என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேடும்"
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
- பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பரிசல் மூலம் தேடுதல்
உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.
இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேட்டூர் காவிரி ஆற்றில் ெவல்டிங் தொழிலாளி மூழ்கினார்.
- அவரது உடலை 2-வது நாளாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர், ஜூன்.20-
ஈரோடு பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). வெல்டிங் தொழிலாளி–யான இவர் நேற்று மேட்டூர் ராமமூர்த்தி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் உறவினருடன் அந்த பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தார்.
அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கு நின்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
இதையடுத்து அவருடைய உறவினர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தண்ணீரி ல் மூழ்கிய மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து 2-வது நாளாக இன்றும் அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருமைைலக்கூடல் போலீ–சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
- 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.
அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.
மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்