search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார்டுகள்"

    • உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    குன்னூர்

    குன்னூர் அருகே உள்ள உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டு பகுதிகளில் ஆதிவாசி பழங்குடி மக்களும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.


    உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 16-வது வார்டை சேர்ந்த சித்ரா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பேரூராட்சி தலைவர் ராதா தலைமையிலும், பேரூராட்சியின் துணைத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலையிலும் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செயல்அலுவலர் ரவிக்குமார், 18-வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் நிறைமாத கர்ப்பிணியான சித்ராவுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி வாழ்த்தி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    • குன்னூர் உலிக்கல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது.
    • 12-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாஸ்கரன் மின்விளக்குகள் டெண்டர் விடுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ராதா மற்றும் துணை தலைவர் ரமேஷ், தலைமை தாங்கினர்.பேருராட்சி எழுத்தர் மேகலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.இதில் 12-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாஸ்கரன் மின்விளக்குகள் டெண்டர் விடுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

    அதற்கு பேரூராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் 6-வது வார்டு மணிமாலா பேசுகையில் நான்சச் எஸ்டேட்டுக்கு சொந்தமான சந்தக்கடை பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என்றார். இதேபோல் 18 வது வார்டு ட்ருக் பகுதியில் கடந்த 7 மாத காலமாக பணிகள் நடக்கவில்லை. எனவே எஸ்டேட் பணியாளர்களுக்கு முறையான கழிப்பிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த துணை தலைவர் பேரூராட்சியில் போதிய அளவு நிதி இல்லாதததால் இந்த பணிகள் அனைத்தும் படிபடியாக செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

    • பொன்மனை பேரூராட்சி நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மூன்று மாதங்களுக்கு மட்டும் அனுமதி தருவது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
    • குலசேகரம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைபடி குப்பை கிடங்கு அமைக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான குலசேகரம் பேரூராட்சி பகுதியில் 3 மருத்துவ கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளன. பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாமல் திணறி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சேகரி க்கப்படும் குப்பைகளை குலசேகரம் சந்தை பகுதி யில் கொட்டி வந்தார் கள். அந்த பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அருகில் உள்ள திற்பரப்பு பேரூராட்சிக்கு சொந்தமான திருநந்திகரை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தார்கள். அந்த பகுதியிலும் பொது மக்கள் எதிப்பு தெரிவித்ததால் குலசேகரம் பேரூ ராட்சியினர் மாற்று இடம் தேடினார்கள்.

    மாவட்ட நிர்வா கத்தின் அனுமதி பெற்று பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சாணி பகுதியில் செயல்படும் பொன்மனை பேருராட்சி மூலம் செயல்படுத்தி வரும் இயற்கை உரம் தயாரிக்கும் பூங்காவில் கொட்டி வந்தார்கள்.

    குலசேகரம் பேருராட்சியில் இருந்து கொண்டு செல்லும் குப்பை களை கொட்ட அந்த பகுதி யில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். இதனால் அடிக்கடி குப்பை வண்டிகளை மடக்கி சிறை பிடித்து வந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் குப்பை வண்டியை விடு வித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை குலசேகரம் பேருராட்சிக்கு சொந்தமான வண்டி குப்பைகளை ஏற்றி கொண்டு செல்லும்போது பொன்மனை பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்களும், பொதுமக்களும் சேர்ந்து பெருஞ்சாணி பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வண்டியை சிறைபிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், செயல் அலுவலர் லிசி, பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த னார்கள் அதன் அடிப்ப டையில் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டனர்.

    அதற்குள் குலசேகரம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைபடி குப்பை கிடங்கு அமைக்கப்படும். அதுவரை இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதி தர வேண்டும் என்று கேட்டனர்.

    பொன்மனை பேரூராட்சி நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மூன்று மாதங்களுக்கு மட்டும் அனுமதி தருவது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.

    ×