என் மலர்
நீங்கள் தேடியது "உடன்குடி"
- உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
- சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
உடன்குடி:
உடன்குடியில்உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் நல்ல கனமழை பொழிந்து வருகிறது.இந்த நிலையில் வறண்டு கிடக்கும் சடையனேரி கால்வாயில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயநிலங்களை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் கடல்நீர்மட்டம் புகுந்து விடாமல்தடுக்கவும், உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ேபசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அப்போது அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடிகூட்டுறவு சங்க தலைவர் அங்ஸாப் அலிபாதுஷா, உடன்குடிநகர செயலாளரும் உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், செட்டியா பத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட தி.மு.கவினர் பலர் உடனிருந்தனர்.
- உடன்குடி பகுதிகளில் பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் பனை மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து ஜே.ஜே.நகர் வழியாக திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோட்டின் கரையில் பல இடங்களில் சின்ன சின்ன பனை மரங்கள் வெட்டப்பட்டு கிடக்கின்றன. இவ்வாறு வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசுபனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும், விவசாயத்தை விருத்தி செய்ய வேண்டும், பனைமரம் வளர்ப்பதால் 100 வகையில் மக்களுக்கு பயன்தரும் என்பதை விளக்கி பனைமரங்களை வளர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்து, பனைமரம் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பனை மரங்களை ரோட்டு ஒரமாகவெட்டி போட்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று பலர் கூறுகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பனை மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அவர்களை அன்புடன் அரவணைத்து பள்ளியில் சேர்த்தல் குறித்து விரிவாக பேசினார்.
உடன்குடி:
உடன்குடியில் தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அவர்களை அன்புடன் அரவணைத்து பள்ளியில் சேர்த்தல், அரசின் திட்டங்களை அவர்களுக்கு கிடைப்பது குறித்து விரிவாக பேசினார்.உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளித் தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.இதில் தி.மு.க. நிர்வாகிகள் அன்வர்சலீம், ஹீபர், கணேசன், சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் அரிகிருஷ்ணன், முபாரக், திரவியம், மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சிறப்பாசிரியர் இம்மானுவேல் மனாசே, எங்ஸ்டன், ஜெபஸ்டின் செய்திருந்தனர்.
- கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
- 500-க்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் பரமன்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி மற்றும் திருச்செந்தூர் , ஓட்டப்பிடாரம் , ஸ்ரீவை குண்டம் ஆகிய பகுதி உள்ள மாற்று கட்சியினர் சுமார் 500-க்கு மேற்பட்டவர்கள் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
அப்போது தமிழக மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், சண்முகையா எம் . எல்.ஏ. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் தமிழக மக்களின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது.
தமிழக மக்களுக்காக அவர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் நடவடிக்கையை பார்த்து மாற்று கட்சியினர் அலை அலையாக தி.மு.க.வில் இணைந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் 40 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தூத்துக்குடி எம்.பி தொகுதி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போதுஉடன்குடி பேரூராட்சி தலைவி ஹீமைரா அஸ்ஸாப் அலி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர தி.முக. சார்பில் 7500 பேருக்கு நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.
- ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர தி.முக. சார்பில் 7500 பேருக்கு நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. உடன்குடி மேற்கு ஓன்றியத்தில் ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் பல்வேறு விடுதிகளில் உள்ள மாணவர்க ளுக்கு கல்வி உபகரணங்கள், பள்ளிச் சீருடைகள், மதிய உணவு, இனிப்புகள் வழங்கல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி கிறிஸ்தியா நகரத்தில் நவஜூவன் இல்ல மாணவர்களுக்கு ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் பரமன்குறிச்சி, தண்டுபத்து, சீர்காட்சி, நயினார்பத்து, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் நலிந்தோர்களுக்கு தையல் எந்திரம், சலவை எந்திரம், பள்ளிச் சீருடைகள், சேலைகள் வழங்கப்பட்டது.உடன்குடி நகர தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் நலிந்தோர்களுக்கு அரிசி, பள்ளிப் பைகள் வழங்கப்பட்டது. மொத்தம் 7500பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தி.மு.க.வினர் ஊர் ஊராகச் சென்று வழங்கினர். நிகழ்ச்சிகளில் உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ். முன்னாள் போருராட்சி கவுன்சிலரும் 3-வது வார்டு செயலாளருமான சலீம் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்கள் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
- செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள்.
உடன்குடி:
கார்த்திகை தீப திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள். வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சுவாமிக்கு படையல் போட்டு வழிபடுவது வழக்கம்.
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள். சில இடங்களில் பப்பாளி மரமும், சில இடங்களில் வாழை மரமும், இவைகள் கிடைக்காத இடங்களில் உயரமான கம்புகளில் குறுக்காக கம்புகளைகட்டி சுற்றி பனைமர ஒலைகளை கட்டி கோவிலுக்கு முன்பு வைத்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். இதற்காக முன்னதாக பனைஓலை சேகரிப்புபணியில் வாலிபர்கள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
- தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
- விழாவில் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமை தாங்கினார்.
சமூக சேவகரும் தனியார் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளருமான கலில் ரகுமான் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மண் வளம் பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி கூறியும் மரக்கன்றுகளை வழங்கி அதனை நடவும் செய்தார்கள். மேலும் உலக மண் வள நாளை முன்னிட்டு திருமுருகன் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் சுதா மோகன் அரசு பள்ளி மாணவர்களோடு கொண்டாட எண்ணி 100 மரக்கன்றுகளை உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும் நலிவடைந்த மாணவர்களுக்கு எழுது பொருட்களை சமூக சேவகர் ராஜா வழங்கினார். மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, மாதுளம், வெற்றிலை, பிச்சி உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கினர். விழாவில் ஆனந்தா, பாலகணேசன், ஜெய்நாத், தனியார்அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் செல்வி, யமுனா, பராசக்தி, வெர்ஜின், பிருந்தா, முத்து செல்வி மற்றும் பள்ளியின் தேசிய பசுமை படை மாணவர்கள் செய்திருந்தனர்.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதியில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
- அமைச்சர், அதிகாரிகளிடம் வாரத்தில் ஒரு நாள் கந்தபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
உடன்குடி:
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதியில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து எனது ஊர் கந்தவபுரம் நான் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள உதிர மாடன் குடியிருப்புக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் வாரத்தில் ஒரு நாள் எங்கள் ஊரிலே ரேஷன் கடை திறந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக அதிகாரிகளிடம் கலந்துரையாடல் நடத்தி வாரத்தில் ஒரு நாள் கந்தபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணை சேர்மன் மீராசிராசுதீன், உடன்குடிகிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், இளைஞரணி பாய்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.கவினர் உடன் இருந்தனர்.
- உடன்குடி வட்டார பகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
- கடந்த ஆண்டு இங்குள்ள குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதி என்பது 18 கிராம ஊராட்சி ஒரு பேரூராட்சி உள்பட பெரும் பகுதியாகும். இங்கு சுமார் 75 சதவீத பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. அதுவும் செம்மணல் நிறைந்த தேரிபகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
இங்கு ஊடுபயிராக முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு, சக்கர வள்ளி கிழங்கு, நிலக்கடலை, சப்போட்டா, மா, வாழை போன்ற விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு இங்குள்ள தாங்கைகுளம், சடையனேரி குளம், தருவைகுளம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன. திரும்பிய திசைகள் எல்லாம் தண்ணீராகவே காட்சி தெரிந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யாததால் எந்த குளமும், நிரம்பவில்லை. இப்படியே இந்த ஆண்டு மழை ஏமாற்றி விடுமோ?என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். மேலும் தண்ணீர் தேங்க கூடிய பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தற்போது விளையாட்டு மைதானம் ஆக்கி கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
இன்னும் சில இடங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களாகவும் பயன்படுத்திவிட்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,
மழை வருமா? குளங்கள் நிரம்புமா?என்பது கேள்விக்குறியாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் குளங்களை எல்லாம் முழுமையாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு குளங்கள், குட்டை கள் முழுமையாக நிரம்ப வில்லை என்றால் அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய விளை நிலங்களில் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறி போகும் என்றார்.
இதேபோல் சமூக ஆர்வலர் சிவலூர் ஜெயராஜ் கூறும்போது, இதோ வருகிறது, அதோ வருகிறது என்று அனைத்து குளங்களும், குட்டைகளும், புதியதாக உருவாக்கப்பட்ட ஊரணிகளும், மழைக்காக தண்ணீருக்காக, காத்தி ருக்கின்றது. ஆனால் இப்பகுதியில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் தான் மழை குறைந்துவிட்டது. என்று பலர் கூறுகிறார்கள்.
அதனால் தமிழக அரசு, மாவட்ட கலெக்டர், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடல் நடத்தி பல இடங்களில் வீணாக செல்லும் மழை தண்ணீரை கொண்டு வந்து உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகளை முழுமையாக நிரப்ப வேண்டும்.
சடையனேரி கால்வாய்யை நிரந்தர கால்வாயாக அறிவித்து அடிக்கடி தண்ணீர் திறந்து குளங்கள் மறறும் குட்டைகளில் தண்ணீர் தேக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். என்று கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் இனியும் மழையை நம்பி காத்திருக்காமல் இங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
- உடன்குடியில் இருந்து ஈரோடுக்கும் பல வருடங்களாக அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது.
- கோவை, ஈரோட்டிற்கு மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
உடன்குடி:
உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தொழில் நிமித்தமாக அடிக்கடி கோவை, ஈரோடு சென்று வருவார்கள்.
எனவே பொது மக்களின் வசதிக்காக உடன்குடியில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை வழியாக கோவைக்கு தினசரி மாலை 5.20 மணிக்கு அரசு விரைவு பஸ் தடம் எண் 632 இயக்கப்பட்டது. இதேபோல் மாலை 5.15 மணிக்கு உடன்குடியில் இருந்து ஈரோடுக்கும் கடந்த பல வருடங்களாக அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்து வந்தனர். கடந்த கொரோனா பரவல் தடுப்பு காரணமாக இந்த 2 அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டது.
பின்னர் அந்த பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளா கின்றனர். எனவே கோவை, ஈரோடு ஆகிய பகுதிக்கு மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகமது, ஒன்றிய பொருளாளர் பாலகணேசன் உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்.
- உடன்குடி வட்டாரத்தில் உள்ள செம்மணல் பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது.
- நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட உதிரமாடன்குடியிருப்பு, மெய்யூர், கந்தபுரம், நேசபுரம். தாங்கையூர் போன்ற செம்மணல் பகுதியில் தற்போது முழு மூச்சுடன் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பனை, தென்னை மரத்தோட்டங்களில் முருங்கையை ஊடுபயிராக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதும் மழை காலம் என்பதால் முதிர்ந்த முருங்கையில் உள்ள கிளைகளை வெட்டி விட்டு வளர்த்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர். பல இடங்களில் புதியதாக முருங்கை கம்புகளை நடவு செய்துள்ளனர்.
- 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்தினால் தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,
- மறுகால்நீர் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடன்குடி:
உடன்குடி அனல் மின் நிலைய அதிகாரிக்கு, கருமேனி ஆறு கழிமுக பகுதி விவசாயிகள் நல கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் அருகேயுள்ள எல்லப்ப நாயக்கன் குளத்தின் மறுகாலில் இருந்து வெளியேறும் உபரிநீர், அனல்மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க கால்வாய் கரையில் மணல் ஒப்பந்தகாரர்களால் சுமார் ½ பர்லாங் தூரம் 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்திலும், அனல் மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க உபரிநீர் கால்வாய் கரை 6 கி.மீ தூரத்திற்கு மிகவும் சேதமடைந்திருப்பாதாலும் குலசை தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்து,
இதன்விளைவாக உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயத்தோட்டங்கள் மற்றும் பொது மக்கள்ள்குடிநீர் ஆகியன பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. இந்தாண்டு மணிமுத்தாறு, பாபநாச மலைகளில் சரியான மழையில்லை. ஆகையினால் பாபநாச அணைநீர் மட்டம் 97 அடிதான் நிரம்பியிருக்கிறது.ஏல்லப்பநாயக்கன் குளத்து மறுகால்நீர் எளிதில் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது
எனவே எல்லப்ப நாயக்கன் குளம் மறுகா லிருந்து குலசை தருவைகுளம் வரை உபரிநீர் கால்வாயின் அனல்மின்நிலைய மதிற்சுவர் எதிர் கரையை 8 கி.மீ தூரத்திற்கு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சரிசெயய்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.