என் மலர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு ஊர்வலம்"
- போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
- துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தொடங்கப்பட்ட ஊர்வலத்திற்கு கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் ஆறுமுகம் வரவேற்றார். கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி னார்கள்.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையம், அண்ணா சிலை, டி.பி. ரோடு, காந்தி சிலை, பழையபேட்டை என முக்கிய சாலைகள் வழியாக சென்றன. இதில் சப்&இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, குப்புசாமி, ராமதாஸ், போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர் சீதாராமன், கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ், மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.
- விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பதாகைகளை கையில் ஏந்தியபடி, முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சியை தலைவர் பி.கே. முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலமானது பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளியிலிருந்து தொடங்கி தக்காளி மண்டி, பை -பாஸ் சாலை, எம்.ஜிரோடு, பஸ் நிலையம், கடைவீதி வழியாக பள்ளியை சென்றடைந்தனர்.
இந்த விழிப்பு ஊர்வ லத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களுக்கான தீர்வு காணுதல் ஆகியவை பற்றி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, முழக்கமிட்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மருத்துவமனை மருத்துவர் சித்ரா, பள்ளியின் குழு தலைவர், உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.
- பதாகைகளை ஏந்திச் சென்றனர்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு பள்ளித் தாளாளர் பப்ளாசா தலைமை வகித்தார். செயலர் ஜின்ராஜ், பொருளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் அனுராக் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
வந்தவாசி காந்தி சாலையில் தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தேரடி வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது. இதில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம், மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
ஊர்வலத்தில் பள்ளி முதல்வர் ஜெகன், ஆசிரியர்கள் ஆர்த்தீஸ்வரி, பத்மஜெயனி, தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மனித உரிமைகள் தினத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
- கல்லூரி வளாகத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
இதை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயலட்சுமி, அரசு மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) உமா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தாசில்தார் சம்பத், மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் கலைவாணி, ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வந்தவாசி பஜார் வீதி வழியாக சென்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் ஆர்.கார்வண்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் தொடங்கிய ஊர்வலம் தேரடி, காந்தி சாலை, பஜார்வீதி வழியாகச் சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஊர்வலத்தில் சங்கச் செயலர் கே.குணசேகர், பொருளாளர் எம்.டோமினிக் சேவியோ, பயிற்றுநர் எஸ்.நித்தியானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
- மாணவிகள் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கரில் மின்சார துறை சார்பில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மின்சார உதவி செய்ய பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் இதில் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிக்கன வார குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் மின் சிக்கனம் குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மின்சிக்கன ஊர்வலத்தில் நகராட்சி துணைத் தலைவர் பழனி, உறுப்பினர்கள் அசோகன் அன்பரசு உள்பட நகராட்சி ஊழியர்களும் மின்சார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
- தேவையான போது மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்த அறிவுரை
- எராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சேத்துப்பட்டு, மின்சார வாரிய கோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கனம், மற்றும் பாதுகாப்பு வார, விழா 14-ம்தேதி முதல் 20-ம் வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு மின்சார சிக்கனம், மற்றும் பாதுகாப்பு, குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு, தலைமை தாங்கி கொடி அசைத்து விழிப்புணர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் இருந்து போளூர் சாலை, ஆரணி சாலை, காமராஜர் பஸ் நிலையம், வந்தவாசி சாலை, செஞ்சி சாலை, வழியாக மின்வாரிய கோட்ட அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.
அப்போது தேவையான போது மட்டுமே மின்விளக்குகள், மற்றும் மின்விசிறிகள், பயன்படுத்த வேண்டும், சுவிட்சுகள், பிளக்குகள், போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
இடி மின்னலின் போது மின்சார சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட மின்சார பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பதாகளை ஏந்தியவாறு மின்சார வாரிய ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ஊர்வலத்தில் உதவி செயற்பொறியாளர்கள் எழிலரசி, பக்தவாச்சலம், ரமேஷ் பாபு, மற்றும் மின்சார கோட்ட அலுவலர்கள், ஊழியர்கள், கலந்து கொண்டனர். முடிவில் நகர் பிரிவு உதவி மின் பொறியாளர் மோகனசுந்தரம், நன்றி கூறினார்.
- சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்துபேரணியைதுவக்கிவைத்தார். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் உடுமலை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் ,உடுமலை இருசக்கரம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கம் ,உடுமலை புதிய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி உடுமலை தளி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட சென்று பைபாஸ் ரோடு, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
- விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
- கணக்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, கிருஷ்ணகிரி வட்டார வளமையம் மற்றும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசைநாதன், ஆசிரியர் பயிற்றுநர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் குப்பம் சாலை, மீன் மார்கெட், நேதாஜி சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதுடன், கல்வி கற்க வயது தடையில்லை. 15 வயதிற்கு மேல் கல்வி கல்லாதோர் இத்திட்டத்தில் சேரலாம். ஆண்கள், பெண்கள் சேர்ந்து பயன்பெறலாம். சிறந்த தன்னார்வலர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
ஆண்டு இறுதியில் கற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கற்போருக்கு ஏற்ற இடத்தில், ஏற்ற நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படும். நம் நாட்டில் கல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
- துண்டு பிரசுரம் விநியோகம்
- பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக "உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
இதில் புற்றுநோய் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் பேசினார்கள். ஊர்வலத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கல்லுரி மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
- நாட்டு நலத்திட்ட முகாம் நடந்தது
- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி மருத கேசரி மகளிர் கல்லூரி சார்பில் குன்னத்தூர் மற்றும் மண்டலவாடி பகுதியில் நாட்டு நல திட்ட மாணவர்களும், விதை குரல் தொண்டு நிறுவனமும் இணைந்து சிறப்பு முகாமை நடத்தியது.
முகாமிற்கு கல்லூரி தலைவர் விமல்சந் ஜெயின், செயலாளர் லக்மிசந்த் ஜெயின், நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ் குமார் ஜெயின் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நாட்டு பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, கல்லூரி கல்வி ஆலோசகர் பேராசிரியர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி மாலா மற்றும் விதையின் குரல் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரபு ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
குன்னத்தூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் உள் அலங்காரம் மற்றும் கட்டமைப்பு துறை தலைவர் விஜயலட்சுமி மற்றும் மேகநாதன் ஆகியோர் சிறப்புறையாற்றினார். மண்டலவாடி முகாமில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை தலைவர் பவித்ரா தொடக்கி வைத்து பேசினார்.
மேலும் இந்த முகாமில் நாட்டு நலத்திட்ட பணி மாணவிகள் பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் தலைக்கவசம் அணிதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற வாசகங்களை கையில் ஏந்தியவாறு வீதிவீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வீடு வீடாகச் சென்று குழந்தை தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது எனவும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர். மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த நாட்டு நல திட்ட பணி மாணவிகள் பொன்னேரியில் உள்ள பூங்காவிற்கு சென்று தூய்மைப்படுத்தினர். இந்த முகாமை நாட்டு நல திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ, அருணா ஆகியோர் இணைந்து நடத்தினர்.
- வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலவை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்,
- ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு திட்ட விளக்க கூட்டம் என தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக, ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்ட ஊர்வலத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து, தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:-
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவு கூறும் வகையில், ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. நமது கிருஷ்ணகிரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வருகிற 8-ந் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம், ஆட்சிமொழி சட்ட வரலாறு, ஆட்சி செயலாக்க அரசாணை, அரசு பணியாளர்களுக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி, மொழி பயிற்சி, மொழி பெயர்ப்பும் கலை சொல்லாக்கமும், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலவை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம், பொதுமக்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வு திட்ட விளக்க கூட்டம் என தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, பழையபேட்டை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 200&க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதி, தாசில்தார் சம்பத், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.