search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீரில்"

    • எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

    அதே சமயம் இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த மின் கம்பங்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளதால் அடிப்பகுதி பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.

    சில மின் கம்பங்கள் கம்பிகளின் உதவியுடன் தொங்கியபடி உள்ளன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. முற்றிலும் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும், உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏரியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி வேறு இடத்தில நட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மொடக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த விக்ரமசிங்கபுரம் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி நாராயணனின் மகன் பரசுராமன் (30). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 5 ஆண்டாக வேலை பார்த்து வந்தார்.

    பரசுராமன் தனது நண்பர்களான சாவடிப்பாளையம் புதூரைச் சேர்ந்த மதன், பிரபு, முரளி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் மதியம் சாமி கும்பிட்டு விட்டு காவிரி ஆற்றில் குளித்தனர்.

    அப்போது பரசுராமன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீர் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது நண்பர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு அப்பகுதியில் பரசுராமனை தேடிப் பார்த்தனர். ஆனால் அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பரசுராமனின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

    • நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கிணற்றில் நீச்சல் பழகிய போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் கோகுலபிரகாஷ் (22).

    இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோகுல பிரகாஷ் பெரியபாளையம் பட்டியில் உள்ள வடக்குத் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலக வுண்டம்பட்டி போலீசார் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து கோகுலபிரகாஷின் உடலை மீட்டனர்.

    பின்பு அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது.
    • ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இந்த தடுப்பணையின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் வழிந்தோடுவதால், அந்த பகுதி பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்புத்தன்மை 780 டிடிஎஸ்ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
    • திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலைகளால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத்தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை அதிகளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்களாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மழைக்காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகளும் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மழை வெள்ளம் அதிகமாக வந்ததால் கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்புத்தன்மை 230 டிடிஎஸ் அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்புத்தன்மை 780 டிடிஎஸ்ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறியதாவது:

    நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் 10 நாட்கள் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடை ந்தோம்.

    ஆனால் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலைகளால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது. உப்புத்தன்மையும் அதிகரித்து விட்டது.

    இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் குறுக்கே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்களாக ஒரத்து ப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வை க்காமல் அப்ப டியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    ஆனால், கடந்த 8-ந் தேதி வெள்ள நீர் வர தொடங்கி அதிகரித்து வந்ததால் சாயக்கழிவுகள் கலந்த தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 1,900 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால், தொடர்ந்து அதிக படியான வெள்ள பெருக்கு அதிகரித்து தற்போது ஒரத்துப்பாளையம் அணையில் 20 அடி தண்ணீர் தேங்கியது. அணையில் இருந்து 1,505 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தற்போது அணையில் இருந்து வெளியேறும் நீரில் கருமை நிறம் இல்லாமல் நல்ல தண்ணீராக ஓடுகிறது. நேற்று மாலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 250 டி.டி.எஸ்., சாக குறைந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் செல்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

    இதேபோல் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆற்றில் கருப்பு நிறம் நீங்கி தண்ணீர் செல்கிறது.

    உப்பு தன்மையும் குறைந்து விட்டது இனி இந்த தண்ணீர் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தாலம் என்றனர்.

    • தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
    • இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தேவி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.

    இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிக்குமார் (வயது 14). இவர் பரமத்தியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் ஹரிக்குமார் காலையில் அங்கிருந்த தோட்டப்பகுதிக்கு‌ சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குழியில் தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் இறங்கி விளையாடியபோது, 2 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தார்கள்.

    மேட்டூர்:

    சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமிகள் சுஜித்ரா (வயது 11), சசிரேகா (7) ஆகியோர் பள்ளி விடுமுறையை யொட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர், சேத்துக்குழி பகுதியில் உள்ள பாட்டி பாப்பாத்தி (65) வீட்டுக்கு வந்தனர்.கடந்த 10-ந்தேதி பாப்பாத்தி, துணி துவைப்பதற்காக அருகாமையில் உள்ள காவிரி நீர் தேக்க பகுதிக்கு சென்றார். அப்போது பேத்திகள் சுஜித்ரா, சசிரேகா ஆகியோரையும் உடன் அழைத்து சென்றார். அங்கு காவிரி ஆற்றில் இறங்கி விளையாடியபோது, 2 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து அங்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கொளத்தூர், சேத்துக்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி நீர் தேக்க பகுதியில் கரையோரமாக எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதில், ஆற்றின் ஆழமான பகுதி, ஆற்றில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×