என் மலர்
நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி பலி"
- உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
- கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரிசேரி என்ற ஊரில் திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
திருப்பதியை காப்பற்ற முயன்ற அவரது மனைவி லலிதா மற்றும் திருப்பதியின் பாட்டி பாக்கியம் ஆகியோரும் மின்சாரம் தாக்கியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
- கடுமையான சூறைக்காற்று வீசியது.
- கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்பு.
பல்லடம்:
திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செய்த மழையின் போது மங்களம் சாலை, இடுவாய், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான சூறைக்காற்று வீசியது.
இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பங்களும் சாய்ந்த தால் சின்ன ஆண்டி பாளையம், குளத்துபுதூர், இடுவாய் பல்லடத்தில் பல்வேறு பகுதிகளிலும் மின்சார வினியோகம் தடைப்பட்டது.
இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தவித்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியிலும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பூர் அம்மா பாளையம் பாறைக்குழி பகுதியில் உள்ள தகர கொட்டகையில் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ் என்பவர் தங்கி இருந்தார்.
மழையின் போது மேற்கூரை தகரம் மற்றும் கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பல்லடம் மங்கலம் ரோடு சிதம்பரனார் வீதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்லடம் நகரில் மின்தடை ஏற்பட்டது.
பல்லடம் மகாலட்சுமி நகர் அருகே பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.இதே போல காமநாய க்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
பல்லடம் அருகே பச்சாங்காட்டுபாளையம் பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மதுரையை சேர்ந்த செல்லையா என்பவரது மகன் வினோத் (40), ரோட்டில் நடந்து செல்லும் போது கீழே கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.
- வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.
- வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது50) இவரது மனைவி விஜயலெட்சுமி இருவரும் தங்களது மகளுடன் அறந்தாங்கியில் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்த அவர் தனது சொந்த ஊரில் உள்ள பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக மாங்குடிக்கு சென்றுள்ளார். அங்கே வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியதும் சந்தேக மடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல்த்துறையினர், உள்ளே சென்று பார்க்கையில் வைத்தியலிங்கம் காலில் மின் ஒயர் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்டது.
பழைய வீட்டை புதுப்பிக்க சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்து 4 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார்.
- அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). பட்டதாரியான இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார்.
மேலும் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து கொண்டு பட்டதாரியாக இருந்ததால் அரசு தேர்வுக்கு முயற்சி செய்து கொண்டு விவசாயத்தை செய்து கொண்டு தன் குடும்பத்தையும் கவனித்து வந்தார்.
தன்னுடைய விவசாய நிலத்திற்கு விவசாயத்திற்கான பூந்தோட்ட மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் விவசாயத்தில் போதிய வருமானம் இன்மையாலும் இரண்டு மாதங்களாக தொடர் மழையின் காரணமாகவும் கடந்த மூன்று மாத காலமாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தாமல் பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.
அதனால் மின்வாரிய ஊழியர்கள் முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். இதனால் தங்களின் அத்தியாவசிய தேவைகள் விவசாயம் உள்ளிட்டவற்றிற்காக தண்ணீர் தேவைப்பட்டதன் காரணமாக வேறு வழியின்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கடன் வாங்கி தன்னுடைய மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தியுள்ளார்.
மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும். உங்களுக்கு அப்படி உடனே தேவை என்று இருந்தால் நீங்களே மின் இணைப்பினை செய்து கொள்ளுங்கள் என கூறியதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் விவசாயி முனுசாமி மின்சார ட்ரான்ஸ்பார்மர் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார்.
அப்பொழுது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தது அவர் காயம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
தற்போது அவருடைய மனைவி செல்வி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். மெத்தன போக்குடன் செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த மின் விபத்து குறித்து இண்டூர் உதவி மின் பொறியாளர் அருணகிரியிடம் கேட்ட பொழுது சம்பந்தப்பட்ட விவசாயி மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின் மின் கட்டணத்தை செலுத்தி விட்டார். மின் இணைப்பை வழங்க வேண்டும் என கேட்ட பொழுது அப்பகுதியில் இருந்த ஊழியர் மற்ற பகுதியில் பணியில் இருந்ததால் சிறிது நேரம் ஆகும், வந்தபின் மின் இணைப்பை தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அதற்குள் முனுசாமி மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்துள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் ஒரு சில சமயங்களில் மின் இணைப்பு பணிகளுக்கு சிறிது நேரம் ஆகும் பொழுது பொது மக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும்.
அவசரப்பட்டு தாங்களாகவே மின் இணைப்பை சீர் செய்கிறேன் என்று ஈடுபடும் பொழுது இது போன்ற தவிர்க்க முடியாத மின்விபத்துக்கள் ஏற்படுகின்றது. பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
பட்டதாரி விவசாயியான முனுசாமி மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை கொடுக்க முயன்ற பொழுது மின்சாரம் தாக்கி பலியானது குறித்து பென்னாகரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- தொழிற்சாலையில் கிரேனை இயக்கிய போது விபரீதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலா பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் லாலாபேட்டை பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் லாலாபேட்டையை அடுத்த கிருஷ் ணாவரம் பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் இருந்து, தனது தொழிற்சாலைக்கு தேவையான பொருட் களை ஏற்றி வர, டிராக்டரில் சென்று உள்ளார். அங்குள்ள தொழிற்சாலையில் கிரேன் இயக்க ஆள்இல்லாததால், அவரே இயக்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தானே திருட்டு தனமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
- அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கண்ணுகாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 39). இவர் ஒட்டி வந்தார். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
ஆஷா இங்குள்ள நிலத்தில் விவசாயம் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தருமன் ஊருக்கு வந்தார். அவர் தங்களது அவரை தோட்டத்துக்கு சென்றுள்ளார்.அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது.
இதை பார்த்த தருமன் தானே திருட்டு தனமாக இணைப்பு கொடுக்க முயற்சி செய்துள்ளார்.அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஆஷா தந்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மணிகண்டன் கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
- அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரை சே ர்ந்தவர் பள்ளிப்பட்டான். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியா ற்றி வந்தார். இவர் அதே ஊரில் உள்ள விவசாயிக்கு சொந்தமான வயலில் பழுதான மின் மோட்டா ரை பழுது நீக்கும் பணியில் ஈடுப ட்டிருந்தார். அப்போது மின்கம்ப த்தில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டதாக கூறப்படு கிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொ ன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மின் கம்பி அறுந்து விழுந்து பரிதாபம்
- அதிகாரிகள் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகு தியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (53). விவசாயியான இவர் மாடுகளையும் மேய்த்து வருகிறார்.
நேற்று வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் மீது மின்சார கம்பி விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தன.
இதேபோல புளிய மங்கலம் ஸ்ரீராம் நகர் அறுந்து பகுதியை சேர்ந்த குமார சாமி என்பவரது பசுமாடும் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தது.
அரக்கோணம் அடுத்த அணைக்கட்டாபுதூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 2 செம்மறி ஆடுகள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்ற 2 ஆடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து அந்தந்த பகுதி விஏஓகள் அளித்த தகவலின் பேரில் அரக் கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.
- சிவகுமார் காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார்.
புதுச்சேரி:
காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது57). இவர், காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.இவர் சம்பவத்தன்று மின்சாரம் தாக்கி காயம் அடைந்தார். உடனே காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூரை அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு உதயநாத் பரிடா (29) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விளக்குகள் எரியாததால் உதயநாத் பரிடா சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கஜேந்திரன் தோட்டத்தில் காட்டுப்பன்றி அட்டகாசத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அடிபட்டு பலியாகி இருப்பது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கீழக்கலங்கல் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 40). லோடு ஆட்டோ டிரைவர்.
இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் கஜேந்திரன் தோட்டத்தில் காட்டுப்பன்றி அட்டகாசத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அடிபட்டு பலியாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உயிரிழந்த கஜேந்திரன் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அதுவரை அவரது உடலை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி கஜேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கீழ கலங்கல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களுடன் பழனிநாடார் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. கெங்காதேவி, டி.எஸ்.பி. சகாயஜோஸ், தாசில்தார் தெய்வசுந்தரி, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் , சுதந்திர தேவி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
- கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
- புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவினாசி :
திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரை சேர்ந்த ராஜகோபால் மகன் நாகராஜ் (வயது 46).இவரும் கணேசன் என்பவரும் அவினாசி அருகே கந்தசாமி என்பவருடைய கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்கம்பத்தில் இருந்து மீட்டருக்கு வரும் வயரை எதிர்பாராத விதமாக நாகராஜ்பிடித்த போது பழைய வயர் என்பதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கணேசன் உயிர்தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.