search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழமை"

    • பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
    • நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.

    குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

    பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.

    வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.

    • பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
    • பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பழைய மாவட்ட கலெக்டரக அருங்காட்சியகத்தில் பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடைபெறும் விதம் குறித்து ஆய்வு நடத்தினார்.

    இதையடுத்து தஞ்சை அரண்மனை வளாக கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் கேட்டு அறிந்தார்.

    இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.

    • தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமை குறித்தும் ஆய்வு.
    • நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற உறுப்பினர்ஷா நவாஸ் தலை மையில் தொல்லியல் துறை சம்பந்தமாக டாக்டர் க.சுபாஷிணிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி, டாக்டர். பாப்பா, டாக்டர். இறைவாணி, ஆய்வாளர் ப்ரீத்தி, மணி வண்ணன்வரலாற்றுப் பயணம் பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் அருங்காட்சியக பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினர் ஆகியோர் நாகூர் தர்கா வருகை புரிந்து நாகூர் தர்காவின் தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமையினை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம். இதற்க்கு அத்தாட்சி நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுகள் என பாராட்டினர்.

    நாகூர் தர்கா பிரசிடன்ட் கலீபா சாஹிப் நாகூர் தர்கா சிறப்பினை பற்றி விளக்கினார். உடன் போர்டு ஆப் டிரஸ்டிகள், முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

    நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் நாகூர் தர்கா கந்தூரிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.

    • குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் தகவல்
    • ன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 100 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 115 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது என்று குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர் கூறினார்.

    இது குறித்து குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கன்னியாகுமரியில் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 490 கோவில்கள் உள்ளன. இதில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள கோவில்களும் அடங்கும். இதில் சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டும் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள 100 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை தேர்வு செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அந்த அடிப்படையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.

    மேலும் 11 சிவாலயங்களில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 100 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த கோவில்களில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் முடிக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தங்கத் தேர் செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை. இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் போதுமான இடவசதி இல்லாததால் தங்கத்தேர் ஓடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை.

    எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுஉள்ளது. அதேபோலகன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது சம்பந்தமான எந்த திட்டமும் தற்போது இல்லை. ஏற்கனவே கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது குறித்து மண் ஆய்வுகள் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு அது சம்பந்த மாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கூறினார்.

    • ஆடி மாதத்தில் விதைப்பு பணிகளை ஆரம்பிப்பம்.
    • 9 வகை தானியங்களை முடிந்து வைத்து பூஜைகள் செய்யப்பட்டது‌.

    திருப்பூர் :

    இயற்கை தந்த கொடைகளில் நீர் இன்றியமையாதது. நீரை போற்றும் வகையில் சங்ககாலம் தொட்டு, தமிழர்கள் வாழ்வியலில் ஆடி 18 ஆம் நாளை, ஆடிப் பெருக்கு தினமாக, தண்ணீரை போற்றி வணங்கி வருகின்றனர். ஆடி மாதத்தில் ஆறுகள் பெருகி நீர் வரத்து பெறும்.இந்த காலத்தில் பருவத்தே பயிர் செய்ய நீரை வணங்கி விதைப்பை ஆரம்பிக்க இந்த முறை சங்க காலம் தொட்டே கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

    நீர் நிலைகள்,ஆறுகள் அருகே விழாக்களை நடத்தி தண்ணீரை வணங்கி ஆடி மாதத்தில் விதைப்பு பணிகளை ஆரம்பிப்பம். அது இன்றும் தொடர்கிறது.இன்றைய தினம் ஆடிபெருக்கு பண்டிகையை முன்னிட்டு கிராமப்புறங்களில் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை,காங்கயம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆடி பெருக்கு தினத்தை ஒட்டி பல கிராமங்களில் தூரி ஆட்டம் எனும் ஊஞ்சல் கட்டி ஆடும் வழக்கம் உள்ளது. குறிப்பாக உடுமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில்,பழமையான வழக்கப்படி அங்குள்ள பொம்மையன் கோவில் முன்பாக பெரிய மரங்கள் நடப்பட்டு, மரப்பலகை கட்டி பெரிய ஊஞ்சல் அமைக்கப் பட்டது.இதனை தொடர்ந்து அந்த ஊஞ்சலுக்கு சந்தனம் குங்குமம்,மாவிலை தோரணம் கட்டி,மஞ்சள் துணியில் 9 வகை தானியங்களை முடிந்து வைத்து பூஜைகள் செய்யப்பட்டது‌.இதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர்கள் அமர வைக்கப்பட்டு ஊஞ்சலில் ஆடி மகிந்தனர்.இன்றைய ரோலர் கோஸ்டர், ஜெயன்ட் வீல் போல், சாங்க காலம் தொட்டே தூரி ஆடுவது வழக்கத்தில் உள்ளது.

    கடந்த 30 ஆண்டுக்கு முன்பு வரை ஊர் பொது இடத்தில் உள்ள மரக்கிளைகள், ஆலமர–ங்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவர்.காலப்போக்கில் மறையத் தொடங்கி வீட்டு முற்றத்துக்கு சென்று விட்டது. காலப்போக்கில் இது மறைந்து கொண்டே வருகிறது.இந்த பழமையை மறவாமல் இருக்க அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், ஜல்லிப்பட்டி கிராம மக்கள் ஆடி பெருக்கு தினத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.இன்றும் அதேபோல் பெரிய ஊஞ்சல் அமைத்து சிறுவர் சிறுமியர்கள் விளையாடினர். இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் ஊஞ்சல் அமைத்த கிராம மக்களின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    • நம் முன்னோர் கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில் இதுபோன்ற கல் தொட்டிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தனர்.
    • கிராம மக்கள் அங்குள்ள கோவிலில் இந்த கல் தொட்டியை வைத்து பாதுகாப்பதாக கூறியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அடுத்த கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையம் கிராமத்தில் பல்லடம் வரலாற்று மையத்தினர் ஆய்வு செய்தபோது, பழமையான கால்நடை கல் தொட்டி ஒன்றை கண்டறிந்தனர்.

    வரலாற்று மையத்தை சேர்ந்த பாண்டியன் கூறுகையில், விவசாய தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில், இதுபோன்ற பழமையான கால்நடை தொட்டிகளை காணலாம். நம் முன்னோர் கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில் இதுபோன்ற கல் தொட்டிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தனர். கேத்தனூர் மானாசிபாளையத்தில்,க தண்ணீர் தொட்டி ஒன்று ரோட்டோரத்தில் கேட்பாரற்று மண் மூடி கிடந்தது. அதை சுத்தம் செய்து அதிலுள்ள எழுத்துகளை படிக்க முயன்றோம். ஆனால்எழுத்துகள் சேதமடைந்துள்ளதால் படிக்க இயலவில்லை.

    ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முந்தையதாக இது இருக்கலாம் என்றார்.இதையறிந்த கிராம மக்கள்அங்குள்ள கோவிலில் இந்த கல் தொட்டியை வைத்து பாதுகாப்பதாக கூறியுள்ளனர்.

    • தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் கோலத்தி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் புனரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, சூரிய நாராயண பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கடம் கோவிலைச் சுற்றி வந்து கோலத்தி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. மேலும் மூலவர் கோலத்தி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், கருப்பையா, சன்னியாசியப்பர் ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×