search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளி"

    • அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
    • அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.

    அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.

    அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.

    அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன்,

    தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார்.

    அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்ற செய்விப்பது என்பது தான் போட்டி.

    இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்ற செய்ய இயலவில்லை.

    ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார்.

    இந்நிகழ்ச்சிக்குப் பின் இத்தலம் (திருவண்ணாமலை) முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    • வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப் பட்டுள்ளளது. இதன் காரணமாக கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    இந்நிலையில் மதுரை செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல், கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடு படுவதாகவும் தொடர்ந்து வனத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று செல்லூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் மட்டும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். எனவே கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற 17-ந் தேதிக்குள் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை மீறி கிளிகளை வீட்டில் வளர்த்தால் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    • வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு
    • ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும், அதைத்தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும், பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    3-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கம் மீன்கள் கிடைத்து வருகின்றன.ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 45 படகுகள் நேற்று கரை திரும்பின.இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ கிளி மீன்கள் தலா ரூ.105 விலை போனது.கடந்த நாட்களை விடவும் ரூ.25 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சின்ன கிளி மீன் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.85 வரை விலை போனது. நாக்கண்டம் தலா கிலோ வழக்கமாக ரூ.40 க்கு விலை போனது. தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.385 விலையும், ஓலக்கணவாய் வழக்கமாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.415 க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விலைபோனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    • செய்தியாளரின் ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
    • நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

    சிலி நாட்டில் செய்தியாளர் ஒருவர் காதில் இயர் போன் மாற்றிக் கொண்டு செய்தியை நேரலையில் அறிவித்து வந்தார். அப்போது, எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று செய்தியாளரின் இயர்போனை அலேக்காக திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.

    நிகோலஸ் கிரம் என்ற செய்தியாளரின் தோள் மீது அமர்ந்த கிளி, அவரது ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.

    நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

    • இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.
    • மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.

    உடுமலை,

    உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்து வருகிறது.கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒருசில இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் பட்டத்துக்கு தகுந்தாற் போல விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன. ஆனாலும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.

    மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்குகிறோம். சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நாமே செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்யலாம்.அதற்கு பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாக தேய்த்து விடுவது நல்ல பலன் தரும். சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும்.அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விரட்டுவோம்.மேலும் தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தற்போது செய்துள்ள சாகுபடி இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.

    மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.சித்திரைப் பட்டத்தைத் தவற விட்டு சற்று தாமதமாக விதைப்பு செய்ததால் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஏனென்றால் பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு விதைகளைப் பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து அதன்பிறகே விற்பனைக்குத் தயார் செய்ய முடியும்.ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகளில் பூஞ்சாணம் உற்பத்தியாகி இழப்பை ஏற்படுத்தி விடும் என்றனர்.

    ×