என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுழல்"
- விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார்
- கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
நடிகர் கதிர் 2013-ம் ஆண்டு வெளியான மதயானைக்கூட்டம் படத்தின் மூலமாக நாயகனாகி அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம், நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கினார்.
பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருந்தார். அடுத்ததாக அமேசான் பிரைமில் வெளியான சூழல் வெப் தொடரில் நடித்திருந்தார். விரைவில் சுழல் 2-ம் பாகம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கதிர், மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்..இப்படத்தை எஸ்.எல்.எஸ் ஹென்றி இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிந்தது. இப்படத்தை பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
தற்போது, இப்படத்தின் முதல் பாடலாக கொல்லுறாளே என்கிற பாடல் இன்று மாலை வெளியாகியது. இப்பாடலை சந்துரு வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் 'சுழல்'.
- இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.
விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புஷ்கர் - காயத்ரி 'சுழல்' இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
- தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
சேலம் மாவட்டம் எடப்பா டி தாலுகா இருப்பாலி கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன்(வயது 18), சேலம் ஜலகண்டபுரம் தினேஷ்குமார்(18) உள்பட 50 பேர் திருவாரூரில் தொடங்கிய இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கலந்து கொள்ள பஸ்சில் புறப்பட்டனர்.
அந்த பஸ், தஞ்சை வழியாக சென்றபோது பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது தாமரை செல்வன், தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மட்டும் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளித்தனர்.
இதில் ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தினேஷ்குமாரை மட்டும் உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் அடுத்து செல்ல ப்பட்ட தாமரைச்செ ல்வனை தொடர்ந்து தேடி வந்தனர்.
நேற்று இரவு வரை தேடினர். பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று மீண்டும் தேட முடிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் மேம்பாலம் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள ஆற்றில் தாமரை செல்வன் உடல் பிணமாக மிதந்து வந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
- பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் லாரன்ஸ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள தென் குவளைவேலி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் லாரன்ஸ் (வயது 14). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.
சம்பவத்தன்று நீடாமங்க லம் அடுத்த எருமைபடுகை கிராமத்தில் உள்ள ஆற்றில் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தண்ணீரின் சுழலில் லாரன்ஸ் சிக்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் லாரன்ஸ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து லாரன்சை தேடினர். இரவு வெகு நேரமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று காலை லாரன்ஸ் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து அரித்துவார மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்