என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பி.எஸ்.என்.எல்."
- பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.
- 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.
சென்னை:
பி.எஸ்.என்.எல். நிறுவன தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் "சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை" மற்றும் இண்ட்ராநெட் டெலிவிஷன் என்ற இரண்டு புதிய சேவையை பரிசோதனை அடிப்படையில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை ரோமிங் சேவையை பெற பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்கள் http:/portal.bsnl.in/ftth/wigiroming என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொண்டு தங்களின் வெளியூர் பயணங்களின் போது இணைய தளத்தில் இணைந்திருக்க முடியும்.
இந்த சேவையை பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.
இதற்கான டேட்டா தரவுகள் வாடிக்கையாளர்களின் தற்போதைய தேர்ந்து எடுக்கப்பட்ட திட்டத்தில் இருந்தே கழிக்கப்படும். வை-பை ரோமிங் சேவைக்கு தனியாக கட்டணம் கிடையாது.
இண்ட்ராநெட் பைபர் டெலிவிஷன் சேவையை ஆண்ட்ராய்டு-10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் டி.வி.யில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.
மேலும் ஒரு சலுகையாக இந்த மாதம் 24-ந்தேதி வரை ரூ.500 மற்றும் அதற்கு அதிகமாக ரீசார்ஜ் செய்யும் பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 24 நாட்கள் செல்லுபடியாகத்தக்க 24 ஜி.பி. டேடா கூடுதலாக வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
- பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது.
- அடுத்த மாதம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும்.
சென்னை:
பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
தனியார் செல்போன் நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. 4ஜி சேவையையே வழங்கி நீண்ட நாள் ஆகி விட்டது.
நிதிப்பற்றாக்குறை, ஆள்பற்றாகுறை உள்பட பல்வேறு காரணங்களால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழகத்தில் தரம் உயர்த்து வதை தாமதப்படுத்தியதாக வும் தற்போது 4ஜி அலை வரிசையை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் அடுத்த மாதம் (ஜூன்) சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
மின்வெட்டு காரணமாக தடை ஏற்பட்டதாகவும் நெட்வொர்க்கை சீரமைக்க கணினியை மறுதொடக்கம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று பிற்பகலுக்குள் நிலைமை சீரடையும் என் றும் தெரிவித்தனர்.
- சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
- மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 91 மற்றும் ரூ. 288 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் வேலிடிட்டி எதுவும் வழங்கப்படவில்லை.
இரண்டு சலுகைகளும் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. எனினும், இவை சென்னை வட்டாரத்திற்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கிறது. அந்த வகையில், இந்த சலுகைகள் மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.
பி.எஸ்.என்.எல். ரூ. 91 சலுகையில் 600 எம்.பி. டேட்டா, 700 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. அந்த வகையில், பயனர்கள் ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையை கொண்டு இந்த சலுகையை ரிசார்ஜ் செய்ய வேண்டும்.
பி.எஸ்.என்.எல். ரூ. 288 சலுகையில் 60 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதன்பிறகு டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி. என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகை தினமும் அதிகளவு டேட்டா எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்ற ஒன்று ஆகும்.
- இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
- இரு தரப்பினருக்கும் தைரியம் வரவழைக்கும் முயற்சி என மேலாளர் கூறினார்
மலைமாநிலம் எனப்படும் வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பில் மழை, வெயில், பனி என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் மலைச்சரிவுகளால் பயணம் தடைபடாத வகையில் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன.
அந்த சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.
கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் அங்கு பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.
இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இயந்திர கோளாறினால் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL) ஒரு குழாய் வழியாக அந்த சுரங்கத்திற்குள் ஒரு தரைவழி தொலைபேசி சாதனத்தை (landline instrument) அனுப்ப தயார் நிலையில் உள்ளது. அதற்கு வேண்டிய தொலைத்தொடர்பு லைன்களை அமைக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"இந்த சாதனத்தின் மூலம் சிக்கி கொண்டுள்ள பணியாளர்கள், வெளியே கவலையுடன் உள்ள அவர்களின் குடும்பத்தினருடன் பேசி கொள்ள முடியும். இது இரு தரப்பினருக்கும் ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கும்" என அம்மாவட்ட பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர் (DGM) ராகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.
பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த மீட்பு நடவடிக்கையை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி துரிதப்படுத்தியுள்ளார்.
- பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.
- இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பால. சந்திரசேனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போதைய பி.எஸ்.என்.எல். இணையதளத்தின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவை பெறுவதற்கு தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி மற்றும் 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள், சிறப்பு மேளா நடைபெறும் இடங்கள் மற்றும் பி.எஸ்.என். எல். சில்லறை வணிகர்களிடம் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம்.
பி.எஸ். என்.எல் பைபர் இன்டர்நெட் புகார்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
தஞ்சை மாவட்டத்தில் வெகுவிரைவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைகள் முழு அளவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.
- விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கோவை வணிக பொது மேலாளர் பால்வண்ணன் கூறியுள்ளதாவது:-
திருப்பூர், கோவை வர்த்தக பகுதிகளில் சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்., சேவைகளை விற்பனை செய்வதற்கு, நேரடி விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.டெலிகாம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எப்.எம்.சி.ஜி., (FMCG) எனும் வேகமாக விற்கக் கூடிய, நுகர்வோர் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனங்கள், விநியோகஸ்தராக 3 வருட அனுபவம் கொண்டிருப்பதுமுக்கியம்.
விருப்பமுள்ள நிறுவனங்கள், வரும் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 89034 18128 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- அசல் அடையாள ஆவணங்களைக் காண்பித்து பின்வரும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- 75 நாட்களுக்கு ரூ.775 (ஜிஎஸ்டியுடன்) செலுத்தினால் போதுமானதாகும்.
திருப்பூர்,ஆக.28-
திருப்பூரில் நாளை29, நாளை மறுநாள் 30 -ந் தேதிகளில் பி.எஸ்.என்.எஸ். சிறப்பு மேளா நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் பி.எஸ்.என்.எல்.துணை பொது மேலாளா் பி.உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, பி.எஸ்.என்.எல்.நிறுவனம் சாா்பில் செல்போன் மற்றும் அதிவேக இணைய (பைபா்) சேவையில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி நாளை 29,30-ந்தேதிகளில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் தங்களது அசல் அடையாள ஆவணங்களைக் காண்பித்து பின்வரும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் ரூ.275-க்கு அதிவேக இன்டா்நெட் ப்ரீடம் எனும் குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சேவையில் மாதம் ரூ.449 அல்லது ரூ.599 திட்டத்தில் இணைப்பு பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாட்களுக்கு ரூ.275 மற்றும் ஜிஎஸ்டி. செலுத்தினால் போதுமானது.ஓ.டி.டி.தளத்துடன் கூடிய ரூ.999 திட்டத்தில் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாட்களுக்கு ரூ.775 (ஜிஎஸ்டியுடன்) செலுத்தினால் போதுமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது.
- இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பி.எஸ்.என்.எல். பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும். அதன்படி பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.150 ரிசார்ஜில் ஃபுல் டாக்டைம் பெறலாம்.
விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த சலுகை மிக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும். இது பற்றி வெளியாகி இருக்கும் அறிவிக்கையின் படி ஃபுல் டாக்டைம் சலுகை ஆகஸ்ட் 15, 2022 துவங்கி ஆகஸ்ட் 21, 2022 வரை வழங்கப்படும். முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி கொண்ட புது சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பின் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்பட்டு விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.
இவை தவிர பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
- இந்த சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஆயத்தமாகி உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புது சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
புதிய பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த போதும் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைந்து விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.
இதுதவிர ரூ. 2 ஆயிரத்து 022 விலை பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகையை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.
மற்ற சலுகைகள்:
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 022 விலை சலுகை மட்டும் இன்றி நீண்ட வேலிடிட்டி வழங்கும் இதர சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது.
மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.
- ஏலத்தில் அதானி குழுமமும் கலந்து கொண்டு 5ஜி அலைக்கற்றைகளை விலைக்கு வாங்கியது.
மத்திய தொலைத்தொடர்ந்து துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 88 ஆயிரத்து 078 கோடி செலவில் விலைக்கு வாங்கியது.
ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை ரூ. 43 ஆயிரத்து 084 கோடி கொடுத்து வாங்கியது. வோடபோன் ஐடியா நிறுவனம் 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் 2023 முதல் 5ஜி சேவையை வழங்கும் என மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார். மத்திய டெலிமேடிக்ஸ் துறை சார்பில் NSA கோர் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் தயார் நிலைக்கு வந்து விடும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் வரை சோதனை நடைபெற இருக்கிறது.
"அடுத்த ஆண்டு வார்ரில் இந்திய 5ஜி ஸ்டாக் தயார் நிலைக்கு வந்து விடும். அப்போது பி.எஸ்.என்.எல். மூலம் 5ஜி சேவைகள் வழங்கும் பணிகள் துவங்கி விடும்," என மத்திய மந்திரி மேலும் தெரிவித்தார்.
- தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
- புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது.
தென்காசி:
தென்காசி மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர் திருமண மண்டபத்தில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. துணைத்தலைவர் அஹமத் அலி தலைமை தாங்கினார். துரைராஜ் இறைவணக்கம் பாடினார்.
செயலாளர் செல்லப்பா வரவேற்றார். பொருளாளர் வேலாயுதம் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். விழாவில் சங்க மூத்த அதிகாரி கணபதி சுப்பிரமணியனுக்கு 80 - வயது நிறைவடைந்ததையடுத்து அவரை, அஹமத் அலி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் சுப்பிரமணியனின் கடந்த கால நிர்வாக திறமைகளையும், சேவைகளையும் நிர்வாகிகள் செல்லப்பா, வேலாயுதம், கணேசன், கிட்டு ஆகியோர் பாராட்டி பேசினர்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது. இதில் தலைவராக அஹமத் அலி, ஆலோசகராக வேலாயுதம், செயலாளராக செல்லப்பா, பொருளாளராக சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.விழாவில் ஏராளமான உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.
- நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர்.
அவினாசி,
தமிழகம் மற்றும் கேரளாவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனது வாடிக்கையாளர் சேவை பிரிவை, கார்வி டிஜி கனெக்ட் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்திருந்தது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், இரு மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையம், 3 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக வாடிக்கையாளர் சேவை பிரிவில் 51 பேர், கேரள பிரிவில், 49 பேர் என சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர் சேவை மையம் மூடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தினர் கூறுகையில், வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தினர் நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்