என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டி.எஸ்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவருக்கு சொந்த கிராமத்தில் வரவேற்பு
Byமாலை மலர்6 Aug 2022 1:57 PM IST
- டி.எஸ்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவருக்கு சொந்த கிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- டி.எஸ்.பி. பணியில் துணிச்சலுடனும், நேர்மையாகவும் பணியாற்றுவேன் என்றார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தை ேசர்ந்தவர் விவசாயி மாரிமுத்து-முனியம்மாள். இவர்களது மகள் பாண்டீஸ்வரி. பல் மருத்துவரான இவர் வீட்டில் இருந்தபடியே குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று போலீஸ் டி.எஸ்.பி.யாக தேர்வானார். பிறந்த கிராமத்திற்கு வந்த பாண்டீஸ்வரியை கட்டாலங்குளம் கிராம மக்கள் மேள தாளங்கள், பட்டாசு வெடித்து, பரிவட்டம் கட்டி, ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது டி. வேப்பங்குளம் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சக்திவேல் மற்றும் பலர் இருந்தனர். பாண்டீஸ்வரி கூறுகையில், கலெக்டர் ஆவதே தனது லட்சியம். இதற்காக தனது முயற்சி தொடரும். டி.எஸ்.பி. பணியில் துணிச்சலுடனும், நேர்மையாகவும் பணியாற்றுவேன் என்றார்.
Next Story
×