப்போது தனது நண்பர் அழைத்ததால் அவருடன் சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட ஜெபினை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தலைமறைவாக உள்ள 4 பேர் நெல்லையில் பதுங்கல்
- தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்த பத்மநாத புரத்தை சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 34), பிரபல ரவுடி. இவர், கடந்த 16-ந்தேதி நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வந்த போது வழிமறித்த கும்பல் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினார்கள். கொலையாளி களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சூப் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக தாழக்குடி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23), நாகர்கோவில் ஆசாரி மார் தெருவை சேர்ந்த ராம சித்தார்த் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பிரவீன் கூறுகையில், சூப் கடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராஜ்குமார் என்னையும் எனது நண்ப ரையும் கொன்று விடுவ தாக மிரட்டினார். இதனால் நாங்கள் முந்திக் கொண் டோம் என்று கூறினார்.
இதையடுத்து போலீ சார் பிரவீனையும் ராம சித்தார்த்தையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 4 பேரை யும் பிடிக்க போலீ சார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். போலீசார் தேடு வது அறிந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் தற்போது நெல்லை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
- ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
- ஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் தற்பொழுது பெரிய ரெயில் நிலையமாக மாற்றப்பட்டு வருகின்றது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் கூட்ஸ் ஷெட் அமைத்துள்ளது. இங்கு வரும் ஒரு கூட்ஸ் ரயில்களில் மட்டும் சுமார் 4000 முதல் 6000 டன் வரை 52 வேகன்களில் உணவு தானிய பொருட்களும் இதர அத்தியாவசிய பொருட் களும் வருகின்றது.
பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா போன்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் இங்கு வருகின்றன.
இந்த ரெயில்களில் வரும் சரக்குகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள உணவு தானிய கிடங்குகளில் குறிப் பாக நாகர்கோவிலில் உள்ள வெட்டூர்ணிமடம் மத்திய சேமிப்பு கிடங்கு, கோணம், திங்கள் சந்தை, காப்புக்காடு, உடையார்விளை, ஆரல்வாய் மொழி போன்ற இடங்களில் கொண்டு சென்று சேமித்து வைக்கின்றனர்.
இந்த கூட்ஸ் ஷெட் கோட்டாரில் உள்ளமையால் லாரிகள் நகரினுள் செல்வ தால் நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இந்த போக்குவரத்து நெரி சலை தவிர்க்க ஆரல்வாய் மொழி ரெயில் நிலையம் தற்பொழுது பெரிய ரெயில் நிலையமாக மாற்றப்பட்டு வருகின்றது. அதன் மிக அருகே 4 வழிச்சாலையும் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் புதிய கூட்ஸ் ஷெட்டை மாற்றி அமைப்பதன் மூலம் நாகர்கோவில் நகரில் தற்பொழுதுள்ள போக்கு வரத்து நெரிசல் மிகவும் குறையும்.
மேலும் நாகர்கோவில் கூட்ஸ் ஷெட் வேறு இடத்திற்கு மாற்றியமைக்கும் பொழுது அந்த கூட்ஸ் ஷெட் இடத்தில் புதிதாக ரயில்கள் நிறுத்துவதற்கான கூடுதல் ஸ்டேபிலிங் லைன் கூடுதல் அமைக்கலாம். இதனால் சந்திப்பு ரயில் நிலையத்தில் வரும் அனைத்து ெரயில்களும் நிறுத்த போதிய இட வசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆதலால் மேற்படி கூட்ஸ் ஷெட்டை உடனடியாக ஆரல்வாய்மொழி அல்லது டவுண் ரயில் நிலையத்திற்கு மாற்றிட உரிய நடவ டிக்கை எடுக்குமாறு வேண்டு கிறோம் என தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார்
- வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடுகிறார்கள்
கன்னியாகுமரி:
ஆரல்வாய் மொழியில் சோதனை சாவடி அருகே திருமண மண்டபம் நடத்தி வருபவர் முருகானந்தம். இவர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஆவார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் ஆரல்வாய்மொழி வடக்கூர் இசக்கி மகன் மீனாட்சி சுந்தரம் என்பவர் தகராறு செய்து பொருட்களை உடைத்துள்ளார் இதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் நேற்று முன்தினம் வடக்கூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள முருகானந்தத்திற்கு சொந்தமான வீட்டை கல்வீசி தாக்கியுள்ளார். சத்தம் கேட்ட முருகானந்தம் வெளியே வந்து தட்டி கேட்டபோது மீனாட்சி சுந்தரம் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகார் அடிப்படையில் போலீசார் மீனாட்சி சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
- ஆரல்வாய்மொழி 4 வழி சாலையையொட்டியுள்ள மரத்தில் பிணமாக தொங்கினார்.
- தற்கொலை செய்து கொண்டவருக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி 4 வழி சாலையையொட்டியுள்ள மரத்தில் ஒருவர் பிணமாக தொங்கினார்.
இன்று காலை வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதை பார்த்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தூக்கில் பிணமாக தொங்கியவர் ஆரல்வாய்மொழி குருசடி பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் (வயது 50) கொத்தனார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட பவுல்ராஜ் எதற்கு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்ட பவுல்ராஜிக்கு ஜெயமதி பாய் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
- பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 40).
இவர் கிரேன்கள், லாரிகள் மற்றும் டிரில்லர்கள் வைத்து தொழில் செய்து வருகிறார்.இதற்காக குமாரபுரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அலுவலகம் அமைத்து உள்ளார்.
அந்த இடத்திலேயே தனது லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம். நேற்று அங்கு கிரேன், லாரிகள் மற்றும் 2 டிரில்லர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு யாரோ மர்மநபர்கள் அங்கு புகுந்துள்ளனர். அவர்கள் 2 டிரில்லர் மற்றும் லாரியின் பெட்டி பூட்டுகளை உடைத்து அதில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இன்று காலை அலுவலகம் வந்தவர்கள், கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அலுவலகம் வந்தார்.
லாரி மற்றும் டிரில்லர்களில் இருந்த 5 பேட்டரிகள், உபகரணங்கள் மற்றும் ஜாக்கிகள் திருட்டு போயிருப்பதாக ஆரல்வாய்மொழி போலீசில் அவர் புகார் கொடுத்தார். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர். துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கன்னியாகுமரி:
தூத்துக்குடி மாப் பிள்ளை லுரணி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவரது மகன் மாரிமுத்து (வயது 28). இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் உள்ள மினி டெம்போ ஒன்றை ஓட்டி வந்தார்.
சம்பவத்தன்று மாரிமுத்து மினி டெம்போவை முப்பந்தல் பகுதியில் ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் மினி டெம்போ கவிழ்ந்தது.
படுகாயம் அடைந்த மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாரிமுத்துவிற்கு செல்லா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள னர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாரிமுத்துவிற்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- டெம்போ டிரைவர் பலி
- பொங்கல் பண்டிகையையொட்டி பெற்றோரை பார்க்க சென்றபோது பரிதாபம்
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன் புதூர் இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் இசக்கியப்பன் (வயது 38), தோவாளை பூ மார்க்கெட்டில் டெம்போ ஒட்டி வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் துவரங்காட்டில் வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தாய் தந்தையரை பார்த்து ஆசீர்வாதம் வாங்கு வதற்காக இசக்கியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அவ்வையார் அம்மன் கோவில் பகுதி யில் இசக்கியப்பன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இசக்கியப்பன் மீது மோதியது. இதில் இசக்கியப்பன் தூக்கி வீசப்பட்டார்.
தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்த அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.சிறிது நேரத்தில் இசக்கியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணமாக கிடந்த இசக்கியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இசக்கியப் பனின் உறவினர் குமார் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சோனைசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரியில் படிக்கும் சகோதரியை பார்க்க தந்தையுடன் வந்த போது விபத்தில் பலியான சோகம்
- டிரைவர் மீது போலீசார் வழக்கு
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை இறச்சகுளம் சாஸ்தா நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் ஓட்டிச் சென்றார். பெரு விளையை சேர்ந்த பத்ம குமார் கண்டக்டராக பணி யாற்றினார். பஸ்சில் 50- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோர கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் மற்றும் ஆட்டோ மீது பஸ் அடுத்தடுத்து மோதியது.
இதையடுத்து பொது மக்கள் சிதறி ஓடினார்கள்.அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (வயது 46) தனது மகள் மகராசி (23)யுடன் வந்தார். அவர்கள் மீதும் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியது. இதில் அவர்கள் இருவ ரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகராசி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். தன் கண் முன்பு மகள் இறந்ததை பார்த்து ஜெயபால் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். மகராசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் சொக்கலிங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயபாலின் 3-வது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவரை பார்ப்ப தற்காக தனது 2-வது மகள் மகராசியுடன் ஜெயபால் வந்துள்ளார். அப்போது தான் விபத்தில் சிக்கி மகராசி பலியாகி உள்ளார்.
சகோதரியை பார்க்க வந்த இடத்தில் மகராசி பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படு த்தி உள்ளது. பலியான மகராசியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்