என் மலர்
நீங்கள் தேடியது "ஆலங்குளம்"
- கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.
- அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார்.
தென்காசி:
தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலையில் ஆலங்குளம் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் சாலையின் வடபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.
இந்த கழிவுநீர் கால்வாய் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக அமைய வேண்டும் என்று ஆலங்குளம் வியா பாரிகள் சங்கம் சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் தெரிவித்திருந்தனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை அமைச்சரை சென்னையில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து சாலையின் கழிவுநீர் கால்வாய் குறித்து மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வரைபடம் மூலம் காண்பித்து விளக்கி னார்.
கோரிக்கையின் முக்கிய த்துவம் குறித்து கலெக்டர் ஆகாஷ் சம்பந்தப்பட்ட அதிகாரி களை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிகழ்வின் பொழுது ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, நெல்சன்,தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.
- 12 தன்னார்வளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சார்பில் வால்டர் தேவாரம் விருது வழங்கும் நிகழ்சி வெங்கடாம்பட்டியில் நடைபெற்றது.
முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார். இயற்கை விஞ்ஞானி விஜயலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆலங்குளத்தில் செயல்பட்டு வரும் பூ உலகை காப்போம் மன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மரக்கன்று நடுதல், பராமரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் பூ உலகை காப்போம் மன்ற தலைவர் ராஜா, அதியப்பன், முருகன், சிவா மற்றும் ஆலோசகர் இளங்கோ உட்பட 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகி திருமுருகன் செய்திருந்தார்.
- உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.
ஆலங்குளம்:
தி.மு.க. மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின், 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம், நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ரத்த தான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம் தெற்கு ஒன்றியத் தலைவர் அரவிந்த்ராஜ் திலக் தலைமை தாங்கினார். உதயநிதி மன்ற ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, பொரு ளாளர் திராவிடமணி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் வரவேற்றார்.
தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மருத்துவர்கள் சரண்யா அருணாச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். நெல்லை தனியார் ரத்த வங்கி சார்பில் மன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்களிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
விழாவில் ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால், மாநில பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி தனுஷ்கோடிஅன்பழகன்.தொழிலதிபர்கள.மணிகண்டன், மோகன்லால், செல்வன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள்அன்பழகன், சாமுவேல்ராஜா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அண்ணாவி காசிலிங்கம், நகர பொருளாளர் சுதந்திரராஜன், புதுப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் மாரியப்பன், ஆலங்குளம் நகர துணை செயலாளர் சரஸ்வதி, உதயநிதி மன்ற ஆலங்குளம் வடக்கு ஒன்றியத் தலைவர் அருணா பாண்டியன், ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர்.மகேஷ், துணைத் தலைவர் ஹரிகரசுதன், பாப்பாக்குடி ஒன்றியத் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலாளர் சந்தண சுப்பிரமணியன், பொருளாளர் சதீஷ்குமார், ஐடி பிரிவு விக்னேஷ், கீழப்பாவூர் திமுக நகரச் செயலாளர் ஜெகதீஷன், ராமகிருஷ்ணன், துரை, நகரப் பிரதிநிதி ஆதிவிநாயகம் ஆசிர்வாதம்.டிரைவர் சாலமோன் பொன் மோகன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நகர செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை, உதயநிதி மன்ற ஒருங்கிணைந்த மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் செய்திருந்தார்.
- ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
- விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொது மக்கள் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
ஆலங்குளம்:
முகூர்த்த நாட்கள் நாளை முதல் தொடர்ந்து 2 நாட்கள் வருவதை யொட்டி தென்காசி மாவட்டத்திலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
இதே போல் கிலோ ரூ.850-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்பனையானது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொது மக்களும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சில இடங்களில் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
- நான்கு வழிச் சாலைப்பணிக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.
- தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நில உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
ஆலங்குளம்:
நெல்லை- செங்கோட்டை- கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிக்கு கூடுதல் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.
நான்குவழிச்சாலைப் பணிகள் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்கள் கையகப் படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிவாரணமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிக்கு கூடுதல் இடங்கள் தேவைப் படுவதால் அவற்றை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் ஆட்சேபனைகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டம் பகுதி 2, திருச்சி நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் இருந்து நிலம் வைத்திருக்கும் அழைப்பானை கொடுக்பட்ட உரிமை யாளர்கள் பங்கேற்றனர்.
இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகம் செய்வதற்கு ஆட்சேபனை இல்லை என கடிதம் அளித்தனர்.
- வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வாருகால் வழியாக குருவன்கோட்டை ஓடையில் கலக்கிறது.
- வடிகால் தரமாக அமைக்கப்படாத காரணத்தால் இதில் குப்பைகள். கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கிராமத்தில் கழிவு நீரோடையில் ஏற்பட்ட தேக்கத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் உள்ள முதல் தெருவின் ஒரு பக்கம் ஆலங்குளம் பேரூராட்சி 4-வது வார்டின் ஒரு பகுதி, மற்றொரு பக்கம் மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டை ஆகியவை உள்ளது.
இத்தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வாருகால் வழியாக குருவன்கோட்டை ஓடையில் கலக்கிறது. இந்த கழிவு நீர் வெளியேறும் பகுதியில் சில மாதங்களுக்கு முன், வடிகால் ஏற்படுத்தப்பட்டது.
குப்பைகள் இன்றி தண்ணீர் மட்டும் வெளியேற வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வடிகால் தரமாக அமைக்கப் படாத காரணத்தால் இதில் குப்பைகள், கழிவுகள் தேக்கமடைந்து, கழிவு நீரும் வெளியேற இயலாமல் அதில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் இப்பகுதியில் வசிப்போருக்கு இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் மூலம் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஆலங்குளத்தில் இருந்து சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது.
- இந்த பஸ் மூலம் அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் இருந்து குருவன்கோட்டை, குறிப்பன்குளம், கிடாரக்குளம், அகரம், வீராணம், கருவந்தா, பரன்குன்றாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது, தடம் எண் 42 ஏ ஆக மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் வழியோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இந்த தடத்தில் வேறு பஸ்களும் இயக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கிராம மக்கள், மாணவ, மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவிகள், தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
- ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி விளக்கமளித்தார்.
ஆலங்குளம்:
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், ஆலங்குளம் அருகே உள்ள அச்சங்குட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னைமரம் ஏறும் கருவியைப் பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
இதில் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுருநாதன் வழிகாட்டுதலின் படி மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா. கீர்த்தனா. லக்சயா ஆகிேயார் தென்னை மரம் ஏறும் கருவியின் பயன்பாட்டையும், அதன் முக்கியதுவத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதன்மூலம் தென்னைமரம் ஏறும் செலவுகளைக் குறைப்பதோடு, விரைவாகவும் பாதுகாப்பாகவும் மரம் ஏறலாம் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் ஹேனா குமாரி என்ற மாணவி கருவியை பயன்படுத்தி மரம் ஏறி செயல்பாட்டை விளக்கினார். மேலும் இவர்கள் 2½ மாதம் ஆலங்குளம் வட்டாரத்தில் முகாமிட்டு வேளாண் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
- சின்னமணி-தெய்வானை தம்பதியினர் தங்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.
- கன்றுகுட்டிக்கு முன்கால் பகுதியின் மேல் பகுதியில் 2கால்கள் கூடுதலாக இருந்தது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னமணி-தெய்வானை தம்பதியினர். விவசாயிகளான இவர்கள் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகின்றனர்.
சினையுடன் இருந்த பசு நேற்று இரவு பெண் கன்றுகுட்டியினை ஈன்றது. பிறந்த அந்த கன்றுகுட்டி மற்ற குட்டிகள் போல இல்லாமல் முன்கால் பகுதியின் மேல் பகுதியில் இரண்டு கால்கள் கூடுதலாக கொண்டு இருந்தது.
கூடுதலாக இரண்டு கால்கள் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் கன்றுக்குட்டியை பார்த்து செல்கின்றனர். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில் பிறவி குறைபாட்டால் இப்படி கூடுதல் கால்களுடன் கன்று பிறந்து உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி சரி செய்யலாம் என்றனர்.
- ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.
- சிலையை பராமரித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அருமைநாயகம் பெயரில் அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526 வரவு வைக்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தாலும், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீண்டகாலமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நான்கு வழிச்சாலை பணியால் பாதிக்கப்படும் கட்டட உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க ப்பட்டுவந்த நிலையில், காமராஜர் சிலையும் அகற்றப்பட வேண்டிய நிலையில் இருந்ததால், சிலையை பராமரித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அருமைநாயகம் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு, சிலையை பராமரிப்பு பணி செய்து வந்ததற்காக அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526 வரவு வைக்கப்பட்டது.
இதற்கிடையே, தனிநபர் பெயரில் தொகை வரவு வைக்கப்பட்டது, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மற்றும் புதிய சிலை அமைப்புக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கலந்து கொண்டு, சிலையை பராமரிப்பு செய்து வந்ததற்காக வழங்கப்பட்ட அந்தத் தொகையை, புதிதாக சிலை அமைப்பதற்காக, சிலை அமைப்புக் குழுவிடம் வழங்க தான் உரிய ஏற்பாடு செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வில்லியம் தாமஸ் ஆகியோர் முன்னிலையில் அருமைநாயகம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526-க்கான தனது வங்கி காசோலையை, சிலை அமைப்புக் குழுவைச் சேர்ந்த ஜாண்ரவி, பர்வீன்.அலெக்ஸ் ராஜா, உள்ளி ட்டோரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் அருணாசலம், காங்கிரஸ் நிர்வாகி அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
- சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் பாராட்டினர்.
ஆலங்குளம்:
குடியரசு தினவிழா குழு போட்டிகள் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 17 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் பிரிவில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
இதே போன்று, 32-வது தேசிய சப்-ஜுனியர் கபடிப் போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக அணியில், இப்பள்ளி மாணவியும், காளத்திமடம் தென்றல் அணியின் வீராங்கனையுமான ரோபோ அஜி மாய்ஷா இடம்பிடித்திருந்தார்.
போட்டிகள் நிறைவு பெற்றதையடுத்து, இந்த மாணவிகள் ஊருக்கு திரும்பினர். அப்போது ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, போட்டியில் சிறப்பிடம் பெற்ற அம்மாணவிகளுக்கு ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து, பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.டி.ஜாண்ரவி, பரணி சில்க்ஸ், ஆர்த்தி ஜவுளி ரெடிமேட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
சிறப்பிடம் பெற்ற இம் மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி ஜான்சிராணி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், காளத்திமடம் தென்றல் அணியின் தலைவர் செல்வகுமார், செயலாளர் உதயசூரியன், மேலாளர் கருணாகரன், தலைமை பயிற்சியாளர் ஆசீர்ராஜா, பயிற்சியாளர்கள் மணி டேவிட், ஸ்டீபன், கரிகாலன் உள்ளிட்ட முன்னாள் கபடி வீரர்கள் பாராட்டினர்.
- சுப்புக்குட்டி என்ற கார்த்திக் கஞ்சா பவிற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கார்த்திக் வீட்டில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது சோதனையில் தெரிய வந்தது.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சுப்புக்குட்டி என்ற கார்த்திக்(வயது 28). இவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கார்த்திக் தனது வீட்டில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.