என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ காப்பீட்டு திட்டம்"
- விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் தானா? என ஆதார் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.
- செல்போன் மூலம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சென்னை:
'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதாவது, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.
அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைக்கு இந்த காப்பீட்டு திட்டம் பெரும்பாலான ஏழைகளுக்கு உதவியாக இருந்து வருகிறது.
இதற்கிடையே 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனைத்து விதமான சிகிச்சைகளையும் இலவசமாக பெறும் வகையில் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை கடந்த 29-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏற்கனவே அமலில் இருந்து வரும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்துக்கு பொருளாதார அளவுகோல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இருந்து வரும் நிலையில் மூத்த குடிமக்களுக்கான இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க பொருளாதார அளவுகோல் எதுவும் இல்லை.
ஏழை, நடுத்தர, உயர் நடுத்தர அல்லது பணக்காரர் என எந்தவித பாகுபாடும் இன்றி ஆதார் அட்டை அடிப்படையில் 70 வயதை பூர்த்தி செய்த யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைய முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தங்களது பெயரை பதிவு செய்ய மூத்த குடிமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய சுகாதார ஆணையம் விளக்கி உள்ளது. அதாவது, https://beneficiary.nha.gov.in என்ற வலைதளம் மூலமாகவோ அல்லது 'ஆயுஷ்மான்' எனப்படும் செயலி மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வலைதளம், செல்போன் செயலி மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம்? என பல்வேறு விளக்கங்களுடன் சுகாதார ஆணையம் தனது வலைதளத்தில் வீடியோவும் வெளியிட்டுள்ளது.
'ஆயுஷ்மான் பாரத்' செயலியை பொறுத்தமட்டில் இந்த செயலியை 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்ததும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுக்கு தகுதி உள்ளதா? என பரிசோதிக்கப்படுகிறது.
அதாவது, விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் தானா? என ஆதார் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது. விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவராக இல்லையெனில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற நீங்கள் தகுதியானவர் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனில் தகுதியானவர் என்ற அடிப்படையில் சில விவரங்கள் கோரப்படுகிறது.
அதாவது ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் சுகாதார திட்டம், மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான 'ஆயுஷ்மான்' சி.ஏ.பி.எப்., முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற சில சுகாதார திட்டங்களை குறிப்பிட்டு இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயன்பெற்று வருகிறீர்களா? என கேள்வி எழுப்பப்படுகிறது. (மேற்கண்ட எந்த திட்டத்திலும் பயன்பெறவில்லை என்றால் மட்டுமே மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும்)
இதன்பின்பு மீண்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அவ்வாறு ஆதார் எண்ணை பதிவு செய்ததும் சுய விவரங்கள் தானாக பதிவு செய்யப்படுகிறது. பின்னர், செல்போன் மூலம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் தொடர்பு முகவரி, செல்போன் எண், குடும்ப உறுப்பினர்களில் வேறு யாரேனும் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களது விவரங்களையும் பதிவிட வேண்டும். இவை அனைத்தும் முடிந்ததும் மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வலைதளத்திலும் இதே நடைமுறையை பின்பற்றி காப்பீட்டு அட்டையை பெறலாம்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விளக்கத்தையும் சுகாதார ஆணையம் வலைதளத்தில் வீடியோவாக வௌியிட்டு உள்ளது.
'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கென தனியாக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு 'டாப் அப்' செய்யப்படும் என்றும், இந்த 'டாப் அப்'பில் வேறு குடும்ப உறுப்பினர்கள் யாரும் பயன்பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- பயனாளிகளுக்கு, கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் உயர்சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை வழங்கிய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனை உள்ளிட்ட மருத்துவ மனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும், 5 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கான அட்டையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 காப்பீட்டு திட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகே சன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சகாய ஸ்டீபன் ராஜ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மேலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11 அரசு மருத்துவமனைகள் மற்றும் 53 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் கீழ் உள்ளவா்கள் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பப் படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையைக் காண்பித்து பயன்பெறலாம்.
திருச்சி ;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஆரோக்கியத் திட்டத்தின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சை பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் கலந்துகொண்டு பரிசுகளையும், புதிதாக மருத்துவக் காப்பீட்டுத் திட்ட உறுப்பினா்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் கேடயங்களையும் வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11 அரசு மருத்துவமனைகள் மற்றும் 53 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 2021–-22 ஆம் ஆண்டில் 23,499 பயனாளிகளுக்கு ரூ.43.38 கோடி மதிப்பில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் மொத்தம் 1,450 மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைகளும் 38 நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடா்புடைய 154 தொடா் சிகிச்சைகளும் 8 உயா் அறுவை ச்சிகிச்சைகளும் சோ்க்கப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் கீழ் உள்ளவா்கள் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பப் படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையைக் காண்பித்து பயன்பெறலாம்.
வருமான வரம்பு இல்லாத விதவைகள், முதியோா் உதவித்தொகை பெறுபவா்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்த இலங்கைத் தமிழா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் அதற்குண்டான அடையாள அட்டையைக் காண்பித்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட புகைப்படம் எடுக்கும் மையத்தில் காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்டத்தில் இதுவரை 5,00,679 குடும்பத்தினா் இத்திட்டத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.
- கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
- தமிழக கைத்தறி நெச–வாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்க–ளுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னிமலை: –
கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கைத்தறி சம்மேளனம் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்னர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான கே.எஸ்.பி. ராஜேந்திரன், தமிழக முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக கைத்தறி நெசவாளர் நலனில் மாபெரும் அக்கரை கொண்டு நெசவாளர்களுக்காக தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நெசவாளர் வாழ்வாதாரத்தை பாதுகாத்துவரும் தமிழக முதல்-அமைச்சருக்கு நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் இன்றளவும் நடைமுறைப்படுத்த படவில்லை.
நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நெசவாளர் பசுமை வீட்டு திட்டம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடுமையாக நூல்விலை உயர்வின் காரனமாக நெசவாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பைகூட வழங்க முடியாமல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிரம நிலையில் உள்ளன.
பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ள ஜவுளிகளை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யவும், நூல் விலை உயர்வினை கட்டுப்படுத்த மத்திய அரசினை வலியுறு–த்தவும் தமிழக கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்