என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி பறிமுதல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    • சாந்திபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
    • வீட்டில் இருந்து இருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி, தோட்டாக்களை ஸ்டோர் செய்துகொள்ளும் மெகசின் மற்றும் 668 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அசாம் மாநிலத்தில் சாந்திபூர் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்க முயன்ற 2 பேரை உதல்குரி போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சாந்திபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    அந்த வீட்டில் இருந்து இருந்து ஒரு ஏகே56 துப்பாக்கி, தோட்டாக்களை ஸ்டோர் செய்துகொள்ளும் மெகசின் மற்றும் 668 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக உதல்குரி எஸ்பி புஷ்கின் ஜெயின் தெரிவித்தார்.

    விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோரை போன்று வருவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி என்ற இடத்தில் கடந்த 20-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    2 பேரும் யூடியூப் சேனலை பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்த கத்தி, துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்கள், முகமூடி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டனர்.

    இதை தொடர்ந்து கோர்ட்டு அனுமதி அளித்ததை அடுத்து போலீசார் அவர்களை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    கியூ பிரான்ச் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 2 வாலிபர்களும் புரட்சியாளராக மாறும் நோக்கத்தில் துப்பாக்கி தயாரிப்பதாகவும் விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோரை போன்று வருவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    மேலும் இந்தத் துப்பாக்கி தயாரிக்கும் செயலில் நவீன் என்பவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் இருந்ததாக கூறினர் . இதை தொடர்ந்து வாலிபர் கபிலரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் 2 நாள் போலீஸ் காவல் முடிந்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    பாலக்காடு அருகே யானைகளை சுட்டு கொன்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அமைதி பூங்கா அருகே உள்ள மணலியம்பாடம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் யானை இறந்து கிடந்தது.இதனை ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த இரு யானைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணலியம்பாடம் ஜபீர் (35), மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பிஜூ (26) ஆகியோர் இரு யானைகளையும் சுட்டு கொன்றது தெரிய வந்தது.

    அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தந்தங்களை அறுப்பதற்காக பயன்படுத்திய கட்டிங் எந்திரம், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.யானைகளை கொன்று அதன் தந்தங்களை திருட முயன்றது தெரிய வந்தது. கொல்லப்பட்ட இரு யானைகளையும் மன்னார்காடு கால்நடை டாக்டர் ஷாஜி பிரேத பரிசோதனை நடத்தினார். யானைகளை சுட்டு கொன்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    செங்கம் அருகே புள்ளிமானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    செங்கம் அருகே பிஞ்சூர் வனப்பகுதியில் புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்களை சமூக விரோதிகள் வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கம் வனத்துறை அதிகாரி ராமநாதன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் பிஞ்சூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

    அப்போது தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

    அவர்களிடம் இருந்த ஒரு சாக்குபையை வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் சுமார் 25 கிலோ புள்ளிமான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுப்பாளையம் அடிவாரம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 28), வீரானந்தல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (38) ஆகியோர் என்பதும், அவர்கள் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியை கொண்டு மான்களை வேட்டையாடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×