search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூதப்பாண்டி"

    • செல்போன் பார்த்ததை தாயார் திட்டியதால் பரிதாபம்
    • காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அருகே உள்ள மேல ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவப்பிள்ளை. இவரது மகள் நிலா (வயது18).

    இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் நிலா கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் அவர் நள்ளிரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அவரது தாயார் கண்டித்தார். இந்த நிலையில் இன்று காலை நிலா வீட்டின் பின்பகுதியில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், நிலா தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நிலாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே ஈசாந்திமங்கலம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). அ.தி.மு.க. பிரமுகர்.தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    தற்போது மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வின் பெர்னால்டு (35), பிரேம் (22), மனோசிங் (24) ஆகிய 3 பேரும் நாவல் காடு பகுதியில் இருந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்கள். கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் செல்வின் பெர்னால்டு, பிரேம், மனோசிங் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் செல்வின் பெர்னால்டு, பிரேம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாக உள்ள மனோசிங்கை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். மணிகண்டனை தாக்கி யதற்கான காரணம் என்ன என்பது குறித்து கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில், வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் நாளை (21-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதி புரம், அனந்த நாடார்குடி. புத்தேரி, இறச்சக்குளம், பூதப்பாண்டி, கீரிப்பாறை, தடிக்கா ரன்கோணம், மாறாமலை, பால்குளம், அவ்வை யாரம்மன் கோவில், கனகமூலம் குடியிருப்பு, சீதப்பால், கடுக்கரை, காட்டுபுதூர், அருமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஷோபா (வயது 16). இவர் தற்போது பூதப்பாண்டி அருகே துவரங்காட்டில் உள்ள பாட்டி கமலி வீட்டில் வசித்து வந்தார். நேற்று கமலி வீட்டிலிருந்து தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ஷோபா மட்டும் இருந்தார்.

    மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கமலி, ஷோபாவை அழைத்தார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷோபா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலி கதறி அழுதார். பின்னர் இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.தூக்கில் பிணமாக தொங்கிய ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஷோபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விளையாடச் சென்ற 7-ம் வகுப்பு மாணவன் வீடு திரும்பவில்லை.
    • 2 நாட்களுக்கு பிறகு ஓரு குளத்தில் பிணமாக மிதந்தான்.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜிபு. இவரது மகன் ஆதில் (வயது 12).

    7-ம் வகுப்பு மாணவனான இவன், கடந்த மே மாதம் குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். மே 6-ந் தேதி வீட்டில் இருந்து விளையாடச் சென்ற அவன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு மணத்திட்டை பகுதியில் உள்ள ஓரு குளத்தில் முகம து ஆதில் பிணமாக மிதந்தான். அவன் எப்படி இறந்தான்? என்பது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தாமதமானதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கேரள முதல்-மந்திரி பிணராய் விஜயனுக்கு, மாணவனி ன் தந்தை நிஜிபு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பிணராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆதில் முகமது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை விரைந்து கைது செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் முகமது ஆதில் மரணம் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சிஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கோரிக்கை
    • இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நாகர்கோவில் நாகராஜா கோவில், கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி கோவில், வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோவில், பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இக்கோவில்களின் தேர் ஓடும் வீதிகளில் உள்ள மின் வயர்களை புதைவடங்களாக மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • கஞ்சா செடி எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வரு கிறார்கள்.

    தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.நேற்றும் கோட்டார், வடசேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் பூதப் பாண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்ப டும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மூன்று பேரை பிடித்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய் தனர். மேலும் கஞ்சா செடி வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    பிடிபட்ட 3 பேரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கஞ்சா செடி எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி எட்டாமடை குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கட்டிட தொழிலாளி (வயது 37). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக செல்வராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்வராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      நாகர்கோவில்:

      பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ் (வயது21).

      இவர் திடல் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரி யில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுபிதா கிரேஸ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

      இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

      பின்னர் மேல் சிகிச்சை க்காக சுபிதா கிரேஸ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா கிரேஸ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

      இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். முதல் கட்ட விசாரணை யில் மாணவி சுபிதா கிரேஸ் கல்வி கட்டணம் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது.

      இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

      சுபிதாகிரேஸ் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.இதை யடுத்து உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

      • பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரிடம் விசாரணை
      • பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற விவரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும்.

      நாகர்கோவில்:

      ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் பகுதியில் ஏராளமான செங்கல் சூளை உள்ளது.இங்கு வட மாநில தொழிலா ளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

      திடல் பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கைகலப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். இது பற்றி பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் உடலில் சில காயங்கள் இருந்தது.

      எனவே அவர் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      பிணமாக கிடந்த வாலிப ரடன் தங்கி இருந்தே 10 வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.பிணமாக கிடந்தவர் கொலை செய்யப் பட்டாரா? என்ற விவரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும்.

      இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

      • திட்டுவிளை-துவரங்காடு பகுதியில் நடந்த சாலை விபத்தில் அண்ணன்- தங்கை இருவரும் பலியானார்கள்.
      • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      நாகர்கோவில்:

      பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூர் பணிக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26), ஐ.டி.ஐ. படித்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள மிட்டாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.


      அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (22). இவர் நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ராஜேஸ்வரியும், மணிகண்டனும் அண்ணன் தங்கை உறவு முறை ஆகும். இதனால் தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக வேலைக்கு வருவது வழக்கம்.

      நேற்று காலையில் வழக்கம் போல் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து கொண்டிருந்தனர். திட்டுவிளை-துவரங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று மோதி மணிகண்டன் ராஜேஸ்வரி இருவரும் பலியானார்கள்.

      பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மணிகண்டன், ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த கார் டிரைவர் முத்துக்குமார் (25) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


      விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மணிகண்டன், ராஜேஸ்வரி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த வேன் அதிவேகமாக வந்த இவர்கள் மீது மோதி உள்ளது.

      இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இவர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகி இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

      ×