என் மலர்
நீங்கள் தேடியது "டிக்கெட் முன்பதிவு"
- 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் பயணிக்க 30 நாட்களுக்கு முன்பாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போக்குவரத்து துறையில் உள்ளது. வருகிற 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஒரு மாதத்துக்கு முன் என்ற அடிப்படையில் பொங்கலுக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு tnstc.com என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது.
தற்போது பெரும்பாலான விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பாமல் காலியாக உள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து இப்போது டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
சென்னை :
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந்தேதி) முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும்.
இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம்.
- சித்திரை திருவிழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது.
மதுரை:
சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந் தேதிதிக்கு விஜயம் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.
முன்பதிவு
இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்குகோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hree.tn.gov.in இந்து சமய அறநிலையத்துறையத் துறை hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந் தேதி) முதல் 13-ந் தேதி இரவு 9 மணி வரை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெற முடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ -மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.
டிக்கெட் கிடைக்குமிடம்
அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்... இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.
டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந் தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி- சுந்தரேசுவரரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மும்பையில் ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
- கள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.
இசைக்கான உயரிய விருதான கிராமி விருதுகளை வென்று உலக அளவில் ரசிகர்களை கொண்ட பிரிட்டனை சேர்ந்த பிரபல ராக் [ROCK] இசைக்குழுவாக கோல்ட்ப்ளே [COLD PLAY] திகழ்கிறது. அவர்களது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அடுத்த வருடம் [2025] ஜனவரியில் இந்தியா வருகை தர உள்ள கோல்ட்ப்ளே மும்பையில் தொடர்ச்சியாக ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
கோல்ட்ப்ளே இசைக்கு மும்பையில் அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதால் இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோல்ட்ப்ளே நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனையை புக் மை ஷோ [BOOK MY SHOW] இணையதளம் அதிகாரபூர்வமாக விற்பனை செய்தாலும் டிமாண்ட் காரணமாக மற்ற தளங்களில் டிக்கெட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் "லவுஞ்ச்" இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் BOOK MY SHOW -ல் 1 டிக்கெட் ரூ. 35,000க்கு விற்கப்பட்டன. ஆனால் தற்போது கள்ளச்சந்தையில் இவ்வாறு சட்டவிரோதமாககள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7.7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.
எனவே இவ்வாறு நடக்கும் கள்ளச்சந்தை வியாபாரம் குறித்து BOOK MY SHOW நிறுவனம் சார்பில் போலீசிலும் புகார் அளித்துள்ளது. மேலும் முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் BOOK MY SHOW தெரிவித்துள்ளது. ஆனால் அதிக காசு கொடுத்து வேறு தளங்களில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அவை செல்லாது என அறிவிக்கப்ட்டுள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.
- பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது.
- RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம்.
இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதலால் ரெயிலில் டிக்கெட் கிடைக்காமல் பல பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பயணிகளின் சிரமத்தை குறைக்க RAC டிக்கெட்டுகளை ரெயில்வே வழங்குகிறது. RAC டிக்கெட் என்பது அர்த்தம் ரத்துசெய்யப்படுவதற்கு எதிரான இட ஒதுக்கீடு (Reservation Against Cancellation) என்பதன் சுருக்கமாகும். RAC டிக்கெட்டை பயன்படுத்தி ஒருவர் ரெயிலில் பயணிக்கலாம். அதே சமயம் பெர்த்திற்கு ரெயில்வே உத்தரவாதம் அளிக்காது. அதாவது உங்களிடம் RAC டிக்கெட் இருந்தால், RAC ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மற்றொரு பயணியுடன் நீங்கள் ஒரு பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்
அதே சமயம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டால் RAC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்.
இந்நிலையில் RAC டிக்கெட் குறித்து டெல்லியை சேர்ந்த ஜா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ரெயில்வே அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவில், தனது குடும்பத்தை சாத் விழாவை கொண்டாட டெல்லியிலிருந்து பீகாரில் உள்ள தர்பங்காவிற்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்யும்போது டிக்கெட் காத்திருப்பு பட்டியல் 124 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர் 30 அன்று RAC 30 ஆகவும், நேற்று RAC 12 ஆகவும் இருந்தது. ஆனால் ரெயில் சார்ட் தயாரான பிறகு காத்திருப்பு பட்டியல் 18 ஆக உள்ளது எனக்கூறி எனது டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.
இது என்ன மாதிரியான டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம்? ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, சாத் பண்டிகையின் போது ஒரு பீகாரி தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே துறை அவருக்கு பதிலளித்தது.
இதனையடுத்து ஜா தனது எக்ஸ் பதிவில், "ரெயில்வே அதிகாரி என்னை தொடர்பு கொண்டு பேசினார். நாளை உங்கள் ஊருக்கு செல்வதற்கான ரெயில் பயணத்திற்கு தயாராக இருங்கள் என்று அவர் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் ரெயில்வே அமைச்சருக்கு என் நன்றிகள்" என்று அவர் பதிவிட்டார்.
- ஐஆர்சிடிசி இணையதளம் தட்கல் பயணசீட்டு நேரத்தில் முடங்கியதால் பயணிகள் அவதி
- இதனையடுத்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.
இந்திய ரெயில்வேவின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு போர்ட்டலான ஐஆர்சிடிசி, இந்தியா முழுவதும் தட்கல் பயணசீட்டு நேரத்தில் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
டெல்லி, அகமதாபாத், சூரத், மும்பை, மதுரை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதாக கூறப்படுகிறது .
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை அடுத்து எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பலர் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.
- (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.
- உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா?
ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையத்தளம் ஒரே மாதத்தில் 3வது முறையாக முடங்கியுள்ளது.
புத்தாண்டை ஒட்டி அதிக வெப் டிராபிக் காரணமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலி முடங்கியது.
இதன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பல பயனர்கள் இணையதளத்தில் உள்நுழைய முடியவில்லை, மேலும் உள்நுழைய முடிந்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.
காலை 10 மணிக்கு பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றபோது இந்த செயலிழப்பு ஏற்பட்டது. இதனைத்தொடந்து பல பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
@RailMinIndia ஐஆர்சிடிசி இணையதளம் இன்று காலை 10 மணி முதல் செயல்படவில்லை, என்னால் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

நான் வாடிக்கையாளர் சேவையை அழைத்தபோது, தளம் பராமரிப்பில் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள், உலகில் யாராவது வேலை நேரத்தில் தளத்தை பராமரிப்பில் வைத்திருப்பார்களா? உங்கள் கஸ்டமர் கேர் குழுவை நீங்கள் மாற்ற வேண்டும் என்று ஒரு பயனர் X இல் (முன்னர் Twitter) பதிவிட்டுள்ளார்.
தட்கல் முன்பதிவு-கிளாசிக் நேரத்திற்கு சற்று முன் ஐஆர்சிடிசி செயலிழந்தது என்று மற்றொரு பயனர் எக்ஸ் தளத்தில் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்தார். இந்நிலையில் தட்கல் நேரம் கடந்த பின்னர் ஐஆர்சிடிசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாதவர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பித் தவிக்கின்றனர்.
- ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.
- ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பு அதிகரிக்க உள்ளது.
புதுடெல்லி:
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளும், ஆதார் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பாக இருந்தது.
இந்நிலையில், பயணிகளுக்கு வசதியாக இந்த வரம்பு அதிகரிப்பட இருப்பதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 ஆகவும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.
முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் வாயிலாக தினமும் லட்சக்கணக்கான உள்நாட்டு பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதற்காக ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது வெளிநாட்டு பயணிகள் 120 நாட்களுக்கு முன்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதை 365 நாட்களுக்கு, அதாவது 1 ஆண்டுக்கு முன்பாகவே பதிவு செய்ய அனுமதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாட்டு பயணிகள் இனி 365 நாட்களுக்கு முன்பே இந்திய ரெயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பாஸ்போர்ட் நம்பர், சர்வதேச மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்தின்போது அசல் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.