என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரி சோதனை"

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது.
    • இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    கரூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கரூர், குளித்தலை, சேலம், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் உள்ளது.

    இந்நிலையில் கரூர் மற்றும் சேலத்தில் உள்ள கிளைகளில் நேற்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.

    சேலம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஜவுளிக்கடையின் கிளையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை, பிற்பகலை தாண்டியும் நீடித்தது. மொத்தம் 4 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகை புரிந்து சோதனைகளில் ஈடுபட்டனர்.

    ஜவுளிக்கடையின் ஒவ்வொரு தளங்களாக சென்று சோதனை நடத்திய அவர்கள், முறையாக வருமான வரி கட்டியுள்ளார்களா? அதற்குரிய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜவுளிக்கடையில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது. ஆனால் அதற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை சோதனையில் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக கடை அடைக்கப்பட்டு உள்ளே சோதனை நடந்து வரும் நிலையில், ஜவுளி எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
    • ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனையொட்டி ஐதராபாத், கரீம் நகர் ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் 20 குழுக்களாக ஒரே நேரத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், குடியிருப்பு பகுதிகள், குவாரிகள், கிரானைட் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

    கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.

    மேலும் அவருக்கு நெருக்கமாக உள்ள பல கிரானைட் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன.
    • தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது.

    சென்னை:

    பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாமாயில், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு தமிழகத்தில் சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    5 நிறுவங்களும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ஒரு நிறுவனம் தண்டையார்பேட்டையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 7 மொத்த விற்பனை கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது. தண்டையார்பேட்டை சந்தியராயன் கோவில் தெருவில் நிறுவன ஊழியர் ஒருவரின் வீடு உள்ளது. கணக்காளராக பணி புரிந்து வரும் இவரது வீட்டிலும், குடோன் மற்றும் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தி.நகர் மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை அண்ணா சாலையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இதே போன்று இன்னொரு நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகின்றன. சோதனை நடைபெற்று வரும் நிறுவனங்களின் பெயர் விவரங்களும் வெளியாகி உள்ளன.

    இன்று காலை 6 மணியளவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமான வரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை முடிவில் 5 நிறுவனங்களிலும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும். இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மல்லா ரெட்டியின் மகன் சந்தோஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • தெலுங்கானாவில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி.

    இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டியின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு என 50 இடங்களில் நேற்று காலை 5 மணிக்கு சோதனையை தொடங்கினார்.

    இந்த சோதனையில் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து வந்த 400க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் இருந்து ரூ.5 கோடி பணம் மற்றும் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மல்லா ரெட்டியின் மகன் சந்தோஷ் ரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் சந்தோஷ் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சந்தோஷ் ரெட்டிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினரிடம் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    மல்லா ரெட்டியின் மகள், மருமகன் துருக்கிக்கு சுற்றுலாவுக்கு சென்று உள்ளனர். அவர்களது வீட்டில் உள்ள 2 டிஜிட்டல் லாக்கர்களின் பாஸ்வேர்டு எண் தெரியாததால் வருமான வரித்துறை அதிகாரிகளால் லாக்கர்களை திறக்க முடியவில்லை.

    அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    அவர்கள் நாடு திரும்ப தாமதம் செய்தால் வங்கி லாக்கர்களை உடைத்து சோதனை செய்யப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் தொலைபேசி அழைப்பு பட்டியலை வைத்து அவர்கள் யார் யாருடன் எப்போதெல்லாம் பேசினார்கள்.

    எதற்காக பேசினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் குவிந்து இருப்பதால் அந்தந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.
    • பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் மல்லா ரெட்டி மற்றும் அவரது மருமகன் ராஜசேகர ரெட்டி மற்றும் மகள் ஆகியோரின் பெயரில் 300 வங்கி கணக்குகளும், 80 லாக்கர்கள் உள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ராஜசேகர ரெட்டி மற்றும் அவரது மனைவி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளதால் அவர்களின் 2 வங்கி லாக்கர்கள் நேற்று திறக்கப்பட்டு சோதனை செய்தனர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் அவர்கள் இன்று ஐதராபாத் வந்த பின்னர் மீதம் உள்ள 78 லாக்கர்களை திறந்து சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    மேலும் மல்லா ரெட்டியின் உறவினர் வீடுகளில் முதல்முறையாக நவீன தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர்களை வைத்து எந்தெந்த அறையில் நகை, பணம், முக்கிய ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என சோதனை செய்தனர்.

    வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மல்லாரெட்டியின் உறவினர்கள் சிலர் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி உள்ளனர். இருப்பினும் பூட்டப்பட்ட வீடுகளில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் பிரவீன் ரெட்டி வீட்டில் ரூ.1.50 கோடி, திருச்சூல் ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, ரகுநாத ரெட்டி வீட்டில் ரூ.2 கோடி, சுதிர் ரெட்டி வீட்டில் ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10.50 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது வீட்டில் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியதால் மகன் மகேந்தர் ரெட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக போயன பள்ளி போலீசில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் மல்லா ரெட்டி புகார் செய்தார்.

    அவரது புகாரை ஏற்ற போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மேரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சென்னையை சேர்ந்த சந்தீப் என்பவரது பருப்பு குடோன், சேலம் அன்னதானப்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவில் உள்ளது.
    • குடோனை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை, அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சேலம்:

    பொது விநியோக திட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயிலை 5 நிறுவனங்கள் இறக்குமதி செய்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்ததில், ஒன்றிய அரசுக்கு பல ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 23-ந் தேதி தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் காமாட்சி அண்ட்கோ, அருணாச்சலம் இம்பெக்ஸ், பெஸ்ட்டால் மில், ஹிராஜ் டிரேடர்ஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் புரொவைடர் என 5 நிறுனங்களில் இந்த ரெய்டு நடந்தது. இந்த அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையை சேர்ந்த சந்தீப் என்பவரது பருப்பு குடோன், சேலம் அன்னதானப்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவில் உள்ளது. இது அ.தி.மு.கவை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான குடோனாகும். இந்த குடோனை நேற்று முன்தினம் சோதனையிட, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் சென்றுவிட்டனர்.

    இதுபோன்ற திடீர் எதிர்ப்பை எதிர்பாராத வருமான வரித்துறை அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். குடோனை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை, அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காவலுக்கு இருந்த செக்யூரிட்டியிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

    இந்நிலையில் நேற்று, சென்னை வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் வம்சி கிருஷ்ணா சாரா, தர்மபுரி வருமான வரித்துறை அதிகாரி நாகராஜ் உள்பட 5 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பருப்பு குடோனுக்கு வந்தனர். ஏற்கனவே பிரச்சனை நடந்ததால் மாநகர காவல் துறையினரை பாதுகாப்புக்கு வரவழைத்து இருந்தனர். நேற்று மாலை 5 மணிக்கு பருப்பு குடோனுக்கு சென்ற அவர்கள், சீலை உடைத்து ஷட்டரை திறந்தனர். அதேபோல சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். வேறு யாராவது குடோனுக்கு வந்தார்களா? எனவும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு குடோனில் உள்ள பருப்பின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சூப்பர்வைசர் அழகுமுத்துவிடம் விசாரணை நடத்தினர்.

    அங்கு 400 டன் பருப்பு இருப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நள்ளிரவு 1.30 மணிக்கு சோதனையை முடித்தனர். சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புரபஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், ஐதராபாத்திலும் இயங்கி வருகின்றன.
    • புரபஷனல் கூரியர் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சென்னை:

    புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்படாத கூடுதல் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    புரபஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், ஐதராபாத்திலும் இயங்கி வருகின்றன.

    இங்கு சோதனை நடத்துவதற்காக இன்று காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஒரே நேரத்திற்குள் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.

    சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை பிராட்வேயில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் வந்தனர். அவர்கள் அலுவலகத்திற்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த புரபஷனல் கூரியர் நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதே போல் காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு பட்டு ஜவுளிக்கடையிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    • சென்னையில் உள்ள அலுவலகங்களிலும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
    • சோதனை முழுமையாக முடிந்த பின்பே வரி ஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது என்பது தெரிய வரும்.

    சென்னை:

    புரபஷனல் கூரியர் நிறுவனம் இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3500 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது.

    இந்த நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை வருமான வரித்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், பாரிமுனை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, மண்ணடி, கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை 8 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் தமிழகம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த வருமான வரி சோதனை நடந்தது. நேற்று இரவு வரை இந்த சோதனை நடந்தது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புரபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நீடித்தது.

    சென்னையில் உள்ள அலுவலகங்களிலும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்பே வரி ஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது என்பது தெரிய வரும்.

      ராசிபுரம்:

      ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் திம்பநாயக்கன்பட்டியில் கோலியாஸ் கிழங்கு அரைக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

      இங்கு மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு அதை பவுடர் ஆக்கி பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கர்நாடக மாநில வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

      இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் தொடர்பு உள்ள பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெரியசாமிக்கு சொந்தமான தொழிற்சாலையிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

      சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஆலையின் பல்வேறு பகுதிகளில் சென்று சோதனை நடத்திய அதிகாரிகள் தொழிற்சாலையில் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனையால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

      • புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
      • கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

      சென்னை:

      புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் சென்னை உள்பட 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

      கடந்த 2 நாட்களாக சோதனை நடந்து வந்த நிலையில் இன்று 3-வது நாளாக சோதனை நடந்து வருகிறது. சென்னையில் 15 இடங்களில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

      • கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
      • சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

      ராசிபுரம்:

      நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

      இவர் திம்ம நாயக்கன்பட்டி அருகில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார். அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இ.கே.பெரியசாமியின் தொழிற்சாலையில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

      தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.

      • தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
      • கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

      சென்னை:

      சென்னையில் உள்ள தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

      வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் கிண்டியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

      ×