search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடை"

    • உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.
    • 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகரின் நுழைவுப்பகுதியில் உடுமலை- பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வர வில்லை. இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் காரணமாக ஓடை தூர்வாரப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி உள்ளது. அத்துடன் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வருகிறது. தூர்வார வேண்டும் இதனால் ஓடை முழுவதும் செடிகள், புற்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. அவை அருகில் வசித்து வருகின்ற பொதுமக்களை தாக்கியும் வருகிறது. ஏற்கனவே சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வரும் சூழலில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அதில் தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இது குறித்து அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தங்கம்மாள் ஓடையை முழுமையாக தூர்வாரி அதன் மண்ணை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை
    • பறக்கின்கால் கால்வாய் பாறைக்காய் மடை, கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் மற்றும் வாகனங்கள் அதிகமாக சென்று வரும் முக்கிய பகுதியான பறக்கின்கால் கால்வாய் பாறைக்காய் மடை, கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் உள்ளது. இந்த கழிவுநீர் ஓடையானது பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஓடை இருப்பது கூட தெரியாத அளவிற்கு செடி, மரங்கள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து ஓடையே தெரியாத அளவுகாணப்படுகிறது.

    இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பலமுறை கோரிக்கைகள் வைத்த பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வரும் பகுதியில் உள்ள இந்த கழிவு நீர் ஓடையால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருவதால் இன்றுஎம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ நேரடியாக அந்த இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து உடனடியாக கழிவுநீர் ஓடையை தூர்வாரி சுத்தம் செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே ஓடையில் மூழ்கி கல்லூரி மாணவி இறந்தார்.
    • உலகாணி கிராம நிர்வாக அலுவலர் \வடிவேலு கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணியை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது19).இவர் மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை முத்துலட்சுமி அதே பகுதியில் உள்ள ஓடையில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

    இதனை கண்ட பொதுமக்கள் கூடக் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி யின் உறவினர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த முத்துலட்சுமியின் உடலை மீட்டனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அவரது உடலை எரித்து விட்டனர். இதுபற்றி மாணவி முத்துலட்சுமியின் சித்தப்பா தகவல் தெரிந்து விசாரிக்க நேரில் வந்துள்ளார். அப்போது அவர் முத்துலட்சுமியின் உடல் எரிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டில் தனிநபராக சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி உலகாணி கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் மாணவியின் உடலை எறித்த அவரது தந்தை ஆண்டி, தாத்தா முருகன் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், சுந்தரம் ஆகிய 4 பேர் மீது கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×