என் மலர்
நீங்கள் தேடியது "கொடை விழா"
- பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
- செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
தொடர்ந்து யாக சாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்து கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை, வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பகல் 11 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், அலங்கார பூஜையும், பிற்பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, நாளை (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.
9-ந் தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு 7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் பூஞ் சப்பரத்தில் பவனி, 10-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.
- ஐப்பசி கொடை விழா கடந்த 5 நாட்கள் நடந்தது.
- சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பரமன்குறிச்சியை அடுத்த வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா கடந்த 5 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் அம்மன், செல்வவிநாயகர், சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி, சப்பர பவனி, கரகாட்டம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, 108 பால்குடம் பவனி, சுமங்கலி பூஜை, மஞ்சள் நீராடி அம்மன் வீதியுலா வருதல், நண்பகல் மற்றும் நள்ளிரவில் நேரங்களில் அலங்கார பூஜையுடன் கும்பம் தெருவீதி உலாவருதல், கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, சிறப்பு அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு பிரசாதம் வழங்கல், இரவில் திரைப்பட இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- செங்கோட்டை அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 8 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.
- கொடைவிழாவை முன்னிட்டு கோவிலில் நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள மிகபிரசித்தி பெற்று விளங்கும் அப்பாமாடசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 8 நாட்கள் திருவிழா நடக்கும். இந்த திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி திருக்கால் நாட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அப்பாமாடசாமிக்கு ஒவ்வொரு நாளும் விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜை, அருள் பிரசாதங்களையும் மண்டகப்படிதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கொடைவிழா முன்னிட்டு 22-ந்தேதி இரவு குடியழைப்பு, குற்றாலம் தீர்த்தம் எடுத்தல் மற்றும் விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கொடை நாட்களில் மதியம் உச்சிகால பூஜையும், சாஸ்தா புறப்பாடு, சிறப்பு பூஜை மற்றும் மாலை மணிகண்டன், சரவணன் குழுவினரின் மகுடம் ஆட்டம், மாரியம்மாள் தங்கராஜ் வில்லிசையும் நடைபெற்றது. நள்ளிரவில் சாமப்படைப்பு நடைபெற்றது. பக்தர்கள் தங்களது நேமிசங்களை செலுத்தினர். செங்கோட்டை, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) மதியம் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.
- கொடை விழா இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
- மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.
மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
இன்று அதிகாலை 5 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு லலிதா சகஸ்ரநாம வழிபாட்டை நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆஸ்ரமத்தை சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்தியாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை ஆகியவை நடைபெறுகிறது.
நாளை (புதன்கிழமை) அதிகாலை 5,.30 மணிக்கு பக்திகானம், காலை 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுருள் அழைப்பு, பகல் 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சிங்காரி மேளம், பிற்பகல் 3 மணிக்கு அம்மன் பவனி, மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு அன்னதானம், 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு நாதஸ்வரம், 7 மணிக்கு வில்லிசை, மாலை 5 மணிக்கு பக்திகானம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு மண்டல பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
மேலசங்கரன்குழி ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 6 மணிக்கு புதிய கொடிமரம் நாட்டப்பட்டது. 23-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பும், 25-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருஏடுவாசிப்பு பட்டாபிஷேகமும் நடந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு சுவாமி திருக்கோவில் பவனி வருதலும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.
வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 10 மணிக்கு கீதா பாராயணத்தை யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். இரவு 8மணிக்கு சுவாமி பணிவிடை, 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு சுவாமி அலங்கார வாகன பவனி வருதல் ஆகியவை நடைெ்பறுகிறது. அதிகாலை 3 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.
- இந்த விழா 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
- விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.
காட்டாத்துறை குழிவெட்டான்விளை பராசக்தி அம்மன் கோவில் கொடைவிழா இன்று(புதன்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 7 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழாவில் நாளை(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு பஜனை, இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு லலிதா ஸ்கஸ்ரநாம அர்ச்சனை, இரவு 7 மணிக்கு இந்து சமய கருத்தரங்கம், 8.30 மணிக்கு அய்யாவழி இன்னிசை விருந்து, 28-ந்தேதி மதியம் 2 மணிக்கு யானை மீது அம்மன் எழுந்தருளி பவனி வருதல், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 29-ந்தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு மஞ்சள்பால் குளித்தல், மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வினோத், துணைத்தலைவர் அஜித், செயலாளர் விஜித், துணை செயலாளர் சஜின், பொருளாளர் மத்தியாஸ், ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், கவுரவ தலைவர் வின்சென்ட் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
- கொடை விழாவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
- திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா 2நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு மாக்காப்பு பூஜை, அலங்கார பூஜை, வில்லிசை. 2-ம் நாள் காலை அபிஷேக ஆராதனை, கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். பூஜையினை திசையன்விளை அம்பிகை தாசன் ஆர். ஜி. பாலன் வழி நடத்தினார். தொடர்ந்து விஷேச புஷ்பாஞ்சலி, தீபாராகனை நடைபெற்றது. பின்னர் கனியான் கூத்து, வில்லிசை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
- எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
- ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய மாசிக் கொடை விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டை ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு 86-வது மாநாடு மார்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ைஹந்தவ சேவா சங்கம், மாநாட்டை நடத்தக் கூடாது என்றும், அரசு தான் நடத்த வேண்டும் என்றும், மாநாடு பந்தலுக்கு டெண்டர் கொடுத்து பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவில் ஸ்ரீகாரியம், ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது பக்தர்களுக்கும், சேவா சங்க உறுப்பினர்களுக்கும் வருத்தத்தையும் வேதனையையும் அளித்துள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில், கடந்த 85 ஆண்டுகளாக நடந்தது போல இந்த ஆண்டும், இந்து சமய மாநாட்டை அதே இடத்தில்,ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாச்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கோவில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதேபோல இந்தாண்டு கொடை விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 10-ம் திருநாளன்று தீப்பாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து மாலையில் பறவை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டாற்று பாலம் அருகே, விரதம் இருந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சிலர் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர். பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்கிட, பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடி எடுத்தார். பறவை காவடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வலம் வந்து தீப்பாச்சி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கொத்தனார்விளை ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு நடந்தது
- தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை சார்பில் சந்தனகுடம் பவனி நடக்கிறது.
கன்னியாகுமரி :
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருறது. விழா நாட்களில் கணபதி ஹோமம், பஞ்சாபிஷேகம், திருக்கொடியேற்று, தங்கத் தேர் உலா, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, கீழ்கரை பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி, மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்து களப பவனி, கொத்தனார்விளை ஊர் பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு நடந்தது. 5-ம் நாளான இன்று மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. நிறுவனத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதம் மற்றும் தேர்மாலையுடன் யானை மீது சந்தனகுடம் பவனி நடக்கிறது.
6-ம் நாளான நாளை (10-ந் தேதி) காலை 6.30 மணிக்கு உஷபூஜை, பகல் 12 மணிக்கு பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பில் சந்தனகுடம் பவனி, 1 மணிக்கு உச்சபூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15-க்கு குளச்சல் களிமார் கணேசபுரம் பிள்ளையார் கோயிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது. நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடைபெறும். 7-ம் நாள் மாலை 6 மணிக்கு பாலப்பள்ளம் பிடாகையில் இருந்து யானை மீது களபம் பவனி, மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை சார்பில் சந்தனகுடம் பவனி நடக்கிறது. 8-ம் நாள் பகல் 12.30 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் இருந்து மாவிளக்கு பவனி, மாலை 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி நடக்கிறது. 9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடக்கிறது 10-ம் நாள் இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
- மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டேந்தி சரணகோஷத்துடன் தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
இங்கு கடந்த 5 ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 14-ந்தேதி வரை பத்து நாட்கள் மாசிக் கொடை விழா நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் எட்டாம் கொடை விழா நடக்கிறது. காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை யொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
விழாவின் தொடர்ச்சியாக 25-ந்தேதி மீனபரணி கொடைவிழா நடக்கிறது.
- கொடை விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
- 25-ந்தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்தகோவிலிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வதால் 'பெண்களின் சபரிமலை' என போற்றப்படுகிறது.
இங்கு கடந்த 5-ந் தேதி மாசி கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை விழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
எட்டாம் கொடை விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவின் தொடர்ச்சியாக 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
- 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.
- ‘பெண்களின் சபரிமலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு கடந்த 5-ந் தேதி மாசிகொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தோப்புகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் கடற்கரைபகுதி, லட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை, சாஸ்தான் கோவில் சாலை போன்ற இடங்களில் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது.
எட்டாம் கொடை விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 25-ந் தேதி மீனபரணிக் கொடைவிழா நடக்கிறது.