search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.எஸ்.பி."

    • 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
    • ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.

    ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.

    அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

    • பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.

    பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார். 

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
    • உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது :- தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நபர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யாத உணவுகள் உங்களுக்கு வந்திருப்பதாக கூறி, அதை திருப்பி அனுப்ப உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.மேலும் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, நீங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது. தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏ.டி.எம்.,.மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

    வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.இது போன்ற அழைப்புகள் வந்தால், நேரில் வருவதாக கூறி உடனடியாக போலீஸ் உதவியை பொதுமக்கள் நாட வேண்டும். மேலும் அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை சைபர் கிரைம் குற்றவாளிகள், உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் டேட்டாக்களை திருடுகின்றனர்.எனவே தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது.

    சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் சமூக வலைதள நட்பு வைக்க வேண்டாம்.எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டிஜிட்டல் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
    • போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காமலும், வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், ஆகியோர் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியாவை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    பல்லடம் அருகேஉள்ள பொங்கலூர் கண்டியன் கோயில் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக 5 இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகள், கொள்ளை போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தை அணுகி குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர். இதுவரை போலீசார் எவ்வித நடவடி க்கையும் எடுக்காமலும் வழக்குப்பதிவு செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து குற்றச்சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி குற்றம் நடக்கும் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொ ள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • டி.எஸ்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவருக்கு சொந்த கிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • டி.எஸ்.பி. பணியில் துணிச்சலுடனும், நேர்மையாகவும் பணியாற்றுவேன் என்றார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தை ேசர்ந்தவர் விவசாயி மாரிமுத்து-முனியம்மாள். இவர்களது மகள் பாண்டீஸ்வரி. பல் மருத்துவரான இவர் வீட்டில் இருந்தபடியே குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று போலீஸ் டி.எஸ்.பி.யாக தேர்வானார். பிறந்த கிராமத்திற்கு வந்த பாண்டீஸ்வரியை கட்டாலங்குளம் கிராம மக்கள் மேள தாளங்கள், பட்டாசு வெடித்து, பரிவட்டம் கட்டி, ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அப்போது டி. வேப்பங்குளம் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சக்திவேல் மற்றும் பலர் இருந்தனர். பாண்டீஸ்வரி கூறுகையில், கலெக்டர் ஆவதே தனது லட்சியம். இதற்காக தனது முயற்சி தொடரும். டி.எஸ்.பி. பணியில் துணிச்சலுடனும், நேர்மையாகவும் பணியாற்றுவேன் என்றார்.

    • தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்தவர்.
    • நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக பாா்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.இவருக்கு முன் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த குமரேசன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

    தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட பாா்த்திபன் குரூப் 1 தோ்வில் தோ்வாகி, வண்டலூா் தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்த பின், சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தநிலையில், தற்போது நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.இவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழத்து தெரிவித்தனா்.

    • காங்கேயம் டிஎஸ்பி.யாக சிவகங்கை மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பல்லடம் டி.எஸ்.பி .யாக ராமநாதபுரத்தில் பணியாற்றிய சவுமியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அதன்படி காங்கேயம் டிஎஸ்பி.யாக இருந்த குமரேசன் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சிவகங்கை மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பல்லடம் டி.எஸ்.பி .யாக இருந்த வெற்றிச்செல்வன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராமநாதபுரத்தில் பணியாற்றிய சவுமியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி.யாக இருந்தராகவி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், மாயவன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பிரபு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    ×