என் மலர்
நீங்கள் தேடியது "தென்காசி"
- குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா 21-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
- குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் பிரேமலதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தென்காசி:
ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா கடந்த 21-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதனையொட்டி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுரையின்படி ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் டாக்டருமான பிரேமலதா, குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் மூலம் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை மருத்துவர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஸ்வர்ணலதா, கார்த்திக், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், புள்ளி விபர உதவியாளர் வேலு, வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள் , செயின்ட் மேரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- வானவில் மன்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
- நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தென்காசி நகராட்சியில் 13-வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலோசியஸ் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீவலமுத்து முன்னிலை வகித்தார். தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முக சுந்தரபாண்டியன் வரவேற்றார். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ், எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரஸ்வதி மற்றும் அறிவியல் ஆசிரியை கவுசல்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் நாகூர்மீரான் மற்றும் ராசப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார். ஏற்பாட்டினை ஆசிரியர்கள் வின்சென்ட், மணிமந்திரி, எப்சிபா, விமலா, யாஸ்மின், தமிழ்செல்வி, மாலையம்மாள் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தினர்.
- பாவூர்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
- கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
தென்காசி:
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாள் விழா கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், விஜயன், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன் ராஜா, ராஜேஸ்வரி மற்றும் மதிச்செல்வன், ஷாலி மேரி, ஜெகன், டேனியல், குருசிங், செந்தூர் உள்ளிட்ட தி.மு.க. பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
- மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு தென்காசியில் வேகமாக பரவி வருகிறது.
- தட்ப வெப்பநிலை காரணமாகவே மெட்ராஸ்-ஐ அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்காசி:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதற்குள்ளான மாணவர்களை விடுப்பு எடுத்துக்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது.
தட்ப வெப்பநிலை
இந்த பாதிப்பானது திடீர் மழை மற்றும் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி மாறி ஏற்பட்டு வருவதன் காரணமாகவே அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த முறை தென்காசியில் வழக்கத்தைவிட அதிகமானோர் இந்த கண்நோய்க்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்களில் எரிச்சலுடன் அரிப்பும், கண்கள் சிவப்பு நிறமாக மாறுவதும், கண்ணில் வீக்கம், உறுத்தல், கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த பாதிப்பு பாதிக்கப்பட்டவரின் உடமைகளை நேரடியாக தொடுவதன் மூலம் பரவலாம்.
தடுக்கும் வழிமுறைகள்
இந்த பரவலை தடுக்க கண் வலிக்கும் போது, தான் பயன்படுத்தும் பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது. தனியாக சோப்பு, துண்டு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். கண்வலி உள்ளவர்களைப் பார்ப்பதாலேயே இது ஒட்டிக் கொள்ளாது.
ஒவ்வொரு முறை உங்கள் கண்களை சுத்தம் செய்த பிறகும், கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியில் சென்று வந்தவுடன் கை, முகம் ஆகியவற்றை சோப்பு போட்டு கழுவுங்கள் என மாணவ-மாணவிகளுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- பல மினிபஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், ஆவுடையானூர், கடையம், பூலாங்குளம், கழுநீர்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் பல மினிபஸ்கள் அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் இயக்கிடாமல் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பலமுறை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் தெரி விக்கின்றனர்.
உடனடி யாக அனுமதிக்கப் பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.
- வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் மின்வாரிய தொ.மு.ச. மாநில பொதுச் செயலாளர் மணிமாறன் ஆலோசனையின் படி, சங்கரன்கோவில் மின்வாரிய தொ.மு.ச. சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சேர்மன் உமா மகேஸ்வரி, தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், திட்டத்தலைவர் தங்கமாரிமுத்து, திட்ட பொருளாளர் சத்யராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மின்வாரிய தொ.மு.ச. கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மின்வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, இளைஞர் அணி சரவணன், தி.மு.க. மாவட்ட மாணவரணி உதயகுமார், கார்த்திக், தொ.மு.ச.வை சேர்ந்த சத்தியராஜ், வெள்ளத்துரை, கலாவதி, கருப்பசாமி, கிருஷ்ணகுமார், பால்ராஜ், கிருஷ்ணசாமி, முத்துபாண்டியன் சிவசுப்பிரமணியன், பேச்சிமுத்து, தி.மு.க. அவைத்தலைவர் முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோட்டச் செயலாளர் சரவணமுருகையா செய்திருந்தார்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர் மரபினர் மாணவ- மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவியர்க ளுக்கான கல்வி உதவித் தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் செயல்பட தொடங்கி உள்ளது. அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவேங்கடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.
- சாம்பவர்வடகரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மூர்த்தி தலைமை தாங்கினார்.
சாம்பவர் வடகரை:
தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நேற்று தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவேங்கடத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இதில் குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் சங்கரன் கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், திருவேங்கடம் நகர துணை செயலாளர் பாலமுருகன் அவைத்தலைவர் ராஜசேகரன், முத்தையா, நிர்மலா தேவி, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாம்பவர் வடகரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வெங்கடேஷ், பேரூர் செயலாளர் நல்லமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா தலைமையிலும், ராயகிரி பேரூராட்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன் தலைமையிலும், வாசு தேவநல்லூரில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் துரைப்பாண்டியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- சேரன்மகாதேவி பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேடிங் போட்டியில் 1000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் பாவூர்சத்திரத்தை சேர்ந்த வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் 42 பேர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
சேரன்மகாதேவி ஸ்கேடு காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜியில் தமிழன் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேடிங் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரத்தை சேர்ந்த வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் 42 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14 பேர் முதல் பரிசும், 11 பேர் 2-ம் பரிசும், 8 பேர் 3-ம் பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற அனைவரையும் சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாராட்டினர்.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- கருப்பாநதி அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டத்தில் கன்னடியன் பகுதியில் 9.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாபநாசம் பகுதியில் 4, மணிமுத்தாறில் 4.6, சேர்வலாறு அணை பகுதியில் 4, சேரன்மகாதேவியில் 3.4, பாளையில் 1, நெல்லையில 0.4, அம்பாசமுத்திரத்தில் 3, நாங்குநேரியில் 4.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் 2, அடவி நயினார் கோவில் பகுதியில் 2, ஆய்க்குடியில் 2, சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
- மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை போலீசார் எடுத்துக் கொண்டனர்.
தென்காசி:
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள், போலீஸ் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட போலீஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் ராகசுவேதா பி.எஸ்.சி பயோடெக்னாலஜி படித்து வருகிறார்.
- ராகசுவேதாவின் முழு கல்வி கட்டணத்தை வரைவோலையாக அய்யாதுரைப் பாண்டியன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரைக் கண்டார்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பண்டாரக் கண்ணு என்பவரது மகள் ராகசுவேதா. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி பயோடெக்னாலஜி படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் ஏ.வி.கே கல்வி குழும தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான அய்யாதுரைப் பாண்டியனை சந்தித்து மாணவி ராகசுவேதாவின் கல்வியை தொடர நிதி உதவி அளித்திட கோரி இருந்தனர். அதனை ஏற்று அய்யாதுரைப் பாண்டியன் ஏ.வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் ராகசுவேதாவின் முழு கல்வி கட்டணத்தை வரைவோலையாக அவரது தந்தை பண்டாரக் கண்ணுவிடம் வழங்கினார். அப்பொழுது அ.தி.மு.க. பிரமுகர் ஊத்துமலை இளைய ஜமீன்தார் குமரேச ராஜா, அய்யாத்துரைபாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, பேரவை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சி முத்து , பசும்பொன், சுபிக்ஷா கருப்பசாமி , ஏ.ஏ.ஆர் ரிசார்ட்ஸ் நிர்வாகி சிவசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.