search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு"

    • தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
    • நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    காதலுக்கு எதிர்ப்பு

    இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அந்த பெண்ணை வேறொரு வருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த பெண் தனது கணவருடன் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார்.

    தாரமங்கலம் பஸ் நிலை யம் அருகில் உள்ள பேக்கரி ஒன்றின் முன்பு நின்று இருந்த அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்ததாக கருதி அவருடைய அண்ணன்கள் 2 பேர் யுவ ராஜை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    மேலும் நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    2 பேர் கைது

    இந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் அண்ணன்கள் 2 பேரை கைது செய்தனர்.

    • யசோதாதேவி (வயது 58). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் யசோதாதேவி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பிரகாசம் நகரை சேர்ந்தவர் யசோதாதேவி (வயது 58). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் யசோதாதேவி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின் ரோட்டை சேர்ந்த சந்தோசை (30) கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சந்தோசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1, 000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.

    • பூமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32), கல் உடைக்கும் தொழிலாளி.
    • மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32), கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பவித்ராவையும் அவரது 1½ வயது பெண் குழந்தையும் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டு ஓட்டம்பிடித்தார். இதுபற்றி மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    இதை அறிந்த கோபி மற்றும் பவித்ரா ஆகியோர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அஜராகினர். போலீசார் பவித்ராவுக்கு அறிவுரை கூறி கணவருடன் செல்லுமாறு கூறினர். அதற்கு பவித்ரா தனது கணவருடன் செல்ல மருத்துவிட்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இத னிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கோபி மற்றும் மாதேஷ் குடும்பத்தாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி கோபியை மாதேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

    இதுபற்றி கோபியின் தாயார் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ், நாகராஜ், மணி, வெங்கடேஷ், பெரியசாமி, விஜயா, இருசம்மாள் ஆகிய 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே கடனை திருப்பிக் கேட்ட வாலிபரை கத்தியால் குத்தினார்.
    • இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே உள்ள வானகாரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் தியாகராஜன் (வயது 26). இவரது தம்பி அசோக், அதே பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் மகன் முனுசாமி என்கிற விஷால் (28) என்பவருக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார்.

    வாங்கிய பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து நேற்று மாலை விஷாலிடம், எனது தம்பியிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பி தரவில்லை என தியாகராஜன் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த விஷால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தியாகராஜனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார்.
    • மேட்டுப்பாளையம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மகாதேவ புரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அழகம்மாள் (வயது 60).

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக சத்தியமூர்த்தி நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகைகள் 4 பவுனை பறித்துக்கொண்டு, அழகம்மாளை தாக்கி கீழே தள்ளி விட்டுச்சென்றார்.

    இதுகுறித்து அழகம்மாள் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்ணா மார்க்கெட் வீதியை சேர்ந்த ஹக்கீம் (35) என்பவர் வழிப்பறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    அதில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹக்கீமிற்கு நீதிபதி சிவக்குமார் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக சிவசுரேஷ் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் திருவாக்வுண்டனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
    • கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் திரு வாக்வுண்ட னூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 36). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு சரண்யா ( 27) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ( 32) என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூபதி கூறியதாவது-

    கண்ணன் தனது மனைவியை அழைத்துச் சென்றதால் 2 குழந்தைகளும் தினமும் அம்மா எங்கே என்று கேட்டு அழுது அடம் பிடித்தனர்.சிறிய குழந்தைகளான அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கினேன்.அதனால் கண்ணனுக்கு போன் செய்து திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு அழைத்து இருவரும் மது அருந்தினோம். பின்னர் எனது செல்போனில் இருந்த குழந்தைகளின் படத்தை கண்ணனிடம் காண்பித்து குழந்தைகள் அம்மா இல்லாமல் அழுகிறார்கள்.

    குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விடும் . எனவே எனது மனைவி சரண்யாவை எனது வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கண்ணனின் காலில் விழுந்து கேட்டேன். ஆனால் கண்ணன் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் எனது மனைவியும் கண்ணனும் நெருக்கமாக உள்ள படத்தை காட்டி, மிரட்டினார்.

    இதனால் ஆத்திரமடைந்த நான், கண்ணனை தாக்கினேன். இவ்வாறு பூபதி கூறினார். கைது செய்யப்பட்ட பூபதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.
    • 10 பேர் மீது வழக்கு.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் .கருக்கல்வாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (40). இவரை அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்த ரவி, நவீன், நல்லதம்பி, ஐயம்மாள், குமார், ராஜமாணிக்கம், காசி, செல்வி, வள்ளி, மோகன் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் மகன் கோகுல்நாத் (வயது 28). இவர் நேற்றுமுன்தினம் இரவு வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியிலுள்ள தனியார் உணவகத்தில் குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுள்ளார்.

    அப்போது, அங்கிருந்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், தங்கராஜ், சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ், ஜெகதீஸ் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கோகுல்நாத்தை தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து கோகுல்நாத் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×