என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிடங்கு"
- கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்
- கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது. இங்கு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், தோவாளை தாலுகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டு வந்தது. இந்த எந்திரங்களை நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் வைக்க மின்னணு வாக்கு ப்பதிவு எந்திர கிடங்கு கட்டப்பட்டது.
ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் கட்டிடம் கட்டுமான பணி நடந்தது. தற்பொழுது இந்த பணிகள் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். தேர்தல் தாசில்தார் சுசிலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தோவாளை தாலுகா அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. லாரிகள் மூலமாக அந்த எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இங்கு கொண்டுவரப்பட்டது.
5,204 மின்னணு எந்திரங்களும் 3,760 கட்டுப்பாட்டு கருவியும், 2612 வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 11,582 எந்திரங்களை இந்த கட்டிட த்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளத்தில் இந்த எந்திரங்கள் அனை த்தும் வைக்கப்படுகிறது. எந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்ட பிறகு அந்த அறைகளை பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் 13 சி.சி.டி.வி. காமிராக்கள் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு கருவி, லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
- விற்பனை கூடங்களின் செயல்பாடுகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
- தேங்காய் பால் உற்பத்தி அலகு மற்றும் கிடங்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனன மற்றும் வேளாண் வணிகத் துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக்குழுவில் இனண இயக்குநர் (வேளாண் வணிகம்) முரளிதரன், தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது விவசாயிகளின் ஆவண ங்களை சரிபார்த்ததுடன் ஒரத்தநாடு ஒழுங்கு முறை விற்பனை கூட பகுதிக்கு ட்பட்ட சோழகன்குடிக்காடு மற்றும் பாலாமுத்தூர் கிராமங்களில் கொப்பரை விற்பனை செய்த விவசாயிகளின் வயலிற்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் விற்பனை கூடங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விற்பனைக்கூட பொறுப்பாளர்களுக்கு விவசாயிகளின் பண்ணை வயலிற்கு சென்று தினசரி பரிவர்தனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் உழவர் சந்தை, ஒரத்தநாட்டில் அமைந்துள்ள திருநாடு உழவர் உற்பத்தி யாளர் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், இயந்திர தளவாடங்கள், காயர் அலகு, தேங்காய் பால் உற்பத்தி அலகு மற்றும் கிடங்குகள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டு தென்னை வணிக வளாகத்தினை முழு செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் தென்னை வணிக வளாகத்தில் அமைந்துள்ள கட்டமைப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வில் விற்பனனக்குழு செயலாளர் சரசு, வேளாண் வணிக துனண இயக்குநர் வித்யா, விற்பனனக்குழு மேலாளர் சரண்யா, விற்பனனக்கூட பொறுப்பாளர்கள் முருகானந்தம் , சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்
- 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
- குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து சென்றனர்.
வேதாரண்யம்:
உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் நகராட்சி சார்பில் வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு சசிகுமார், அரசு கல்லூரி நாட்டு நல திட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் குப்பையில்லா நகரத்தை உருவாக்குவோம் என நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்பு, மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர், கடலோர காவல்படைபோலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
சேகரிக்கப்பட்ட குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் வேதாரண்யம் கடற்கரை மிக தூய்மையாக காட்சியளித்தது.
நகராட்சி நிர்வாகம் கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதால் மாணவர்கள் குறைந்த அளவே மண்ணில் புதைந்து கிடந்த குப்பைகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது. கடற்கரையை மிக தூய்மையாக வைத்திருந்த வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதாவை பள்ளி மாணவ- மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
- காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது.
- 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.
குடிமங்கலம்,
திருப்பூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் முத்தூர், வெள்ளகோவில், குட்டப்பாளையம், கீரனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், ருத்ராபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டன.அதற்கு பிறகு அலங்கியம் உட்பட தாராபுரம் தாலுகாவில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.
காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது. விதை நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கின்றன. மற்ற நெல்லை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.இந்தாண்டு சன்ன ரகம் நெல் கிலோ 21.65 ரூபாய், மோட்டா ரகம் 21.15 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது .ஆன்லைன்பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால்விவசாயிகள்தனியார் வியாபாரிகளுக்கு கிலோ 13 முதல் 15 ரூபாய்க்கு நெல்லை வழங்கினர். ஆன்லைன் பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால் சில நாட்கள் காத்திருந்த பிறகே நெல் மூட்டைகளை வழங்க முடிந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய மேற்கூரை வசதியில்லை. மாறாக திறந்தவெளி களத்தில் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. பாலிதீன் சாக்குகளால் மூடி வைத்து பாதுகாத்தனர்.அப்படியிருந்தும் எதிர்பாராத திடீர் மழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகின. எனவே நிரந்தரமான மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வசதிக்கு தகுந்தபடி 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இறுதியாக ருத்ராபாளையத்தில் இன்னும் கொள்முதல் நடந்து வருகிறது.இதுவரை21 ஆயிரத்து 102 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. போதிய பாலிதீன் சாக்குகளால் மூடப்பட்டிருந்ததால் மழையால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவை காட்டிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைன் பதிவால் காலதாமதம் ஏற்பட்டது. நெல் கொள்முதல் மையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமாகின்றன. வேலை உறுதி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் கூடுதலாகநெல் மூட்டைகள் அடுக்கும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் அமைக்கலாம். கிடங்குகள் விரைவில் நிரம்பிவிட்டால் வெட்ட வெளியில் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் இருப்பு மையங்களை படிப்படியாக அமைத்து வைக்க வேண்டும்என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்