search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேக"

    • நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.
    • நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு கடந்த 28-ந் தேதி இரவு கிராம சாந்தியும், 29-ந் தேதி காலை 7-மணிக்கு விநாயகர் வழி பாடு, கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், தீபாரா தனையும், மாலை 6- மணிக்கு பஞ்ச காவ்யம், வாஸ்து பூஜையும், 30-ந் தேதி காலை 7- மணிக்கு சாந்தி ஹோமம்,திரவ்யாகுதி மற்றும் பூர்ணாகுதியும், மாலை 6- மணிக்கு சுதர்சன யாகம், மகாலட்சுமி யாகமும் நடைபெற்றது.

    நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    இன்று வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி யானை, குதிரை, ஒட்டகம், பசு ஆகியவற்றுடன் தீர்த்த குடங்களுடன் எடுத்து வரும் நிகழ்ச்சியும், சலங்கை ஆட்டமும், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல் மற்றும் விமான கண் திறப்பும், ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் நடைபெறுகிறது.

    நாளை (2-ந் தேதி) காலை ஐந்தாம் கால யாக பூஜையும், இரவு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (3-ந் தேதி) காலை 5-மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், பிம்பசுத்தியும், 9-மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு விமான ராஜ கோபுர மகா கும்பா பிஷேகமும், 10-மணிக்கு வன்னிமர கணபதி, செல்லாண்டி யம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாக ராஜா உள்ளிட்ட அனைத்து பரிவார மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், தசதரிசனம், கோபூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் பரம்பரை தர்ம கர்த்தா, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் விலை யங்குலக் குடிப்பாட்டு பங்காளிகள் செய்து வருகின்றனர்.

    • எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
    • காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்ல கொண்டான் முனியப்ப சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

    பூலாம்பட்டி - மேட்டூர் பிரதான சாலையை ஒட்டிய காவிரி ஆற்றங்கரையோரம், கல்ல கொண்டான் முனி யப்பன் மற்றும் எல்லை முனியப்பன் பரிவார தெய்வங்கள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோ வில் பகுதியில் இருந்து, அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் பெற்று வருவதால் விவசாயி களின் காவல் தெய்வமாக அமைந்துள்ள கல்ல கொண்டான் முனியப்ப சாமி கோவில், சுற்று வட்டார பகுதி கிராம மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

    இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்த குடம் சுமந்த பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து யாக சாலையில் சேர்த்தனர்.

    கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கும்ப பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக வேள்விகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கோ பூஜையில் கன்றுடன் அழைத்து வரப்பட்ட பசு மாட்டின் முன், 7 சிறுமிகள் அலங்கரிக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை செய்த பக்தர்கள் தெய்வமாக வழிபாடு செய்தனர்.

    இந்த விழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கல்லகொண்டான் முனி யப்ப சாமி ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    • சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.
    • மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    இன்று மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நலம் காக்கும் நாயகி அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாகம் ஆரம்பம், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகள், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பிரசித்தி பெற்ற, மிகவும் பழமை வாய்ந்த அத்தனூர் அம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இதை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பிரசித்தி பெற்ற, மிகவும் பழமை வாய்ந்த அத்தனூர் அம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராஜ கோபுரம், கோவில் சிற்பங்கள் புதிதாக செய்யப்பட்டன.

    இக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி விக்னேஸ்வரா பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. 8-ந் தேதி பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 9-ந் தேதி மகாலட்சுமி, சரஸ்வதி ஹோமம், கலசாபிஷேகம், விநாயகர் பூஜை நடந்தது. 10-ந் தேதி யாக பூஜை, தீபாரதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்கல இசை, திருமுறை பாராயணம் நடந்தது. இதைத் தொடர்ந்து விமானம் கண் திறப்பு, விநாயகர், ஸ்ரீ அத்தனூர் அம்மன், ஸ்ரீ அத்தாயி அம்மன் மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், பரிவார தெய்வங்கள் அஷ்ட மருந்து சாத்துதல் நடந்தது. மாலையில் மண்டபார்ச்சனை, யாக பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழா

    இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, ரட்சா பந்தனம், புண்யாகம், நாடி சந்தானம், வஸ்திர சமர்ப்பணம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6.30 மணிக்கு மேல் ராஜகோபுரம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தாயி அம்மன், உறும்பிக்காரன், ஸ்ரீ முத்து முனியப்பன், ஸ்ரீ மகாமுனியப்பன், ஸ்ரீ ராஜ முனியப்பன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ ஆதிமூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மேளதாளத்துடன், வாணவேடிக்கை முழங்க கோலாகலமாக நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகம், தச தரிசனம், அலங்காரம், உச்சி காலை பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    அமைச்சர்கள், நீதிபதி பங்கேற்பு

    கும்பாபிஷேக விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எம்.பி.க்கள் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், பொன்னுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கரூர், விழுப்புரம், ஈரோடு, கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருப்பணி சங்கம் மற்றும் விழா குழுவினர், கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் வெண்ணந்தூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கோபி அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து க்காளியம்மன் கோவில் வகையாரா ஸ்ரீதேவி பூதேவி ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக 10-ந் தேதி மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 11-ந் தேதி வாஸ்துசாந்தி, 12-ந் தேதி சாற்றுமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 4-ம் கால பூஜை நடந்தது. காலை 8.30 மணிக்கு மகா கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி தொடர்ந்து மூலவர் விமானம், ராஜகோபுரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிநராயண பெரு மாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    மேலும் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்க ர்பாளையம், காசிபாளை யம், குன்னத்தூர் க.குள்ள ம்பாளையம் பொல வகாளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பாரதி நகரில் செல்வ விநாயகர், செந்தூர் முருகர், ஆதி செல்வா விநாயகர், துர்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த மே மாதம் 26-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் முளைப்பாலிகை இடுதலுடன் தொடங்கியது.

    கடந்த 8-ந்தேதி விக்னேஸ்வர் பூஜை, பஞ்ச கவ்ய பூஜையும், அதே நாளில் காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றன. நேற்று முன்தினம் 2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜை நடந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று விக்கிரகங்கள் கண் திறப்பு, காப்பு காட்டுதல் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்களால் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. யாகசாலை பூஜைகளை ஸ்ரீரங்கம் ஞானமணி குருக்கள் மற்றும் குழுவினர் நடத்தினர். சிற்ப வேலைகளை பெரியார் நகர் கதிர்வேல், மங்கள இசை தர்மபுரி ஜெயபாலன் குழுவினர் செய்திருந்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன், தி.மு.க. நகர செயலர் செல்வம், அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, கவுன்சிலர் சத்தியசீலன், பழனிச்சாமி, புருஷோத்தமன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×