search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230466"

    • மலர் கண்காட்சி நடக்கும் பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.100, சிறியவருக்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி ஆகியவை நடந்தது.

    தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வகை மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. எனவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்தனர்.

    ஊட்டி பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.50, சிறியவருக்கு ரூ.30 நுழைவு கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் மலர் கண்காட்சி நடக்கும் பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.100, சிறியவருக்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    அந்த வகையில் நடப்பாண்டு கோடை விழாவில் மலர் கண்காட்சி நடந்த பூங்காக்களுக்கு கடந்த 2 மாதங்களில் மட்டும் சராசரியாக 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். இதன்மூலம் தோட்டக்கலை துறைக்கு ரூ.6.20 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளது.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடந்த பழக்கண்காட்சியை காண சுமார் 2 லட்சத்து 216 பேர் வந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 ஆயிரம் பேர் அதிகமாக சிம்ஸ் பூங்காவுக்கு வந்து உள்ளனர். பழக்கண்காட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தாசில்தார் சிவக்குமார் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.

    • நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (19) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த போஸ்டரில் விஜய் ஆண்டனியின் படங்களில் இதுதான் அதிக வசூல் பெற்ற படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 411 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • இந்த நீதிமன்றத்தில் ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 800 வசூல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் கோர்ட்டில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 411 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 206 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் இந்த நீதிமன்றத்தில் ரூ 6 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

    இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் போலீசார்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டச் சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது.
    • இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை இந்த விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது. இந்நிலையில் தற்போது விற்பனைகூடம் வயலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தினால், கடந்த 60 ஆண்டு காலமாக, இப்பகுதி விவசாயிகளுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் எந்தவித சேவையும் செய்யவில்லை.

    விற்பனைக்கூடத்திற்கு, வெளியே நடக்கும் வணிகத்திற்கு மட்டும் சந்தை கட்டணம் வசூலித்து வருகின்றனர். விற்பனைக்கூடம் வெறும் கட்டண வசூலிப்பு அலுவலகம் போல் மட்டும் செயல்பட்டு வருகின்றது. சரியான முறையில் இந்த விற்பனைகூடம் செயல்பட்டால் இங்குள்ள விவசாயிகளும் வணிகர்களும் விற்பனை கூடத்தின் சேவையைப் பெற்று பயன்பெறுவர். இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு நிரந்தரமாக்கவும், சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விற்பனை க்கூடம் அமைக்கவும் அங்கு நடைபெறும் வணிகத்திற்கு மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்சி செய்யும் என வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

    • ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டதால் வசூலில் விறுவிறுப்பு
    • ரூ.18 கோடி வசூலாகி உள்ளது

    திருச்சி,

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் இந்த முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனும் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.அதில், திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000 வரை ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இந்த ஊக்கத்தொகை அறிவிப்பினால் திருச்சி மாநகராட்சி வரி வசூல் அதிகரித்துள்ளது.குறிப்பாக முதல் அரையாண்டு வரி சுழற்சிக்கான மொத்த நிலுவைத் தொகையில் 32 சதவீதத்தை திருச்சி மாநகராட்சி வசூலிக்க உதவியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரூ.55 கோடி மொத்த வரி பாக்கியில் ரூ.18 கோடியை மாநகராட்சி வசூலித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊக்கத்தொகை அறிவிப்பால் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரி செலுத்தியுள்ளனர்.ஊக்கத்தொகை வழங்குவதால் மாநகராட்சிக்கு இழப்பு ஏதுமில்லை. டெபாசிட்டுக்கு நாங்கள் பெறும் வட்டி, வழங்கிய ஊக்கத்தொகையை ஈடுசெய்யும் எனக் கூறினர். மக்கள் ஒரு மண்டலத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.60 லட்சம் வரை செலுத்துகிறார்கள். முதல் அரையாண்டு வரிச் சுழற்சியில் மட்டுமே ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு காலாவதியாகிவிட்ட நிலையில், குடியிருப்பாளர்கள் வரி செலுத்தினால் அது இன்னும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார்.
    • ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார். இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார்.

    சேலம்:

    சேலம் அமானி கொண்ட லாம்பட்டி காட்டூரைச் சேர்ந்தவர் மோகன். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செய லாளரான இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் தனது இரு சக்கர வாக னத்தை நிறுத்தினார். அங்கிருந்த பணியாளர் வாகனத்திற்கு 15 ரூபாய் மற்றும் டோக்கன் வழங்கினார்.

    அப்போது வண்டியில் ஹெல்மெட் உள்ளது என மோகன் கூறினார். அதற்கு பணியாளர் ஹெல்மெட் காணாமல் நான் பொறுப்பு கிடையாது என்றார்.

    இதை அடுத்து அதனை பாதுகாப்புக்கு 15 ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெல்மெட்டுக்கு கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
    • ‘லக்கேஜ்’ எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர், ரெயில்கள், ஸ்டேஷன்களில் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.

    கடந்த 2022 ஏப்ரல் முதல், 2023 மார்ச் வரையான நிதியாண்டில் டிக்கெட் சோதனையின் போது, 15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம், 14 கோடியே 10 லட்சத்து 7,028 ரூபாய், முறையற்ற பயணம் செய்தவர்களிடம் 1.43 கோடி ரூபாய், கூடுதல் 'லக்கேஜ்' எடுத்து வந்தவர்களிடம் 3.55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு ள்ளது.2021-22ம் நிதியாண்டில், 11.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதை விட, 4.30 கோடி ரூபாய் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது
    • , சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.


    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    • பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
    • 2 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றன.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிப்ரவரி 13-ந்தேதி முதல் நேற்று (5-ந்தேதி) வரை 21 நாட்கள் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    அதில் ரூ.7,11,994 ரொக்கமாகவும், 2 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்க பெற்றன.

    • உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர்.
    • காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெரு மாள் கோவில் ஆய்வா ளர் ஹேமதர் ரெட்டி, விஜிலென்ஸ் அதிகாரிகள் அசோக் குமார், சூரிய நாராயணா மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

    இந்த உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வசூல் ஆகி இருந்தது.

    • ராமேசுவரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 ேகாடி 19 லட்சம் வசூலானது.
    • தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவில் தை அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மற்றும் உபகோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

    துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல் வருவாயாக ரூ.1 கோடியே 19 லட்சத்து, 82 ஆயிரத்து, 629 ரொக்கம். தங்கம் 17 கிராம், 200 மில்லி மற்றும் 710 கிராம் வெள்ளி யும் கிடைக்க பெற்றது.

    உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் ஞானசேகரன், மேலாளர் மாரியப்பன், கோவில் பேஷ்கார்கள் அண்ணா துரை, கமலநாதன் பஞ்ச மூர்த்தி, செல்லம் உள்பட பணியாளர்களும், அலு வலர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.

    அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    ×