என் மலர்
நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள்"
- சாலையில் சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- நடைபாதை சிமெண்டு சிலாப்புகளும் உடைந்து போய் கிடக்கிறது.
எம்.ஜி.ரோடு:
பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுபோன்ற சாலைகளை சரி செய்யாமல் மாநகராட்சி இருந்து வருகிறது. தார் சாலை அமைப்பதால், மழை உள்ளிட்ட காரணங்களால் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வருவதால், மாநகராட்சி சார்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அந்த கான்கிரீட் சாலைகளும் குண்டும், குழியுமாக மாறிவருகிறது. அதுபோல், எம்.ஜி.ரோடு அருகே உள்ள கருடாமால் ரோடும், கான்கிரீட் சாலையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த கான்கிரீட் சாலையும் தற்போது மோசமாக மாறி உள்ளது.
அந்த சாலை தற்போது கரடு, முரடாகவும், ஜல்லி கற்களாகவும், குழியாகவும் மாறிபோய் உள்ளது. ஒரு இடத்தில் மட்டும் அவ்வாறு இல்லை. அந்த சாலை முழுவதுமே ஜல்லி கற்களாகவும், குழிகள் விழுந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் விதமாக அபாயகரமாகவும் காணப்படுகிறது.
அந்த சாலையில் சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைவது நிச்சயம்.
சாலையோரம் போடப்பட்டுள்ள நடைபாதை சிமெண்டு சிலாப்புகளும் உடைந்து போய் கிடக்கிறது. இதனால் பாதசாரிகளால் நடந்து கூட செல்ல முடியவில்லை.
சில வளர்ச்சி பணிகளுக்காக கான்கிரீட் ரோட்டில் குழிகள் தோண்டியதால், இவ்வாறு மாறி இருப்பதாகவும், இதை சீரமைக்க மாநகராட்சியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே ஜல்லி கற்களாக காட்சி அளிக்கும் கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
- பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
ஜி.எஸ்படி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுவதால், மேற்படி பணி நடைபெறும் 2004 2025 முதல் 2204.2025 வரை மூன்று நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
போக்குவரத்து மாற்றம்:
தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நத்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
மேலும் காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையிலிருந்து ஒரு வழி பாதையாக இருக்கும். அண்ணாசாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை. மேலும் அண்ணாசாலையில் இருந்து செனடாப் 1வது தெருவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் செனடாப் 1வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.
கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும்.
அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு. அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சீரான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
- ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகை யில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்து வது தொடர்பான அரசா ணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.
கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களிடம் புதிய போக்கு வரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார் கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேக மாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் .
அதே நேரத்தில் அதி வேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளி டம் எடுத்துக் கூறப்பட்டது.
உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப் படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட் பட்ட குழந்தைகளை பாது காப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங் களுக்கு வழி விடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது குறித்து, திருப்பூர் மாவட்ட போலீசார் கூறுகையில் 'போக்குவரத்து விதிமுறை மீறி பயணிக்கும் வாகன ஓட்டிகளை சோதனைச்சாவடிகளில் பிடித்து, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட அபராத கட்டணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூரில் இன்னமும் புதிய கட்டணப்படி யாருக்கும் அபராதம் விதிக்கவில்லை. 'சாப்ட்வேர் அப்டேட்' செய்து விரிவான அறிவுறுத்தல் வந்த பின் அறிவிப்பு வெளியிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.விதிமுறை பின்பற்றினால் அபராதம் குறித்த அச்சம் வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லை என்றனர்.
- தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
- நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.
உடுமலை:
உடுமலை நகரப் பகுதியில் உள்ள ரோடுகளில் மழை நீர் தேக்கம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழிமாக மாறி காணப்படுகின்றன.பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புஅடைந்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. அதே போல் நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் ஒரு சில பகுதிகளில் உடைந்து தாழ்வாகவும் பெரும்பாலான இடங்களில் உயரமாகும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு , தளிரோடு என நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மட்டுமின்றி நகராட்சி ரோடுகளும் பரிதாப நிலைக்கு மாறி உள்ளன.நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர் ரோடு, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு ,வெங்கடகிருஷ்ணா ரோடு, அனுஷம் நகர் ரோடு என நகராட்சி பராமரிப்பில் உள்ள பெரும்பாலான ரோடுகளும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பராமரிக்கவும் இல்லாமல் சேதமடைந்துள்ளன.இந்த ரோடுகளால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை உடுமலை, மடத்துக்குளம், புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ள ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரையில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
- குண்டும், குழியுமான ரோடுகளை சீரமைப்பது எப்போது? என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை
கோவில் மாநகரம், தூங்கா நகரம், கூடல் மாநகர் என்றழைக்கப்படும் மாமதுரையில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள ரோடுகள் சீரான போக்குவரத்திற்கு வழியின்றி சேதமடைந்து காணப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மதுரையில் மழை காரணமாக முக்கிய சாலைகள், ரோடுகள் மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கி றது.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளி லும் ரோடுகள் மற்றும் வீதிகளில் பொதுமக்கள் வாக னங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களை மிரட்டி வருகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்று பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். மதுரை மற்றும் விரி வாக்கப் பகுதி யில் உள்ள சேதமடைந்த சாலைகளை உட னடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீப நாட்களாக போலீசாரின் வாகன சோதனை மற்றும் கெடுபிடிகள் மதுரையில் அதிகரித்துள்ளன. மதுரை நகர் பகுதிகளை பொறுத்தவரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், நெல்பேட்டை, காளவாசல், பழங்காநத்தம், புதூர், தெப்பக்குளம், தெற்கு வாசல், வில்லாபுரம், செல்லூர், பி.பி.குளம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் வாகன நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும்.
இந்த பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் மணிக்கு 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க முடியும். ஆனாலும் இந்த பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரோடுகளில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை சுற்றி வளைத்து அபராதம் போடுவதை பெரிய சாதனையாக நினைத்து செயல்பட்டு வருகிறார்கள். பல சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு வழியின்றி கிடக்கும் நிலையில் கூட அதன் அருகே நின்று வாகனங்களை வழிமறித்து அபராதம் விதிப்பதை முக்கிய கடமையாக எண்ணி போலீசார் பணி செய்து வருகிறார்கள். இதனால் போலீசாரின் அபராத ஜாக்பாட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 15-ந் தேதி வரை மதுரை யில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் சாலை விதிகளை மீறும் நபர் மீதான அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் ரூ.10 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். அதிவேகம் மற்றும் அதிக நபர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் சாரை, சாரையாக இருசக்கர வாகனங்களை போலீசார் வழிமறித்து அபராதங்களை விதிப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 11 மாதத்தில் மட்டும் மதுரையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 338 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 831 பேர் அதிவேகமாக சென்றதாக வும், 1,407 பேர் குடிபோதையில் வாகனத்தை ஒட்டியதாகவும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரையின் முக்கிய சாலையான நேதாஜி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கும் காட்சி.
7 ஆயிரத்து 71 பேர் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாகவும், 4 ஆயிரத்து 960 பேர் அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக 15 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி மற்றும் தியாகி இமானுவேல்சேகரன், மருது பாண்டியர், தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக சென்ற வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 69 ஆயிரத்து 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதத்தில் அதாவது ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 15-ந் தேதி வரை மதுரையில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 கோடியே 3 லட்சம் அபராத தொகையாக வசூலித்து மதுரை போலீசார் சாதனை படைத்துள்ளனர்.
ஆனால் மதுரையில் போக்குவரத்திற்கு தகுதி யான சாலைகள் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான். 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் டி.பி.கே. ரோடு மற்றும் மேலவாசல் பகுதியில் கூட சாலைகளில் படுகுழிகளாக மோசமாக காணப்படுகிறது.
இது தவிர பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. சாலை பள்ளங்களில் மண்ணை கொட்டி நிரப்பாமல் உரிய தார், ஜல்லி கலவைகளை போட்டு சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளமான இடங்களில் மண்ணைக் கொட்டி செல்வதால் வெயில் காலங்களில் அந்த பகுதி முழுவதும் தூசி மண்டலமாக மாறி வாகன ஓட்டிகளை பல்வேறு சிர மத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
எனவே தரமான சாலைகளை முதலில் அமைத்து கொடுத்துவிட்டு சாலை விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது அபராத வசூல் நடவடிக்கைகளை போலீசார் இறங்கலாம் என்பதும் மதுரை மக்களின் கருத்தாக உள்ளது.
எனவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்த்து தரமான சாலைகளை அமைத்துக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பது தான் மதுரை மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.
- பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோட்டகுப்பம், ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சற்று ஒய்ந்துள்ள நிலையில் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இன்று காலை 8.00 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சூரியனை பார்க்க முடியவில்லை. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.
இந்த பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர். ஊட்டியில் இருப்பது போல குளிர்ச்சியான நிலை நிலவியது. பனிப்பொழிவு காரணமாக உல்லன் ஆடைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட் டனர். இதேபோல் செஞ்சி பகுதியிலும் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது.
- சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
- ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.
மதுரை
திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.
மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறிய மழைக்கே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி 54வது வார்டு கிருஷ்ணா நகர் ஏக்டென்ஷன் வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீதி சாலை மிகவும் சிதலமடைந்துள்ளது.
சிறிய மழைக்கே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
- புதிதாக சாலை போட்ட பின்பு அதனை தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பலவஞ்சிபாளையத்தில் இருந்து கோவில் வழி செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். பலஆண்டுகளாக மோசமாக இருந்த சாலை கடந்த 5மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். அந்த நிம்மதி நிரந்தரமாக நீடிக்கவில்லை.
தற்பொழுது அந்த பகுதிகளில் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் பொக்லைன் வாகனம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,
பலவஞ்சிபாளையத்திலிருந்து கோவில்வழி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிக மிக மோசமாக இருந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக சாலை போடப்பட்டது. தற்பொழுது குடிநீர் குழாய் பாதிப்பிற்காக தோண்டப்பட்டு இருக்கிறது.
பல இடங்களில் இப்படித்தான் பணியை மேற்கொள்கின்றனர். குடிநீர் குழாய் பதிக்கும் பணியை முறையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக சாலை போட்ட பின்பு அதனை தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது உரிய முறையில் கவனம் செலுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
- புதிய ரோடு போடுவதற்காக கீறல் போடப்பட்டதாக கூறப்படுகிறது
- இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இதன் வழியாக பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், உகாயனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். இந்த நிலையில் கடந்த மாதத்தில் ரோட்டில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு கீறல் போடப்பட்டது. புதிய ரோடு போடுவதற்காக கீறல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரோட்டில் கீறல் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
விரைவில் ரோடு போடப்படும் என ரோட்டில் கீறல் போடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் ரோடு போடும் பணிகள் துவங்கவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ரோட்டை விரைவாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்த பணியாளர்கள் பொங்கல் விடுமுறைக்கு சென்றதால் ரோடு போடும் பணிகள் தாமதமானதாகவும், விரைவில் பணி துவங்கும் என தெரிவித்தனர்.
- சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர்.
- யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலை அடா்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காரமடை வழியாக ஊட்டிக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் கெத்தை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளை தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில் ஈடுபட்டனா்.
சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். இதேபோல அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்களும் இவ்வாறு புகைப்படம் எடுத்தனர்.
இதனால் யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன. யானைகள் ஆவேசப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை உணராமல் அந்த வாகன ஓட்டிகள் இவ்வாறு யானைகளை தொந்தரவு செய்து படம் பிடித்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சீர்காழியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
- விபத்தை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. தற்போது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு முதல் காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவி வருகிறது.
இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.
வாகன ஓட்டிகள் அவதி பனிப்பொழிவால் சாலையில் புகை மூட்டாக காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
காலை 8 மணி வரை வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
மேலும் நடைபயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
சிலர் பனிகுல்லா மற்றும் மப்ளர் உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.
புகையான் நோய் தாக்கம் மழை மற்றும் பனிப்பொழிவு ஆகியவை மாறி, மாறி ஏற்படுவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கம் அதிகரிக்கும் எனவும், கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.