என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயி தற்கொலை"
- செந்தில் மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காக வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
- செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவசாயியான செந்தில் இசலி பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான சில ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் பயிர்களின் நீர் பாசனத்திற்காக தனது நிலத்தில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்து மோட்டார் பம்பு செட்டும் அமைத்திருந்தார். இதனால் அவர் கடுமையான கடன் சுமைக்கு ஆளானார். அடிக்கடி மின் மோட்டார் பழுது, சீரமைப்பு பணிக்காகவும் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.
விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் காலை வயலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது தனக்கு சொந்தமான வயலில் பயிர்களுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய செந்தில் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் செந்திலிடம் கேட்டபோது தான் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக செந்திலை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்து அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மீண்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்திலின் தந்தை அங்குச்சாமி கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் சுமையால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இசலி, சுற்று பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார்.
- புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்துள்ள புங்கம்பள்ளி கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (32). விவசாயி.
இவர் தனது தாத்தா ரங்கப்பகவுண்டருடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாக கலைவாணன் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கிடைக்காததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை கலைவாணன் குடித்து விட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்தததையடுத்து, உயர் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி செம்புளிச்சாம் பாளையம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ் (49). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
நட்ராஜ் தனது சகோதரர் ஈஸ்வரன் என்பவரது வீட்டில் குடியிருந்த கொண்டு விவசாயம் செய்து வந்தார். நட்ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் மன உலைச்சலில் இருந்து வந்த நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நட்ராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார்.
- தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மந்தினி மண்டலம், வெள்ளிப்பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 33). இவரது மனைவி சங்கீதா (30). தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
அசோக் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவரின் 5 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தார்.
குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார். தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற அசோக் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சிகள் தோல்வி அடைந்ததால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது.
பயிரிட முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் அசோக் கடனில் தவித்து வந்தார்.
தெலுங்கானா அரசும் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனால் அசோக் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கினார்.
கந்து வட்டிக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் நெருக்கடியை தாங்க முடியாமல் அசோக் அவரது மனைவி சங்கீதா இருவரும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 2 குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.
- கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மொடப்பள்ளி தோட்டத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர்.
கிருஷ்ணகுமார் உட ல்நிலை பாதிக்கப்பட்டு மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று உடல் வலி தாங்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.
இதையடுத்து தேன்மொழி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜீவபாரதி (22) அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குப்புசாமி கடந்த சில நாட்களாக மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குப்புசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனகராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு கொண்டார்.
- சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த தோழனூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது48). விவசாயி. இவரது மனைவி சுகதிலி.
இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்களான பிரபு, அவரது மனைவி வெண்ணிலா, மற்றும் கண்மணி, சின்னமணி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விேராதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வெண்ணிலா, கண்மணி, சின்னமணி ஆகிய 3பேரும் சேர்ந்து கனகராஜை ஆபாசமாக திட்டி தாக்கினர்.
இதைத்தொடர்ந்து மாலையில் கனகராஜ் வீடுகளுக்கு பாலை ஊற்றி விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அங்கு வந்த பிரபு அவரை வழிமறித்து திட்டி அறைந்து விட்டார். இதனால் மனவருத்ததில் இருந்த கனகராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு கொண்டார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சுகதிலி ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார்
- குடும்ப தகராறில் விபரீதம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது35). இவர் விவசாயம் செய்து வந்தார்.
இவரது மனைவி காயத்ரி. நேற்று காலையில் அன்பரசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் காயத்ரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து அவளூர் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கணக்கம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
- கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் அருகே உள்ள ஆர்.பி புதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 55) விவசாயி. இவர் தற்போது தனது மனைவி பொன்னி மற்றும் மகள்கள் நித்தியபிர சாதனி (13), ஆனந்தபிர சாதனி (10) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பா ளையத்தை சேர்ந்த செல்வ ராஜ் என்பவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மகளுக்கு விடு முறை என்பதால் பொன்னி தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டினத்திற்கு சென்றிருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் மனைவிக்கு போன் செய்து விவசாய நிலத்தில் வேலை இருப்பதால் உடனே புறப்பட்டு ஊருக்கு வரு மாறு கூறியுள்ளார். அப்போது மனைவி பொன்னி சில தினங்களுக்கு பிறகு வருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மாதேஸ்வரன் அவரது குடிசை வீட்டிற்கு வெளியே நைலான் கயிற்றால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடி யாக ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு மாதேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து வேலக வுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாசு திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பைரவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 52). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் இரு ந்தது. அவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வாசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மற்றும் தெரிந்த வர்களிடம் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கினார். ஆரம்பத்தில் கடன் கட்டி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படு கிறது.
இதையடுத்து வாசு அவருக்கு சொந்தமான விவசாய வயலை விற்றார். அந்த பணத்தை கொண்டு கடனை அடை த்தார். இதை தொடர்ந்து அவர் கடனுக்காக தனது விவசாய தோட்டத்தை விற்று விட்டோமே என புலம்பி கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் மன வேதனையில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் வாசு திடீரென விஷம் (பூச்சி மருந்து) குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாசு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இற ந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- பணம் கொடுத்த பிறகும் தனது வீடு மற்றும் நிலத்தை அபகரித்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே பசுமை நகரரை சேர்ந்தவர் தவமணி(48). விவசாயி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடியை சேர்ந்த சிற்றரசன் என்பவருக்கு தனது காலி இடத்தை கிரையம் செய்து கொடுத்து ரூ.3லட்சம் கடன் வாங்கினார். அதன்பின்னர் பணத்தை திருப்பி செலுத்திவிட்ட நிலையில் சிற்றரசன் தவமணிக்கு இடத்ைத எழுதி கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை பாண்டி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார். இதனைதொடர்ந்து பாண்டி, தவமணியிடம் இந்த இடம் தனக்கு சொந்தம் என்றும், வீடு மற்றும் காலியிடத்தை காலி செய்யுமாறும் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் மனஉளைச்ச லில் இருந்த தவமணி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் தவமணியின் மனைவி மகாலட்சுமி புகார் அளி த்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று மதியம் மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
- இது குறித்து அவரிடம் கேட்டபோது விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை, செம்மண் குழிக்காடு பெரிய காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மணி (66). விவசாயி. இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் மணி கடந்த ஒரு வருடமாக பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் மனைவி விஜயா ரேஷன் கடைக்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது நோய் காரணமாக வாழப்பிடிக்காமல் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக விஜயா அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்