என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோண்டா"

    • புதிய ஷைன் 100 மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய ஷைன் 100 மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD 2 விதிகளுக்கு பொருந்தும் மேம்படுத்தப்பட்ட ஷைன் 100 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த புதிய ஹோண்டா ஷைன் OBD 2 வெர்ஷனின் விலை ரூ.68,767 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹோண்டா ஷைன் 100 மாடலில் 98.98 சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.38PS பவரையும், 8.04Nm டார்க் சக்தியையும் வெளிப்படுத்தும். இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ஷைன் 100 மாடல் பிளாக் - ரெட் , பிளாக் - ப்ளூ , பிளாக் - ஆரஞ்சு, பிளாக் - க்ரே , மற்றும் பிளாக் - கிரீன் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹீரோ ஸ்பிளெண்டர்+ மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்றவற்றுக்கு இந்த புதிய ஹோண்டா ஷைன் 100 போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஹோண்டா நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளியீட்டு விவரங்களை ஹோண்டா அறிவித்து இருக்கிறது.

    ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்.

    2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அமேஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியா உள்பட உலக நாடுகளில் டீசல் என்ஜினுக்கான மோகம் குறைவதை அடுத்து இந்த காரின் டீசல் என்ஜின் வேரியண்ட் இறுதிக்கட்ட உற்பத்தியை எட்டுவது கடினம் தான்.

    டீசல் வேரியண்டிற்கு மாற்றாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம். இது சமீபத்திய சிட்டி செடான் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என தெரிகிறது. தற்போது செடான் பிரிவில் சிட்டி மாடல் மட்டுமே ஹைப்ரிட் வடிவில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.

    இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே போன்ற செட்டப் புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹோண்டா நிறுவனம் தனது புது எஸ்யுவி மாடலுக்கான வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    • புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் "WR-V" பெயரில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய எஸ்யுவி மாடல் 2021 நவம்பர் மாத வாக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த RS எஸ்யுவி கான்செப்ட் மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் ஆகும்.

    புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் ஒரே டீசரை தான் ஹோண்டா இதுவரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரின் படி புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. அதில் புதிய கார் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

    காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் பெரிய க்ரோம் ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான பாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இண்டீரியர் மற்றும் என்ஜின் விவரங்கள் மர்மமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த எஸ்யுவி மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூப் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சர்வதேச வெளியீடு இந்தோனேசியாவில் நடைபெற இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும்.

    ஹோண்டா எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே என்ஜின் முன்னதாக ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் டீசல் என்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • முற்றிலும் புது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய சிட்டி மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இது 5th Gen சிட்டி மாடலின் பேஸ்லிபிட் வெர்ஷன் ஆகும். புதிய ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் முதற்கட்டமாக தாய்லாந்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

    புதிய பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. எனினும், பவர்டிரெயின் ஆப்ஷன்கள் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஸ்பை படங்களின் படி ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய பாக் லேம்ப் ஹவுசிங், ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்பை படங்களில் காரின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், இதில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மாற்றப்பட்டு அதிக உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் ஹோண்டா சிட்டி மாடலில் டீசல் என்ஜின் நீக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது விற்பனை செய்யப்படும் டீசல் என்ஜின் கார்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனைக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.

    இவைதவிர ஹோண்டா ஜாஸ், WR-V மற்றும் 4th Gen சிட்டி மாடல்களின் விற்பனை விரைவில் நிறுத்தப்படும் என ஹோண்டா ஏற்கனவே அறிவித்து விட்டது. அமேஸ் மற்றும் சிட்டி மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய எஸ்யுவி மாடலை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய WR-V மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது தலைமுறை ஹோண்டா WR-V ஏராளமான ADAS அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி முற்றிலும் புதிய WR-V மாடலை இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தோனேசியாவில் இருந்தபடி புதிய ஹோண்டா WR-V சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோண்டா WR-V எஸ்யுவி அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ADAS உள்பட ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்டைலிங் மற்றும் டிசைனை பொருத்தவரை புதிய WR-V மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் கார் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் க்ரோம்-ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்-கள், முன்புறம் பம்ப்பர் மாற்றப்பட்டு ரி-டிசைன் செய்யப்பட்ட ஃபாக் லேம்ப் ஹவுசிங், பிளாக் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. புதிய WR-V மாடல் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் கொண்டுள்ளது.

    ஹோண்டா WR-V மாடலின் கேபின் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் அமேஸ் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய WR-V உள்புறம் ஆல்-பிளாக் தீம், ஸ்டீரிங் வீல், டேஷ்போர்டு, டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 7 இன்ச் தொடு திரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் ஹோண்டா WR-V மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சிவிடி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா WR-V இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்திய சந்தைக்காக முற்றிலும் புது எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டு வருகிறது.

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளது.
    • புது சலுகைகள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ஹோண்டா நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். புதிய சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொருந்தும்.

    நவம்பர் மாத சலுகைகளை பொருத்தவரை ஹோண்டா WR-V மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹோண்டா WR-V வாங்குவோர் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான பலன்களை பெறலாம். இதில் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 36 ஆயிரத்து 144 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, கூடுதலாக ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா சிட்டி 5th Gen மாடலுக்கு ரூ. 59 ஆயிரத்து 292 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 32 ஆயிரத்து 292 மதிப்புள்ள இலவச அக்ச்ஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன் பெட்ரோல் சிவிடி மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா ஜாஸ் மாடலை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 11 ஆயிரத்து 896 மதிப்பிலான அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி 4th Gen வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் லாயல்டி பலன்கள் மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர வேறு எந்த பலன்களும் இந்த மாடலுக்கு வழங்கப்படவில்லை.

    • ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய CB500F மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • வெளியீட்டுக்கு முன் ஹோண்டா CB500F மோட்டார்சைக்கிள் பெங்களூரு பிங்விங் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் புதிய CB500F மோட்டார்சைக்கிளை பெங்களூருவில் உள்ள பிங்விங் விற்பனை மையத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறது. மோட்டார்சைக்கிள் அறிமுகமாகும் முன் அதனை விற்பனையகத்தில் காட்சிப்படுத்துவது ஹோண்டா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும்.

    புதிய மோட்டார்சைக்கிளை பார்க்க வருமாறு விற்பனையகம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் புதிய மோட்டார்சைக்கிளுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து வெளியீடு நடைபெற இருக்கிறது.

    ஹோண்டா CB500F மாடலில் 471சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஸ்லிப்ட் மற்றும் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஹார்டுவேரை பொருத்தவரை ஹோண்டா CB500F மாடலில் முன்புறம் 41 மில்லிமீட்டர் ஷோவா செபரேட் பன்ஷன் போர்க் பிக் பிஸ்டன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

    Photo Courtesy: TeamBHP

    • ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் உற்பத்தி 25 ஆண்டுகளுக்கும் முன்பே துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய உற்பத்தியில் இருபது லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் பிரபல செடான் மாடலாக இருக்கும் ஹோண்டா சிட்டி இருபது லட்சமாது யூனிட்டாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் தபுகாரா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    1997 டிசம்பர் மாத வாக்கில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகளை துவங்கியது. முதன் முதலில் ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உள்நாட்டு தேவை மட்டுமின்றி 16 நாடுகளுக்கும் ஹோண்டா நிறுவனம் அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் இந்திய வியாபாரத்தை கட்டமைப்பதற்காக ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறது. 2020 வாக்கில் கிரேட்டர் நொய்டா ஆலை மூடப்பட்டதில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒற்றை உற்பத்தி ஆலை ராஜஸ்தானில் செயல்பட்டு வருகிறது. 450 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் தற்போது ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா WR-V மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இத்துவர தேர்வு செய்யப்பட்ட ஹோண்டா கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான சலுகைகளுடன் கிடைக்கிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய 100சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய 100சிசி பைக் ஹீரோ ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹோண்டாவின் புதிய கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டாவின் புதிய 100சிசி பைக் பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகின்றன. இந்த மாடல் ஹீரோ ஸ்பிலெண்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதிய ஹோண்டா 100சிசி பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும் இது மிக குறைந்த விலையில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் 100சிசி பைக் விலை ரூ. 75 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இது நம்பத்தகுந்த கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் ஆக இருக்கும். இந்த பைக் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற டிசைன் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கும்.

    இதில் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் செட்டப், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும். பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் செட்டப் வழங்கப்படலாம். புது 100சிசி மோட்டார்சைக்கிள் வெளியீடு மட்டுமின்றி இந்திய சந்தையில் தனது விற்பனையகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.

    ஊரக பகுதிகளில் 11 புதிய டச்பாயிண்ட்களை சமீபத்தில் துவங்கிய ஹோண்டா, நகர்ப்புறங்களில் 119 கூடுதல் விற்பனை டீலர்களை நியமனம் செய்துள்ளது. இது மட்டுமின்றி 10 பெஸ்ட் டீல் அவுட்லெட்கள், 239 அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களை ஹோண்டா திறந்து வைத்துள்ளது.

    • ஹோண்டா நிறுவனத்தன் புதிய தலைமுறை அக்கார்டு மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய அக்கார்டு மாடல் இரு பெட்ரோல் மற்றும் நான்கு ஹைப்ரிட் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் 11th Gen அக்கார்டு மாடல் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் அளவில் பெரியதாகவும், முன்பை விட அதிகளவு ஆடம்பரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா சிவிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அக்கார்டு மாடல் அதன் பாரம்பரிய தோற்றத்தை இழக்காமல் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

    புதிய ஹோண்டா அக்கார்டு மாடலில் குறிப்பிடத்தக்க அம்சமாக 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புது மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் நீக்கப்பட்டு இருக்கிறது.

    ஹைப்ரிட் அக்கார்டு மாடலில் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் மற்றும் இரு மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 335 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    காரின் வெளிப்புறம் மெல்லிய டிசைன் கொண்டுள்ளது. முன்புறம் அப்ரைட் கிரில், பிளாக்டு அவுட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிஸ்டின்டிவ் ஹாரிஜாண்டல் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அக்கார்டு மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரியர் ஸ்பாயிலர் உள்ளது.

    உள்புறத்தில் பிரீமியம் பாகங்கள், அதிக சவுகரியமான இருக்கைகள், 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்ட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா அக்கார்டு மாடலின் விலை மற்றும் வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    • ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.
    • புதிய எலெக்ட்ரிக் பைக் அதிக சக்திவாய்ந்த பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது ரோஸ் பரேட்-க்காக புது டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது. ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன திட்டம் அனைவரும் அறிந்ததே. இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி விட்டன. இதில் சர்வதேச சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கும் பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

    இதே தகவல்களில் இந்தியாவுக்காக ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்ய இருப்பதும் அம்பலமானது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் சந்தையில் பெருமளவு வாடிக்கையாளர்களை குறிவைத்து வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இவை அதிக செயல்திறன் மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என தெரிகிறது.

    அமெரிக்க சந்தைக்காக திட்டமிடப்பட்டு இருக்கும் புது எலெக்ட்ரிக் பைக் மிட்-பெர்ஃபார்மன்ஸ் ஸ்டிரீட் மாடல் ஆகும். இந்த மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார், 150 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • ஹோண்டா CB300F மோட்டார்சைக்கிளின் இந்திய விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த மோட்டார்சைக்கிளில் உள்ள 293சிசி என்ஜின் 24.1 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது CB300F மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. ஹோண்டா பிக் விங் விற்பனை மையங்கள் CB300F மாடலின் விலையில் ரூ. 50 ஆயிரம் குறைத்துள்ளன. ஆகஸ்ட் மாத அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா CB300F மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    தற்போதைய விலை குறைப்பை அடுத்து ஹோண்டா CB300F மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. விலை அடிப்படையில் புதிய ஹோண்டா 300 சிசி மோட்டார்சைக்கிள் கேடிஎம் 125 டியூக் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்பட இருக்கிறது.

    ஹோண்டா CB300F மாடலில் 293சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு, SOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.1 ஹெச்பி பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 276mm டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் வழஙஅகப்பட்டு இருக்கிறது. ஹோண்டா CB300F மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×