என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227686"

    • நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
    • அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • போலீசார் விசாரணை செய்தனர்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த பிளாங்காலை பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். டெம்போ ஓட்டுநர் இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு சிவலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளார். அனில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

    இதனால் மன வருத்தத்தில் அனில்குமார் இருந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அனில் குமார் வீட்டை விட்டு சென்றுள்ளார் பின்னர் வீடு திரும்பவில்லை தனது கணவர் வேலைக்கு சென்று இருப்பதாக சுனிதா நினைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அழகிய நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. அங்கு சென்று சுனிதா பார்த்தபோது பிணமாக கிடந்தது தனது கணவர் அனில்குமார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனில்குமார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 27). இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமர், பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச் செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது.
    • வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    உடுமலை,

    உடுமலை நகரில் சிலர் தங்களது குடியிருப்பு ஒட்டிய நிலப்பகுதிகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். அங்கு மூலிகைச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், துளசி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்க்கின்றனர்.

    அதேநேரம் இடவசதி இல்லாத சிலர் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வகையில், ஐஸ்வர்யா நகரில் சிலர் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:-

    மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளையும், தோட்டத்தை பராமரிக்கச்செய்வதன் வாயிலாகஅவர்களும் உற்சாகம் அடைகின்றனர். தவிர மருத்துவ குணம் கொண்ட மூலிகைச்செடிகள் வளர்ப்பில் அதன் முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, உரமிடுவது போன்ற பணிகள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி விடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×