search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுய உதவிக்குழு"

    • வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.
    • போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜிஜோ. இவர் சுய உதவி குழுவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஜிஜோ சுய உதவி குழுவில் இருந்து கொடுக்கப்படும் கடன் தொகையை வசூலிக்கும் வேலையையும் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவருக்கு சுய உதவி குழுவில் இருந்து லோன் கொடுத்துள்ளனர். வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று லோன் தொகையினை வசூலிப்பதற்காக ராஜகுமாரின் வீட்டுக்கு ஜிஜோ சென்றுள்ளார். அப்போது ராஜகுமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் லோன் தொகை வசூலிக்க சென்ற ஜிஜோவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜகுமார் திடீரென ஜிஜோவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜிஜோ களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மது போதையில் சுய உதவி குழு ஊழியரை வாலிபர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள்
    • சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 720 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 31.07.2023 வரை சுழல்நிதி கடனாக 337 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.51 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ் 160 நபர்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 24094 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1372.49 கோடி வங்கி கடன் பெற்றுதரப் பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 52 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.32.30 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 3558 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 2297 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் வினீத் 3 குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.11 லட்சம் வழங்கினார்.
    • 14 புதிய குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.56. லட்சம் வழங்க பரிந்துரை செய்யப்ப்ட்டது.

    காங்கேயம் :

    காங்கேயம் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவிக்குழுவிற்கு தர மதிப்பீடு செய்தலும் புதிய மகளிர் குழு அமைத்தல் நிகழ்ச்சியும் சிவன்மலையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டு 3 குழுக்களுக்கு வங்கி கடன் ரூ 11 லட்சம் வழங்கினார். 14 புதிய குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு ரூ 56. லட்சம் வழங்க பரிந்துரை செய்யப்ப்ட்டது. புதிய குழு தொடங்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதில் ஊரக வாழ்வாதர இயக்க உதவித்திட்ட அலுவலர் ஜோசப், ரெத்தினராஜ், யூனியன் சேர்மன் மகேஸ் குமார், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, கனரா வங்கியின் பொதுமேலாளர், மற்றும் வட்டார அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் காங்கேயம் சுய உதவிக்குழு வட்டார மேலாளர் சந்தா நன்றி கூறினார்.

    • மதுரையில் பெண் தொழில் முனைவோர் தொழிலணங்கு நிகழ்ச்சி நடந்தது.
    • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "தொழிலணங்கு" நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் தத்துவம், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பெண்களை சுயதொழில் முனைவோராக கொண்டு வர வேண்டும் என்பது, தமிழக முதலமைச்சரின் கனவு திட்டங்களில் ஒன்று. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 18-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த மூன்றே மாதங்களில் அது நடைமுறைக்கு வந்து உள்ளது பெருமகிழ்ச்சி தருகிறது.

    மகளிர் சுய உதவிக்கு ழுவினர் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அவர்களின் படைப்புத் திறனுக்கு தொழில் நிறுவ னங்கள் ஊக்க சக்தியாக செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகர மேயர் இந்திராணி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×