என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடும் விழா"

    • மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • மகளிர் மன்றத்தினர் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடத்தூர் ,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி

    யில் மாபெரும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    அதன் ஒரு பகுதியாக கடத்துார் பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் நீர்நிலைகள் சுத்தம் செய்தல், மற்றும் ஏரியின் கரையோரப்பகுதியில் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் சார்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பேரூராட்சி தலைவர் மணி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜசேகரன், முன்னாள் பேருராட்சி தலைவர் மோகன், மன்ற உறுப்பினர்கள், கார்த்திக், பச்சியப்பன், சதீஸ்குமார், மயில்சாமி, சபியுல்லாது, நகர செயலாளர் பூமுரு கன், சிலம்பரசன், ஜோதி, கவிதா, இந்திராணி, மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக நீர்நிலைகள் காப்போம், சுற்றுச்சூழலை பாது காப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம் என அனை வரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

    ஆசிரியர் ரஜினி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மரம் நடுதலின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி ஆசிரியர் வில்வநாதன் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி வளாகம் மற்றும் ஏரிக்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    • ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .

    உடுமலை :

    இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    திருமூர்த்திமலை சுற்று பகுதியில் நடந்த விழாவிற்கு குருமகான் பரஞ்சோதியார் தலைமை வகித்தார். உலக சமாதான அறக்கட்டளை செயலாளர் சுந்தர்ராமன், பொருளாளர் பொன்னுச்சாமி மற்றும் கல்லூரி செயலாளர் செங்குட்டுவன், கல்லூரி நிர்வாக இயக்குனர் புனித வல்லிஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி குரு மகன் பரஞ்சோதியார் மலேசியா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் .உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .இயற்கையை பாதுகாத்து தர்மம் செய்வதே குருவிற்கு செய்யும் கடமை ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

    • 20 வகையான 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவிலூர் ஊராட்சி சென்றாயன அள்ளி ஏரிகரை பகுதியில் நடப்படுகிறது.
    • மூன்று ஆண்டுகளில் இவ்விடம் முழுவதும் பறவைகளின் வாழ்விடமாக மாற்றப்படும்.

    தொப்பூர்,

    உலகம் முழுவதும் காடுகள் மற்றும் மரங்களின் அளவு குறைந்து கொண்டே வருவதால் கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் காடுகளில் உள்ள வனவிலங்குகள் முதல் பறவைகள் வரை அனைத்தும் தங்களுக்கான வாழ்விடம் தண்ணீர் உணவு உள்ளிட்டவற்றை தேடும் அவலம் நீடித்து வருகிறது.

    அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முதல் சமூக தன்னார்வல அமைப்புக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம், கோவிலூர் ஊராட்சி சென்றாயனஅள்ளி ஏரிகரை பகுதியில் உலக வன நாள் விழாவை முன்னிட்டு பெரியாம்பட்டி ஸ்ரீ ஞானாம்பிகா கல்வி அறக்கட்டளையின் சார்பாக மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீ ஞானாம்பிகா கல்வி அறக்கட்டளையின் லட்சுமிமதி கூறும்போது:-

    உலக வன தினத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் சாதாரணமாக நிழல் தரும் மரங்கள் அனைத்து இடங்களில் நடப்படுகின்றன.

    தற்போதைய சூழ்நிலையில் பறவைகள் தான் அதிக அளவில் தங்கள் வாழ்விடம் உணவு தேவை உள்ளிட்ட வற்றில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    அவற்றை மீட்கும் விதமாக பறவைகளுக்கு பலன் தர கூடிய ஆலமரம், அரசன், அத்தி, வேப்பமரம், நொச்சி, புங்கன், உச்சி, இலுப்பை உள்ளிட்ட 20 வகையான 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவிலூர் ஊராட்சி சென்றாயன அள்ளி ஏரிகரை பகுதியில் நடப்படுகிறது. மேலும் ஏரி கரையில் நடப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் அனைத்து மரக்கன்றுகளும் வளர்த்தெடுக்கபடும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இவ்விடம் முழுவதும் பறவைகளின் வாழ்விடமாக மாற்றப்படும் என தெரிவித்தனர்.

    விழாவில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவி தமிழ் செல்வி நந்திசிவன் கலந்து கொண்டார். மேலும் ஊராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி மற்றும் ரவி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் லட்சுமிமதி, நாகராஜ், முனுசாமி, சங்கர், வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • குண்டு குறுக்கியில் அமைந்த தனியார் கார் நிறுவனம் சார்பில் சுமார் 200 மரக்கன்றுகளை நட்டனர்.
    • தனியார் நிறுவன மேலாளர் குமார், பிரபாகரன், சதீஷ் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி கோனேரிப் பள்ளி ஊராட்சி பகுதியில் குண்டுகுறுக்கி கிராமம் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்திற்கு அருகேயுள்ள அரசு நிலத்தில் கோனேரிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோபம்மா சக்கரப்பா தலைமையில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் மற்றும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார், குண்டு குறுக்கியில் அமைந்த தனியார் கார் நிறுவனம் சார்பில் சுமார் 200 மரக்கன்றுகளை நட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவன மேலாளர் குமார், பிரபாகரன், சதீஷ் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
    • புதுச்சேரியில் வருகிற 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படவுள்ளன.

    ஓசூர்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் காப்போம் அமைப்பு மற்றும் ஈஷா'காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும், இந்தாண்டு இலக்கான 1.10 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    அதன்படி, இந்தாண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படவுள்ளன.

    இது குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. ஓசூரில் நாளை (திங்கட்கிழமை) அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஏ.மனோகரன் மற்றும் அதியமான் பொறியியற் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை, கல்லூரி வளாகத்தில் நட்டு விழாவை தொடங்கிவைக்கின்றனர். தொடர்ந்து, அன்று மாலை வரை தொல்லியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் வேடியப்பன் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது ஈஷா நிர்வாகி போரிஸ் பீம் உடன் இருந்தார்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு பேரூராட்சி மன்றதலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினர். பின்னர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தனர்.

    செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கலைஞர் நகர் பூங்கா, இருளர் காலனி பூங்கா ஆகிய பகுதிகளில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினார்.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் குப்பைகள் ஒழிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
    • சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுக்காகவும் இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சியில் குப்பைகள் ஒழிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளையும் பிரித்து, உரம் தயாரிப்பு, மக்கா குப்பைகளை தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணியும் நடக்கிறது. குப்பை கிடங்கில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்காகவும், சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுக்காகவும் இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார்.

    இதில் நகராட்சி பொறியாளர் சேகரன், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், மாதேஸ்வரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், களப்பணி உதவியாளர், மற்றும் தூய்மை பாரத இயக்க பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பாப்பி ரெட்டிப்பட்டி சாலைகளில் 2400 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடத்தூர்,

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து தமிழகத்தில் ரோட்டோரங்களில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்கான மரக்கன்று நடுவிழாவை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் அரூர், தென்கரைக்கோட்டை, பள்ளிப்பட்டு பாப்பி ரெட்டிப்பட்டி சாலைகளில் 2400 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.

    இதனையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதில் பாப்பிரெட்டி ப்பட்டி உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    கருணாநிதி நூற் றாண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கூட் ரோடு அருகே நெடுஞ்சாலையோரம் 12000 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார், ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணைத்தலைவர் பூங்கொடி திட்ட ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நெடுஞ்சாலையோரம் 12,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் மாரிமுத்து, சந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன்படி திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்லடம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கண்காணிப்பு பொறியாளர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது.

    தேவகோட்டை

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை கோட்டம் தேவகோட்டை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக சருகனி அருகே மதுரை-தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் நடந்தது.

    இவ்விழாவில் மகிழம், மகோகலி, தளி, புங்கை, வேம்பு, நாவல், சரக்கொன்றை மற்றும் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    ×