search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்கொடுமை"

    • ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
    • முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் இல்ல இயக்குனர் அருள் ஜோதி தலைமையில், மேலாளர் கோபி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு இனிப்பு, கதர் ஆடை வழங்கி பேசினார். முதியோர் பராமரிப்பில் சிறப்பாக சேவை செய்யும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    நாகர்கோவில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, குற்றாலம், சென்னை மற்றும் புதுடில்லி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவனம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வந்து முதியோர்கள் பயன் பெறலாம் என ரோஜாவனம் இயக்குனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா டேனியல், மருத்துவர் ஸ்டீவ் வாழ்த்துரை வழங்கினர். ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    முன்னதாக செவிலியர் கல்லூரி ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்று பேசினார். நிறைவாக முதியோர் இல்ல ஆலோசகர் சுசீலா நன்றி கூறினார்.மேலாளர் சாமுவேல் ராஜன், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் சிபியா, செல்லம்மாள், பிரியா, மற்றும் மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குறிப்பிட்ட ஜாதி பற்றி எழுதிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    • அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அருணாச்சலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வாழ்த்தி பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வாழ்த்தி கவிதை எழுதியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை.

    ஆனால் தமிழகத்தின் ஒரு ஜாதியை ஒப்பிட்டு எழுதி உள்ளார்.

    இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×