search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட"

    • குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும்
    • மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்தது

    'நாகர்கோவில் : குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளரும், மாநக ராட்சி கவுன்சிலருமான ஸ்ரீலிஜா வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில், குளச்சல் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள ஒன்றியங்கள் வாரியாகவும், மாநகராட்சி பகுதிகள் வாரியாகவும், நகராட்சி மற்றும் ஊராட்சி வாரியாக வும் பூத் கமிட்டிகள் அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த பூத் கமிட்டிகள் தொடர்ந்து சிறப்புற, பொறுப்பாளர்கள் ஒற்றுமையுடனும், கடமை உணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும். குமரி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் குளறுபடி தொடர்ந்து இருந்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் 1 சென்ட் நிலத்தை கூட பதிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான தமிழக அரசையும், பத்திரப்பதிவு துறையையும் கண்டிப்பது. வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி கிளை மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும் தனிக்கவனம் செலுத்தி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய்சுந்த ரம் எம்.எல்.ஏ.வை நிய மித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு, அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சுகுமாரன், சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் முருகேஷ்வரன், ஜெயகோபால், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், அணி செயலாளர் அக்ஷயா கண்ணன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • நாளை தொடக்கம்
    • 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைச்செயல்பாடுகள், உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய வகையில் கலைத்திரு விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பா டுகள் வழி வகுக்கிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 10.10.2023 முதல் 14.10.2023 வரையில் நடைபெற்றது. வட்டார அளவில் இப் போட்டிகள் கடந்த 18.10.2023 தொடங்கியது. மாவட்ட அளவில் கலை திருவிழா போட்டிகள் நாளை (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும், மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரையிலும் நடைபெற உள்ளது. கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாகர்கோவில் அனந்த நாடார்குடி புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடை பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ ருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்விருதுகள் 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாண வர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட் டார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமினம் செய்துள்ளார்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் நியமிக்கப்பட்டுள் ளார். அண்ணா தொழிற் சங்க செயலாளர் வைகுண்ட மணி, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் பா லமுருகன், சிறுபான்மை யினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ரசாக், அமைப்பு சாரா ஓட்டுநர் மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சந்திரன், கலை பிரிவு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன் ஆகியோர் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளராக முத்துக்குமார், அகஸ்தீஸ்வ ரம் வடக்கு ஒன்றிய செயலா ளர் ஜெஸீம், தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர். பொதுக்குழு உறுப்பி னராக மகாராஜா பிள்ளை, ராஜாக்கமங்கலம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளராக சிவ கந்தன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயலாளராக சுடலையாண்டி, தென்தா மரைகுளம் பேரூராட்சி செயலாளராக டானியல், மாநில மகளிர் அணி துணை செயலாளராக ராணி, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் தாணு பிள்ளை, மாநில இலக்கிய அணி இணை செயலாளராக சந்துரு என்ற ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். நாகர்கோவில் மாநக ராட்சி வடக்கு பகுதி செய லாளராக ஸ்ரீலிஜா நிய மிக்கப்பட்டுள்ளார். வடக்கு பகுதியாளராக நியமிக்கப் பட்டுள்ள ஸ்ரீலிஜா தமிழ கத்திலேயே அ.தி.மு.க.வில் முதல் பகுதி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
    • புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் வோர்ட் தொண்டு நிறுவனம், டான்போஸ்கோ அன்பு இல்லத்தினர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் மேம்பாடு-பாதுகாப்பு பணிகள், நூற்பாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.

    நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, வோர்ட் மற்றும் தொன்போஸ்கோ நிறுவன செயல்பாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, சிறந்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சி.எஸ்.சி. மேலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு அல்லியன்ஸ் நிறுவனர் பாலமுருகன், புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அல்லியன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஜா, வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வோர்ட் நிறுவன இயக்குனர் ரெனிடா சரளா வரவேற்றார். தொன்போஸ்கோ நிறுவன இயக்குனர் காஸ்மீர் ராஜ் நன்றி கூறினார்.

    ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    எனவே சேலம் மாவட்டத்தில் துணிச்சல், தைரியமான மற்றும் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற வருகிற 20-ந்தேதிக்குள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×