என் மலர்
நீங்கள் தேடியது "சிம்கார்டு"
- செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.
- யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், சத்திய நாராயணபுரத்தை சேர்ந்தவர் நவீன். இவர் ஒரே போட்டோவை வைத்து போலி ஆவணங்கள் மூலம் 658 சிம் கார்டுகளை வாங்கி உள்ளார்.
நவீன் ஒரே போட்டோ மூலம் 658 சிம் கார்டு வாங்கியது தொலை தொடர்பு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து தொலை தொடர்பு துறை செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.
சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சிம் கார்டுகளை வாங்கியது தெரியவந்தது.
இதேபோல் வேறு ஒரு வாலிபர் அஜித் சிங் நகர், விஷ்னா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் 150 சிம் கார்டுகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் அடையாளம் கண்டு சிம் கார்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருந்தால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் தற்போது எங்கே யாரிடம் உள்ளது.
யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர். ஒரே போட்டோ மூலம் வாலிபர் ஒருவர் 658 சிம் கார்டுகள் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
- குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.
கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.
இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
- மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவிவந்தது
- திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.
மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவி வந்தது
இந்த திட்டத்தின் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இது ஒரு முறை அல்லது வருடாந்திர கட்டணமாகவும் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டும், மேலும் இந்த திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ட்ரை நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
பல சிம்கள் மற்றும் தனி சிம்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு TRAI மூலம் கட்டணம் விதிக்கப்படும் என்ற செய்தி தவறானது. இத்தைய ஆதாரமற்ற மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்த மட்டுமே உதவுகிறது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.
— TRAI (@TRAI) June 14, 2024
- புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம்.
- அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
புதிய தொலைத் தொடர்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதி தி ஒப்புதலை பெற்றது.
138 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெலிகிராம் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறைவேற்றப்படுகிறது. இந்த புதிய தொலைத்தொடர்பு சட்டமானது அவசர காலங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்குகளின் கட்டுப்பாட்டை ஏற்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் விதிகளை உள்ளடக்கியது.
2023-ன் தொலைத் தொடர்பு சட்டம் இந்திய தந்தி சட்டம் (1885) மற்றும் 1933-ன் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் ஆகிய இரண்டையும் மாற்றும் புதிய சட்டம் தொலைத் தொடர்பு துறையில் கணிசமான தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு வரும்.
1, 2, 10 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் உள்பட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டப்பிரிவுகள் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 வரையிலான விதிகள் நடைமுறைக்கு வரும்.
ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் ஒதுக்கீடு குறிப்பிட்ட விதிமீறல்களை தீர்ப்பது மற்றும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 1997-ல் திருத்தங்கள் ஆகியவை நாளை முதல் நடைமுறைக்கு வராது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களை மேம்படுத்துவதற்கும் தொலைத் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள், பாதுகாப்பு போன்றவற்றிற்கான தர நிலைகள் அமைக்கும் அதிகாரங்ளை இந்த சட்டம் வகுத்துள்ளது.
இந்த சட்டத்தில் புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
- சாலை ஓரங்களில் சிம்கார்டுகளை விற்பதை தடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் தலைவர் சேக்பரீத், செயலாளர் சேக்பரீத் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அவர்கள் தெரிவிக்கை யில் நாளுக்குநாள் அதி கரித்து வரும் செல்போன் உபயோகத்தில் சிம்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கார்டுகளை நிறுவனங்களில் திண்டுக்கல் மாவட்ட டிஸ்டிரிபியூடர்கள் விற்பனையை மட்டுமே நோக்கமாக கருதி முறை யின்றி சாலையோரங்களில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் குடைபோட்டு விற்பனை செய்து வரு கின்றனர்.
இதை பொதுமக்கள் வாங்கி 1 மாதம் மட்டுமே உபயோகித்து விட்டு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறிகின்றனர். இதனை ஒருசிலர் எடுத்து தவறான செயலுக்கு பயன்படுத்துவதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேறு மாநில நபர்கள் குறிப்பாக வடமாநிலத்தவர் எந்தவித ஆவணங்களையும் காட்டாமல் சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இதுபோன்ற விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனர்.