search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம்கள்"

    • அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம்.
    • பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அள வுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்தது. கடந்த 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை தனித்துப் போட்டியிட்டு ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 35 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட வாய்ப்பளித் திருந்தது.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மாயாவதி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கட்சியின் நலன் கருதி அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம். தலித் மக்கள் முக்கியமாக ஜாதவ் பிரிவினர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அவர்க ளுக்கு நன்றி.

    அதே நேரத்தில் முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியைப் புரிந்துகொண்டு வாக்களிக்கத் தவறியது வருத்தம் அளிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    இந்த மக்களவைத் தேர்த லில் மட்டுமின்றி இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்க ளிலும் முஸ்லிம் களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதிக முஸ்லிம் வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் நிறுத்தியது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தோல்வியைச் சந்தித்துள் ளது என்றார்.

    • முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
    • மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது.

    ஆனால் இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர்.


    இதையறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். அனைவரும் மனிதர்கள், எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் விதமாக முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

    இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    • அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
    • நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

    இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

    இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

    முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது.
    • தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    லக்னோ:

    கடந்த சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 300 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதுமட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை உ.பி அரசு புல்டோசர்கள் மூலம் இடித்து வருகிறது. இதில் முஸ்லீம்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஜாவேத் முஹமது என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது. இவரது வீடு பிரக்யா ராஜின் கரேலி பகுதியில் அமைந்துள்ள ஜேகே ஆஷியானா காலனியில் அமைந்திருந்தது.

    இதையடுத்து ஜாவேத்தின் மகளும் சமூக ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவியும் ஆவார். பல்வேறு போராட்டங்களில் மாணவர்களை ஒன்றிணைந்து, தலைமை தாங்கியுள்ளார்.

    இதையடுத்து ஆஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன் #istandwithafreenfathima என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.

    ×