என் மலர்
நீங்கள் தேடியது "ஆங்கிலேயர்"
- ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார்.
- இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது.
கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோற்ற பின்னர் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் முறையாக டெல்லியில் உரையாற்றினார்.
இன்று பகத் சிங் நினைவு நாளை ஒட்டி டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனதில் என்ன கனவுகள் வைத்திருந்தார்களோ, இன்று அவர்களின் ஒரு கனவு கூட நிறைவேறவில்லை. பகத் சிங் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறைய இருந்தன. ஆனால் ஆங்கிலேயர்கள் அவற்றை தடை செய்யாமல் பகத் சிங்கின் தோழர்களுக்கு அனுப்பினர்.

நான் சிறையில் இருந்தபோது, துணை நிலை ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினேன், எனக்கு பதிலாக அதிஷி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த கடிதத்தை அனுப்பவேண்டி நான் சிறை கண்காணிப்பாளருக்கு கொடுத்தேன்.
ஆனால் அந்தக் கடிதம் துணைநிலை ஆளுநரை அடையவில்லை. அத்தகைய கடிதத்தை எழுத எனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கும்விதமாக ஷோ-காஸ் நோட்டீஸ் தான் வந்தது. பகத் சிங்கிற்கு எந்தக் கடிதமும் எழுத சுதந்திரம் இருந்தது. ஆனால் என்னால் இரண்டு வரிகள் கொண்ட கடிதம் எழுத முடியவில்லை. நீங்கள் (பாஜக) பிரிட்டிஷாரை விட மோசமானவர்கள்.
எங்கள் முன்மாதிரிகள் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங். ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார். இல்லையெனில், வெள்ளை நிற ஆட்சியாளருக்கு பதிலாக பழுப்பு நிற தோல் ஆட்சியாளர்கள் வருவார்கள். இதுதான் நடந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசமானவர்கள்.
பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. பகத் சிங்கை விட நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், இதையெல்லாம் பாஜக செய்தபோது, காங்கிரஸ் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும் மகளிருக்கு பாஜக அளித்த ரூ.2500 உதவித்தொகை வாக்குறுதி உள்ளிட்டவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
- இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
- பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.
சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.
- நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.
- படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது.
ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்துச் சென்றபோது, அவர்களுக்கு எதிராக போராட்டத்தில், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்க வேண்டும்.
படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது" என்று பேசினார்.
- ஆங்கிலேயர்கள் வைத்த மைல் கற்கள் இன்றும் காணக் கிடைக்கிறது.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் சொற்றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
திருப்பூர்,
நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட தங்கள் ஆட்சியின் போது தமிழுக்கும் இடம் கொடுத்து மைல் கற்கள் மற்றும் கைகாட்டி பலகைகளில் தமிழ் எண்களில் தொலைவை குறிக்க பயன்படுத்தி தமிழை காத்துள்ளனர். மேலும் தமிழில் பகுதிகளை குறிக்க கல்வெட்டுகளை தமிழில் வைத்துள்ளனர் என்பதை திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காண முடிகிறது.
இதற்கான சான்றாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில்,ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் வழி குறித்தும்,அதற்கான தொலைவு பற்றியும் ஆங்கிலேயர்கள் வைத்த மைல் கற்கள் இன்றும் காணக் கிடைக்கிறது.சில இடங்களை தவிர மற்ற இடங்களில் உடைந்தும், சாலையோர குழிகளில் தூக்கி வீசப்பட்டும், கட்டுமானங்களுக்கு அடிக்கல்லாகவும் கிடப்பதை காண முடிகிறது.இவற்றில் ஊர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தொலைவுகள் மைல் கணக்கில் எண்களால் குறிக்கப்பட்டும்,தமிழ் எண்களாலும் குறித்து அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புகள் வாயிலாக ஆங்கிலேயர்கள் தமிழ் எண்களை பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரமாக திருப்பூர் அருகே 200 ஆண்டு பழமையான தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றி ய,க,உ,கூ என தமிழ் எண்களும் நடைமுறையில் இருந்துள்ளன.தற்போது நடைமுறையில் உள்ள எண்களை பின்பற்ற துவங்கியதும்,தமிழ் எண்களை எழுதும் வழக்கம் குறைந்து அழிந்து,பலருக்கும் அது தெரியாத சூழலே ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் சொற்றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். சாலைகளில் ஊரின் தொலைவை தமிழ் எண்களிலேயே குறிப்பிட்டு வந்துள்ளனர்.இது தொடர்பாக 200 ஆண்டு பழமையான மைல் கற்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசி,பெருமாநல்லூர்,செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளது .
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,மைல் கற்கள் வைக்கும் நடைமுறை தமிழகத்தில் கி.பி.10 ம் நூற்றாண்டில் துவங்கியது.இதில் ரோமன்,அராபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுதப்பட்ட மைல் கல் கிடைத்துள்ளது . இக்கல்லில்இன்றைய அரபி மற்றும் தமிழ் எண்கள் காணப்படுகின்றன.இதில் பல்லடம் 11 மைல் என்பது பல்லடம் "கக" என்றும்,பல்லடம் 4 மைல் என்பது பல்லடம் ' ச ' எனவும் எழுதப்பட்டுள்ளது.
இதே போல் அவிநாசி காவல் நிலையம் அருகே உள்ள மைல் கல்லில் அவிநாசியில் இருந்து செங்கப்பள்ளி 11 மைல் என்பதை தமிழில் "கக" எனவும்,கருமத்தம்பட்டி 9 மைல் என்பதை "கூ" என தமிழ் எண்ணிலும் குறிப்பிட்டுள்ளனர்.இதே போல் அன்னூர் 12 மைல் என்பதை "கஉ" என பொறிக்கப் பட்டுள்ளது. மைல் கற்கள் பல்வேறு அளவுகளில் காணப்பட்டாலும்,அவை பெரும்பாலும் 70 செ.மீ உயரம்,50 செ.மீ. , அகலம் கொண்டுள்ளன.
தற்போது கிலோ மீட்டரில் குறிக்கப்படும் அளவு,அன்று மைல் கணக்கில் நடைமுறையில் இருந்தது . ஆங்கிலேயர் கூட , தமிழ் எண்களை பயன்படுத்திய நிலையில்,தற்போது இந்நடைமுறை பின்பற்றப்படாதது வருத்தமளிக்கும் செயலாக இருந்தாலும், இது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணங்களை பாதுகாக்க வழியின்றி அழிந்து வருவது பெரும் துயரமானது என அவர்கள் தெரிவித்தனர்.