என் மலர்
நீங்கள் தேடியது "ரோடு"
- சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.
- கேமராவில் ஆய்வு செய்தபோது ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
பொன்னேரி:
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன். சாலை ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மீஞ்சூர் பகுதியில் நடைபெற்ற சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் பணிகள் முடிந்த நிலையில் அந்த ரோடு ரோலரை சென்னைக்கு கொண்டு வருவதற்காக ஓட்டிவந்தனர். சோழவரம் சுங்கச்சாவடி அருகே செல்லும், ரோடு ரோலர் பழுதானது. தொடர்ந்து இயக்க முடியாததால் அந்த ரோடு ரோலரை டிரைவர் அங்கேயே விட்டுவிட்டு சென்றார்.
இந்த நிலையில் கடந்த, 24-ந்தேதி ரோடுரோலரை சரிசெய்து எடுத்து செல்வதற்காக என்ஜினீயர் தினகரன் ஊழியர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ரோடு ரோலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது லாரி ஒன்றில், ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து லாரியின் பதிவு எண்ணை வைத்து ரோடு ரோலரையே திருடி சென்ற திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், கோபிநாத், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சாலையோரம் நீண்ட நாட்களாக ரோடு ரோலர் கேட்பாரற்று நின்றதால் கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருடி சென்றதாக தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரோடு ரோலர், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
- போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
- காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
பவானி:
பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விபத்தை தடுக்கவும் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் முதல் கவுந்தப்பாடி வரை ரோடு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் காளிங்கராயன் பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த சில மாத ங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இதனால் ரோட்டோரம் இருந்த ஒரு சில மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த நிலையில் காளிங்கராயன் பகுதியில் ரோடு விரிவாக்கம் பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அவதி அடைந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.இதேபோல் காளிங்க ராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வெட்ட ப்பட்ட ஒரு மரத்தின் வேர் பகுதியை அப்புறப்படுத்தாமல் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதாக கூறப்படு கிறது.
இதனால் வேர் உள்ள இடத்தில் மீண்டும் மரம் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ரோடு சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே மரத்தின் வேரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ரோட்டோரங்களில் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ள னர்.
- சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, நடுரோட்டில் இருந்த மின் கம்பத்தை, ஓரமாக மாற்றி அமைக்காமல் விட்டு விட்டனர்.
- இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது நடுரோட்டில் மின்கம்பம் என்பது சரிவர தெரிவதில்லை.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலுார் கோவில்பாளையத்தில் சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, நடுரோட்டில் இருந்த மின் கம்பத்தை, ஓரமாக மாற்றி அமைக்காமல் விட்டு விட்டனர்.
இதனால் மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது நடுரோட்டில் மின்கம்பம் என்பது சரிவர தெரிவதில்லை. இதனால் சிலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மின் கம்பத்தை உடனடியாக ரோட்டோரத்தில் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறியது.
- வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.
வீரபாண்டி:
வீரபாண்டி பிரிவிலிருந்து பலவஞ்சிபாளையம் செல்லும் சாலையில் 4வது குடிநீர் குழாய் பணிக்கும் பணி சென்ற வாரம் நடந்தது. அப்போது சாலையின் இடது புறமாக சாலையை தோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. பணி முடிவுற்ற நிலையில் சரியாக மண் சமன்செய்யப்படாததால் நேற்று பெய்த மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இதில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இரு சக்கர வாகன ஓட்டிகள் சேறும் சகதியாக உள்ள சாலையில் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இந்த சேறும் சகதியாக உள்ள சாலையை சீரமைத்து தருமாறு வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.