search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல்"

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    • வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
    • தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோ ரூ.10 குறைந்தது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும் என விளக்கினார்.
    • வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும்?

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த காளி ஊராட்சி அஞ்சல் நிலையம் அருகே 'ஓய்வுபெற்ற ஆசிரியர் காவிரி செல்லையா எழுதிய, பெருமதிப்பிற்குரிய மாணவ மணிகளே, பெற்றோர்களே என்ற தலைப்பில் 2 நூல்கள் வெளியியிட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி, சமூக ஆர்வலர் சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் காந்தி வரவேற்றார்.

    இதில் மாணவ-மாணவிகள் என்கிற நூலில், இவர்கள் - எப்படி படிக்க வேண்டும், எப்படி வாழவேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என விளக்கி உள்ளார்.

    அடுத்து, பெற்றோர்கள் என்கிற நூலில், பெற்றோர்கள், எப்படி, தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும், எப்படி படிக்க வைக்க வேண்டும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாய் எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபட எழுதி உள்ளார்.

    பின்னர் குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செயல் திட்ட குழு உறுப்பினருமான கல்யாணம் ஆசிரியர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    இதனை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி சார்பாக மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் செல்லத்துரை, இளமுருகச் செல்வன், வெண்மணி அழகன், உலக தமிழ் கழகம் மன்னர் மன்னன், நமச்சிவா யபுரம் ஊராட்சி தலைவர் நெப்போலியன், வி.சி.க. நெறியாளர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், உள்ளீட்ட ஏராளமான ஆசிரி யர்களும், மானவர்களும், ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் புலவர் நூல் ஆசிரியர்காவிரி செல்லையா நன்றி கூறினார்.

    • திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்று அரியலூரில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது
    • திருக்குறல் கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

    அரியலூர், 

    அரியலூரில் உலக திருக்குறல் கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் அறி முகம் மற்றும் ஆலோ சனைக் கூட்டம் நடைபெ ற்றது.கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்து க்கும், அதே போல் சிதம்பர த்தில் இருந்து ஜெயங்கொ ண்டம், அரியலூர், பெரம்ப லூர் வழியாக சேலத்துக்கும் புதிய ெரயில் பாதை அமை க்க வேண்டும்.

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அதற்கு தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திருக்குறளை உலக பொது நூலாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்து க்கு மத்திய, மாநில அரசுகள் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப ட்டன.

    கூட்டத்துக்கு, அந்த கூட்டமைப்பின் அரியலூர் மாவட்ட துணை தலைவர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார்/ அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் ஞானமூர்த்தி, பொதுச் செயலர் ஆதிலிங்கம், மகளிர் அணிச் செயலர் சாந்தி, அறக்கட்டளை தலை வர் தமிழரிமா சம்பத் மற்றும் கடலூர், பெரம்ப லூர், தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை மாவட்ட தலைவர்கள் கலந்து கொண் டனர்.

    முன்னதாக மண்டலத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் மாவட்டத் தலைவர் சின்ன துரை நன்றி தெரிவித்தார்.

    • ‘வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை சட்டக்கல்லூரி அருகில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்தில் நீலம் பதிப்பகத் தின் சார்பில் தி.லஜபதி ராயின் வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழா வில் வழக்கறிஞர் ச.ராஜ சேகர் வரவேற்றார்.

    நீலம் பதிப்பகம் வாசுகி பாஸ்கர் தொடக்க உரையாற் றினார். புதுச்சேரி மொழியி யல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்கு நர் பக்தவச்சல பாரதி நூலை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார்.

    வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நூல் குறித்து பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல் கான், வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் உரை யாற்றினர்.

    முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் நூல் ஆய்வுரை யும், நூலாசிரியர் தி.லஜபதி ராய் ஏற்புரையும் ஆற்றினர். விழாவில் திரளான தமிழ் ஆர்வலர்கள், நூல் ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • இன்றைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டிருக்கிறது என நூலக இயக்குனர் பேசினார்.
    • சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ நினைவு கிளை நூலகத்தில் நூலகர் தின விழாவும், 'தொல்காப்பியச்செம்மல் தமிழண்ணலின் 95- வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

    நூலகர் அகிலா வரவேற் றார். சிறப்பு விருந்தி னராக புதுக்கோட்டை மாவட்ட ஞானாலயா ஆய்வு நூலகத்தின் இயக்குநர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் கிளை நூலகர் செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நூலக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

    நெற்குப்பையில் பிறந்த மும்மூர்த்திகளான அறிஞர் சோமலெ, தமிழண்ணல், சம்பந்தம் ஆகியோர் தமிழ் மொழி பற்றாளர்களாகவும், சமூக சிந்தனை உடைய வர்களாகவும், கல்விக்காக தங்கள் வாழ்நாள் முழுவ தையும் அர்ப்பணித்ததோடு பெரும் புரவலர்களாகவும் வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது இந்நேரத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கின்றேன். மேலும் இன்றைய இளைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டி ருக்கிறார்கள்.

    இதை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. பெற்றோர்களாகிய நாம் என்னதான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாலும் உலக அறிவு சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு வருக்கும் கற்றுத் தருவதும் அதன் மூலம் பல சாத னைகள் புரிந்திட வழிவகை செய்வதும் இந்த நூலகம் தான். எனவே மாணவர்கள் ஆகிய நீங்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு பெரிய அறிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் சமூக சிந்தனை உடையவர் களாகவும் மாற அன்றாட வாழ்வில் நீங்கள் நூலக தொடர்புடையவராக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நல் மாணவ வாசகர் களுக்கான விருதுகள் நெற்குப்பை நூலகத்தை நன்கு பயன்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

    இதில் சோமலெ சோமசுந்தரம், பேராசிரியர் விஸ்வநாதன், சிவகங்கை மாவட்ட நூலக கண்காணிப் பாளர் சு.சண்முக சுந்தரம், மாவட்ட நூலக இருப்பு சரிபாப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பங்குபெற்றனர். நிறைவாக சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    • ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுர ஆதீனம் வெளியிட்டார்.
    • தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் நூலின் விபரங்கள் குறித்து கூறினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதனிடையே உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயி லுக்கு வருகை புரிந்தார்.

    தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

    தொடர்ந்து மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் அச்சிடப்பட்ட ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட அதனை நீதிபதி மகாதேவன் பெற்றுக் கொண்டார்.ஆன்மீகப் பேரவை நிறுவனர் இராம.சேயோன் உடன் இருந்தார்.

    தொடர்ந்து கோயிலுக்கு சென்ற நிதியரசர் மகாதேவன் சுவாமி, அம்பாள், பைரவர் ஆகிய சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

    அப்போது கோயில் நந்தவனத்தில் கடந்த மாதம் யாகசாலை பூஜைக்காக பள்ளம் வெட்டிய போது கிடைத்த சாமி சிலைகள், தேவாரப் பதிகம் தாங்கி செப்பேடுகள் கோயில் பாது காப்பு அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

    அதனை நிதிபதி மகா தேவன் பார்வையிட்டார்.

    அவருக்கு தருமபுரம் ஆதீனம் அதன் விவரங்கள் குறித்து கூறினார்.

    • ‘தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
    • நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.

    நாகப்பட்டினம்:

    தனித்தமிழ் இயக்கத் தந்தை பன்மொழி அறிஞர் மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா, மறை.தாயுமானவன் எழுதிய 'தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்' நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, மறைமலை அடிகள் பிறந்த நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன். அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். விழாவில், பெரும்புலவர் பதுமனார், முனைவர் மறைமலை இலக்குவனார், மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரின்டிங் மெஷின்போன்றே இந்த கருவியினுள் பலவித நிறமிகள் கேட்ரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளன.
    • நூலுக்கு சாயமேற்றவேண்டிய அவசியமில்லை.

    திருப்பூர்,

    எம்ப்ராய்டரி பொறிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள், சந்தையில் அதிக மதிப்பு பெறுகின்றன. நவீன எம்ப்ராய்டரி எந்திரங்களை கொண்டு, பல வித வண்ணநூல், சீக்வென்ஸ், கற்களை பயன்படுத்தி ஆடைகளில் டிசைன்கள் பொறிக்கப்படுகின்றன.எம்ப்ராய்டரி மெஷினில், சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என பல வித வண்ண நூல்களை பொருத்தி, டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. ஸ்வீடன் நாட்டு நிறுவனம் எம்ப்ராய்டரி மெஷின்களில் இணைத்து பயன்படுத்தும் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

    பிரின்டிங் மெஷின்போன்றே இந்த கருவியினுள் பலவித நிறமிகள் கேட்ரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளன.ஒரேயொரு வெள்ளை நூலை மட்டும் இந்த கருவியினுள் செலுத்தி, ஆடையில் பொறிக்கவேண்டிய டிசைனை உள்ளீடு செய்தால் போதும். நுண்ணறிவு மூலம் டிசைனுக்கு ஏற்ப மெஷினுக்குள் உள்ள வண்ணங்கள்,நூலின் மீது ஸ்ப்ரே செய்யப்படுகிறது. இந்த கருவியிலிருந்து வண்ண நூல் வெளிவந்து, எம்ப்ராய்டரி மெஷினுக்குள் நுழைந்து, ஆடையில் அழகிய டிசைனை மிக நுட்பமாக பொறிக்கிறது.

    இந்த தொழில்நுட்பத்தால், நூலுக்கு சாயமேற்றவேண்டிய அவசியமில்லை. அதனால் தண்ணீர் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது. சாயக்கழிவு உருவாவது தடுக்கப்படுகிறது.பல வண்ணநூல்களை கொண்டு செல்வதற்காக எம்ப்ராய்டரி மெஷின்களில், ஏராளமான ரீல்கள் இணைக்கப்பட்டிருக்கும். புதிய கருவியை பயன்படுத்தும்போது ஒரு ரீல் மட்டுமே போதுமானது.நிட்டெக் கண்காட்சியில் இடம்பெற்ற இத்தொழில்நுட்பம் தொழில்துறையினரின் வரவேற்பை பெற்றது.

    ×