என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆலோசனைக்கூட்டம்"
- பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த விவாதிக்கப்பட்டது
- தொண்டர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த நேரத்தில் முடித்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது என்பதை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி. ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ, வி.கே.ஆர்.சீனிவாசன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
- தொண்டர்கள் ஏராளமானோர் கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் வாலாஜா கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி பூத் கமிட்டி , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ,மகளிர் அணி,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வன்னிவேடு வி.கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எம்.சி.பூங்காவனம் ,கே.துரை,பி.பி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபு உள்பட நிர்வாகிகள் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர். எஸ். ராமச்சந்திரன்.எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து சரி பார்த்து ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் சாபுதீன், நிர்வாகிகள் வேதகிரி,முனுசாமி,பூண்டி.பிரகாஷ், மூர்த்தி, நவ்லாக்.தயாளன், தனஞ்செழியன் உள்பட மாவட்ட,ஒன்றிய, கிளைகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செய லாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கிளை, வார்டு வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவிகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிய ரங்கம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது. மத்திய அரசு நிதி பற்றா க்குறையை ஏற்படுத்திய போது தேர்தல் காலத்தில் அறிவித்த 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு.
பெண்களுக்கு விடியல் பயணம், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி. அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைக்க கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வந்த அரசுக்கு நன்றி.
தேர்தல்பணிக்குழு 100க்கு ஒரு நபர் என தேர்வு செய்து தலைமை கழகத்துக்கு அனுப்பி விரைவில் வாக்குசாவடிகளில் கணக்கெடுக்கும் பணியை தொடங்குவது, வேலூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொள்வது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
கூட்டத்தில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், மாவட்ட அவைத்தலைவர் மோகன், துணைச் செயலா ளர்கள் ராஜாமணி, சுந்தர ராஜன், தாமரைச்செல்வி, பொருளாளா் விஜயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், கண்ணன், வெங்கிடுசாமி, பாலு, செல்வராஜ், சேக்சிக்கந்தா் பாட்சா, முத்துக்குமாரசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனா்.
- ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.
திருப்பூர்:
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க படிவங்களை ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட 1 லட்சத்து 55 ஆயிரம் கையெழுத்து இயக்க படிவங்களை மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் வழங்கினார். மேலும் அதிக அளவில் கையெழுத்து பெற்ற சாமுண்டிபுரம் பகுதி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், தனிப்பட்ட முறையில் அதிக கையெழுத்து பெற்ற 13-வது வார்டு செயலாளர் மற்றும் அனைத்து பகுதி செயலாளர்களுக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி என்கிற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞரணி செயலாளர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து அர்ஜூனராஜ் நிருபர்களிடம் கூறும்போது " பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும், சனாதானத்தை தாங்கி பிடிக்கின்ற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறும் வகையிலும் நாங்கள் ஓய மாட்டோம். மத்தியில் பிரதமர் உள்பட பா.ஜ.க. அரசு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
- சிவகங்கையில் சுதந்திர தினவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.
சுதந்திர தினவிழாவை காண்பதற்காக வரும் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, போக்கு வரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டடார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாதேவி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் முகூர்த்த கால் மற்றும் பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோ சனை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறு கிறது.
இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.
இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்டக் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் அனைவரும் திர ளாக பங்கேற்று சிறப் பிக்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- வருகிற 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில்,புதிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக ஏற்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவில் எதிரே நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை முன்னிலை வகித்தார். இதில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் நாகராஜ், மாநகராட்சி மண்டல் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி பொதுசுகாதாரக் குழுதலைவர் மாதேஸ்வரன், வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக பணிகள், ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின்போது, கோவில் வளாகத்தில் மலர் அலங்காரம், மின் விளக்கு அமைப்பு விழா நடைபெறும் 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல் குடிநீர் விநியோகம்....உள்ளிட்ட பணிகளுக்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில், பா.ஜ.க. நிர்வாகிகள்,மாநகராட்சி கவுன்சிலர்கள், , இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் கவுண்டர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- தி.மு.க. தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- ரூ.3,233 கோடிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தகள் போட்ட நமது முதல்வருக்கு பாராட்டுகளும், வாழ்த்து களும் தெரிவிக்கப்பட்டது.
மதுரை
தி.மு.க. தலைமை தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது. தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசன் தலைமை தாங்கினார். தீர்மானக்குழு செயலாளர்கள் வைத்திய லிங்கம், எம்.எஸ். விஸ்வ நாதன், அக்ரி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பார் இளங்கோ, சத்தியமூர்த்தி, டாக்டர் மாசிலாமணி, நாச்சிமுத்து, ஜெயகுமார், வேங்கடபதி, மிசா ராமநாதன், சேது நாதன், ஆதி சங்கர், ரெஜினால்டு, வெற்றிச் செல்வன், சரவணன், செஞ்சி சிவா, செல்வராஜ், வீர கோபால், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீரமானங்கள் வருமாறு:-
உயர்நிலை செயல் திட்டகுழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்களின் அடப்படையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் நடக்கும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்வது. தீர்மானக்குழு சார்பாக சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா பட்டிமன்றம் , கருத்தரங்கம் அல்லது கவியரங்கம் மிகப்பெரிய அளவில் கழக தலைவர் தலைமையில் நடத்த வேண்டும்.புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் முழுமையாக அனைவரும் ஈடுபட வேண்டும்.
மேலும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.3,233 கோடி களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தகள் போட்ட நமது முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டுகளும், வாழ்த்து களும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றி பெற்று தந்த தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவிக்கப்பட்டது.
முடிவில் செஞ்சி சிவா நன்றி கூறினார்.
- பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கரைப்புதூர்,கணபதிபாளையம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் என்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக துணை செயலாளரும், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவருமான வழக்கறிஞர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் பேசுகையில், பல்லடம் தொகுதியில் தி.மு.க. அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. வரும் பாராளுமன்ற மன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும். கோவை எம்.பி.தொகுதியில் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்குகளை பெற்று தர வேண்டும். தி.மு.க.வில் சேர இளைஞர்கள், மகளிர் வெகு ஆர்வமாக உள்ளனர். பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்தியாகராஜன், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத்தலைவர் முத்துக்குமார், 63வேல ம்பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அ.திமு.க. இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி சிவகங்கை வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. சார்பில் மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
எனவே இந்த கூட்டத்தில் இன்னாள்-முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஒன்றிணைந்து வாக்குச்சாவடி குழுவில் எந்த வேறுபாடும் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
- கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார்.
திருப்பூர் :
தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கான ஒன்றியம் வாரியாக வாக்குச்சாவடி குழு ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். வாக்குச்சாவடி குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன செல்வம், மாவட்ட அலுவலக வக்கீல் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு அமைப்பதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வாக்குச்சாவடி குழுவில் இடம் பெற்றவர்களுக்கு அறிவுரைகளும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும், கடமைகளும் விளக்கிக் கூறப்பட்டது.
ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஒன்றிணைந்து வாக்குச்சாவடி குழுவில் எந்த வேறுபாடும் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
- மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், உயர்த்தப்பட்ட விலைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம்.
- கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஓசூர்,
தமிழ் நாட்டில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், உயர்த்தப்பட்ட விலைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ .தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து நேற்று ஒசூரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் மத்திகிரி கூட்டு ரோடில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், நகரமைப்பு குழுதலைவர் எம். அசோகா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் இதில், மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம். சீனிவாசன், இதில், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்ன கேசவன், அரப்ஜான் உள்பட பலர் பேசினர். மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் கே. சாக்கப்பா, துணைத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்