search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய சிறைச்சாலை"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார்.
    • விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ரூ 1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று உத்திர உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    • மத்திய சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என புகார் எழுந்துள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லலூர் ஒன்றி யத்தை சேர்ந்த தெத்தூர், டி.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட கரடிக்கல் அருகில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை யடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி மதுரை மத்தியசிறைச்சாலையை புதியதாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் 67ஏக்கர் இடம் தேர்வு செய்துள்ளது.

    அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் வந்தபோது விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாலைமறியல் போராட்டம் நடத்தி மத்திய சிறைச்சாலை அமைக்க தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் காந்தி ஜெயந்தியை யொட்டி கிராமசபைக்கூட்டங்கள் நடந்தது. தெத்தூரில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சீனிவாசனும், டி.மேட்டுப் பட்டியில் நடந்த கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாம் பழனிச் சாமியும் தலைமை தாங்கி னர்.

    இந்த கூட்டங்களில் சிறுமலையடிவாரத்தில் கரடிக்கல் பகுதியில் உள்ள தீர்வை ஏற்பட்ட தரிசு நிலங்களில் கலைஞர் ஆட்சி காலத்தில் ஒருசிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பட்டா கோரி பல போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

    இந்த மானாவாரிநிலங்களில் 40ஆண்டுகளுக்கு மேலாக மா, கொய்யா, புளி, முருங்கை உள்ளிட்ட பலன் தரும் மரங்களும் பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்ட பயிர்களும் பருவ மழைக்கு ஏற்றபடி விவ சாயம் செய்து பலனடைந்து வந்தனர். அதனால் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

    பல்லுயிர்களின் வசிப்பிட மான சிறுமலை யிலிருந்து காட்டுமாடு, வரையாடு, காட்டுபன்றி, முள்ளம்பன்றி, செம்பூத்து, தேவாங்கு, குரங்குகள், மலை பாம்பு உள்ளிட்டவை களை பாதுகாக்கவும், சுற்று சூழலலை நிலைப்படுத்தவும் சிறைத்துறை மூலம் சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்காக தேர்வுசெய்துள்ள இடத்தில் சிறைஅமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.

    • மதுரை பாலமேடு அருகே மத்திய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை அரசரடி பகுதி யில் உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத் தில் கட்டப்பட்டதா கும். 158 ஆண்டுகள் பழமையான இந்த சிறையில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர். இதன் வளாகத்தி லேயே செயல்படும் பெண்கள் சிறையிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

    மக்கள் ெதாகை அதிகரிப்புக்கு ஏற்ப பெருகும் வாகன போக்குவரத்தால் கடுமையான நெருக்கடி மதுரை நகர் பகுதியில் ஏற்படுவது தடுக்க முடியா ததாகி விட்டது. இதனால் மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதுக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

    அதன்படி தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. அதன்படி மதுரை -திருவாதவூர் சாலையில் இடையபட்டி கிராமத்தில் மலையடிவார பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைச்சாலை அமைக்க இடம் தேர்வானது. இங்கு சென்னை புழல் சிறைக்கு நிகரான வசதிகளுடன் ரூ.400 கோடியில் சிறை வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

    ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இடை யபட்டியில் மத்திய சிறை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட் டது. பின்னர் பாலமேடு அருகில் உள்ள தெத்தூர் கிராமத்துக்கு மதுரை மத்திய சிறை வளாகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

    இந்தநிலையில் தெத்தூர் கிராமத்திலும் சிறை வளாகம் அமைக்க அப்பகுதியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோருக்கு பட்டாவும் வழங்கப்பட்டு விட்டது.

    தற்போது அந்த இடத்தை தேர்வு செய்து சிறைச்சாலை அமைக்கப்போவதாக கூறு வது கண்டனத்திற்கு ரியது. எனவே உடனடியாக தெத் தூர் பகுதியில் மத்திய சிறை வளாகம் அமைக்கும் முயற் சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தெத்தூர் கிராமத்துக்கு போலீஸ் படையுடன் சென்ற குழுவி னர் சிறை வளாகம் அமைய வுள்ள இடத்தில் ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அங்கு போடப்பட்டி ருந்த கம்பி வேலிகளும் பெயர்த்து எடுக்கப்பட்டன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறார்கள். மேலும் இந்த இடம் புறம்போக்கு நிலம் என்றும் போலீசார் தெரி–வித்துள்ளனர்.

    • திருச்சி மத்திய சிறைச்சாலை சார்பில் 2 பெட்ரோல் பங்க்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • சிறைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்க உள்ளனர்

    திருச்சி :

    தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் மூலம் பல்வேறு சிறு தொழில்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் சார்ந்த படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது. கைதிகளாக சிறைக்குள் வருபவர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக வெளியில் செல்லும் அளவுக்கு அவர்கள் பக்குவப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    கைதிகள் தாங்கள் பெற்ற பயிற்சியின் பலனாக மத்திய சிறைச்சாலைகளில் கரும்பு, நெல், சோளம் உள்ளிட்டவைகளும், காய்கறிகளும் பயிரிட்டு பராமரிக்கின்றனர். அவை குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மீன்கள் வளர்க்கப்பட்டு குறிப்பிட்ட தினங்களில் கைதிகள் மூலம் சிறைச்சாலைக்கு வெளியே விற்கப்படுகிறது.

    திருச்சி மத்திய சிறையில் நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள கைதிகள் மூலம் சிறைக்கு வெளியே வேளாண் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறைக்குள் தொழிற் கூடங்களும் இயங்கி வருகின்றன. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் கைதிகள் தயாரித்த முகக்கவசங்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் கைதிகள் மூலம் சிறைத் துறையினர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதுக்கோட்டை, வேலூர், சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை இயக்கி வருகின்றனர். இந்த திட்டமானது கடந்த 2019-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

    தற்போது திருச்சி மத்திய சிறைக்கு இரண்டு பெட்ரோல் பங்குகளை இயக்கும் அனுமதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்குகளை திருச்சி மத்திய சிறைச்சாலை முன்புள்ள சிறை பஜார் அருகாமையிலும், காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மகளிர் சிறைச்சாலை வளாகத்திலும் சிறைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் கைதிகள் பணி அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இது கைதிகளின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும் என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதேபோல் விரைவில் சென்னை, சேலம், கோவை, மதுரை ஆகிய இடங்களிலும் மத்திய சிறைகளின் வெளிப்புற வளாகங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இது சிறை கைதிகள் பொது தொடர்பை பெறுவதற்கான சிறந்த வழியாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வெற்றிகரமாக இயங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×