என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேற்பார்வையாளர்"
- வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
- வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் அறிவுறுத்த லின் படி வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடை பெற்றது. செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில் விக்கிர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மற்றும் ஜென ரேட்டர் வசதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு ஏ.சி., சுகாதார ஆய்வாளருக்கு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு கணினி வழங்குதல் மற்றும் செல்லம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், நாட்டாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை பேருந்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர்கள், செல்லம்பட்டி, நாட்டாபட்டி, தும்மக்குண்டு, விக்கிரமங்கலம் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள் மற்றும் மருத்து வமில்லா மேற்பார்வை யாளர், கோவிலாங்குளம், முதலைக்குளம் ஊராட்சி செயலாளர்கள் ஜெயபால், பாண்டி, வாய்ஸ் டிரஸ்ட் தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் நன்றி கூறினார்.
- மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
மானாமதுரை நகராட்சி வளமீட்பு பூங்காவில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்குவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சுரைக்காய், பூசணிக்காய், பலாப்பழம் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
- ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
- பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.
இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.
இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.
தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.
- பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
- இது அவருக்கு இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன் (வயது 45). வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட போலீஸ் செக்போஸ்ட் அருகே குப்பை கிடந்தது. அதை சுத்தம் செய்யுமாறு துப்புரவு ஆய்வாளர் குருசாமியும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தன் என்பவரும் சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால் கடைசிவரை அவர் துப்புரவு பணியாளர்களை வைத்து அந்த பகுதியை சுத்தம் செய்யவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் குருசாமியிடம் உடனடியாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அங்கு துப்புரவு பணியாளர் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. இந்நிலையில் வெங்கடேசன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் தெரிவிக்கவில்லை. அதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசனை இரண்டாவது முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி பார்வையிட்டார்.
- வருகிற 10-ந் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மூலமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி தொடங்கியது.
இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி பார்வையிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கனகா, மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். வருகிற 10-ந் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்