என் மலர்
நீங்கள் தேடியது "திருத்தணி முருகன் கோவில்"
- இன்று பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
- பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முருகன்கோவில்களில் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று (8- ந்தேதி) பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னா் பகுதி அளவு சந்திர கிரகணம் 6.19 மணியளவில் முடிவடைகிறது.
சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போதும், கோவில் நடை திறந்து பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
கிரகணத்தை யொட்டி, பரிகார பூஜைகள் முன் கூட்டியே நடத்தப்படுவதால் சூரிய, சந்திர கிரகணத்தின் போது, நடை அடைக்கப்படுவதில்லை என்று கோவில் நிா்வாகத்தினர் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பிற்பகல் 12 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் நாளை (9-ந்தேதி) காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.
- கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.
அறுபடைகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர், கேடயம் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்ற சேவா கட்டணம் செலுத்துவது வழக்கம்.
அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் கடந்த, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.
அரசு வழிகாட்டுதலுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இருமுறை திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டி இருந்தது.
இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் https://tiruttanigaimurugan, hrce.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் மட்டும் செலுத்தி வந்தனர்.
தற்போது கோவில் நிர்வாகம் கியூ ஆர்கோடு ஸ்கேன் மூலம் நன்கொடை, காணிக்கைகள் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மலைக்கோவிலில், தேர்வீதியில் நான்கு இடங்களில் கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.
இனிவரும் நாட்களில் பக்தர்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் மூலம் கியூ ஆர்கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள். நன்கொடைகள் செலுத்தலாம். இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் ஆன்லைன் மூலம் தரிசனம் டிக்கெட் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தைகிருத்திகையையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
- திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்நிலையில் தை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
தைகிருத்திகையையொட்டி இன்று அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
இதை தொடர்ந்து தங்கவேல், தங்க கீரிடம் உட்பட, வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
மேலும் காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது.
- திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். திருத்தணி கோவிலில் தற்போது மாசி கிருத்திகை விழா தொடங்கி நடந்து வருகிறது. இதனால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் கோயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரொக்கம் மற்றும் 612 கிராம் தங்கம், 10 கிலோ 487 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
- இன்று காலை பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது அங்கிருந்த சிலிண்டரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளியோதரை, பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
இதற்காக மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியே வரும் பகுதியில் பிரசாதம் தயாரிக்கும் கூடம் தனியாக உள்ளது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று காலை பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது அங்கிருந்த சிலிண்டரில் திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது.
உடனடியாக ஊழியர்கள் அனைவரும் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கியாஸ் கசிவை நிறுத்தினர்.
இதனால் திருத்தணி கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது.
- தினமும் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று 10-வது நாள் விழாவாக முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. அ காலை 4.30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- மரிக்கொழுந்து மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மாசி மாத பருவ காலத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி செடி, கொடிகள், புல், பூண்டுகளுக்கு அருளாசி வழங்குவதும், தவனக்கொழுந்து எனப்படும் மரிக்கொழுந்து மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.
அவ்வகையில் இந்தாண்டு மாசி மாத தவன உற்சவம் நேற்று முருகன் கோவில் வெகு விமரிசையாக தொடங்கியது. சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பிறகு வள்ளி தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தவன உற்சவத்தையொட்டி கோவில் முழுவதும் கண்னை கவரும் வகையில் வண்ண வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- கிருத்திகை நாட்களில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற குவிவது வழக்கம்.
- திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இதே போல் கிருத்திகை நாட்களில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற குவிவது வழக்கம்.
இந்நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. மலைக் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்ட னர்.
கடந்த 44 நாட்களில் ரூ.1 கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்து 106 உண்டியல் பணம் காணிக்கையாக கிடைத்து இருந்தது. ராஜ கோபுரம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வைக்கப்பட்டிருந்த திருப்பணி உண்டியலில் ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 194 இருந்தது.
மொத்தம் ரூ. 1 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 300 ரொக்க பணமும், 964 கிராம் தங்கம், 14 ஆயிரத்து 131 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்து இருப்பதாக திருத்தணி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- 2-ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 4-ம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரமோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில், இந்த ஆண்டின் சித்திரை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் விநாயகர் உலாவுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மரதேர் திருவிழா அடுத்த மாதம் 1-ம் தேதியும், 2-ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 4-ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாற்றுப்பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டிடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் இசையரசன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் ராம் மோகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்வத்பேகம், நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் அன்பரசு, கோவில் துணை ஆணையர் விஜயா, வனச்சரக அலுவலர் அருள்நாதன் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் முருகனை தரிசித்துவிட்டு காணிக்கை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
- 6 கிலோ 252 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதே போல் கிருத்திகை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு காணிக்கை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
திருத்தணி முருகன் கோவில் மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி கடந்த 22 நாட்களில் 70 லட்சத்து 77 ஆயிரத்து 595 ரூபாய் பணம் வசூலாகி உள்ளது. மேலும் 466 கிராம் தங்கம், 6 கிலோ 252 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் அமைந்துள்ளது. விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.