என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் வியாபாரி"
- பணத்தை சரியாக கட்டி வந்ததால் செல்வி மீது ராஜேஸ்வரிக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது.
- வண்ணாரப்பேட்டை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, வள்ளுவர் நகர், கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வி (40). டிபன் கடை நடத்தி வந்தார். இவர் அதே பகுதி இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் ஏலச்சீட்டு நடத்தி வரும் ராஜேஸ்வரி என்பவரிடம் பணம் கட்டி வந்தார். இவர் 2 லட்சம் ரூபாய் சீட்டுகள் 3 கட்டி பணம் எடுத்து இருந்தார். மேலும் பணத்தை சரியாக கட்டி வந்ததால் செல்வி மீது ராஜேஸ்வரிக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் செல்வி, தனது உறவினர்கள் தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அதன் விரிவாக்கத்திற்கு ரூ.22 லட்சம் பணம் கடன் தேவை என்று ராஜேஸ்வரியிடம் கூறினார். மேலும் அந்த நிறுவன பத்திரத்தின் ஜெராக்சையும் கொடுத்தார்.
இதனை நம்பிய ராஜேஸ்வரி ரூ.22 லட்சத்தை செல்வியிடம் வழங்கினார். பணத்தை வாங்கிய செல்வி திடீரென வீட்டை காலி செய்து விட்டு மாயமாகி விட்டார். அவர் ரூ.22 லட்சத்துடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வி குறித்தும், அவர் கொடுத்த நிறுவனத்தின் பத்திர ஜெராக்ஸ் பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 25-ந் தேதி தெரிந்த நபரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கிய தங்கம், அதனை வீட்டில் வைத்தார்
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் வியாபாரி தங்கத்தை தேடி வருகிறார்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மரிய ராஜேந்திரன். இவரது மகள் தங்கம் (வயது 37). திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், இளநீர் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 25-ந் தேதி தெரிந்த நபரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கிய தங்கம், அதனை வீட்டில் வைத்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த பணத்தை திடீரென காணவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கம் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது சகோதரி பெருவிளையை சேர்ந்த செல்வி (46) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் வியாபாரி தங்கத்தை தேடி வருகிறார்.
- உசிலம்பட்டியில் பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
மதுரை
உசிலம்பட்டி, மாயன் நகரை சேர்ந்த காட்டுராஜா மனைவி சீதாலட்சுமி (வயது 42). இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சீதா லட்சுமி அங்குள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார். இதற்கான தவணையை செலுத்தி வந்தார். அவர் 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லையாம்.
சம்பவத்தன்று இரவு சீதாலட்சுமி கடையில் இருந்தார். அப்போது தனியார் வங்கி ஊழியர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சீதாலட்சுமிக்கு அடி உதை விழுந்தது. இதை கணவர் காட்டுராஜா தட்டி கேட்டார். அவருக்கும் அடி- உதை விழுந்தது.
கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சீதாலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீதாலட்சுமியை தாக்கியது ஆரியப்பட்டி விக்னேஷ், பெருங்காமநல்லூர் தங்கம் மற்றும் 2 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்கத்து கடைகாரர் கைது செய்யப்பட்டார்.
- கடையில் ஒரு கூடை தக்காளி காணாமல் போனது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சையது முகமது. இவரது மனைவி மெஹருதின் நிஷா (வயது 52). இவர் மேட்டுப்பாளையம் அன்னாஜிராவ் சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் முஜ்பூர்ரஹ்மான் (50). இவரும் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மெஹருதின் நிஷா கடையில் ஒரு கூடை தக்காளி காணாமல் போனது. இதுகுறித்து அவர் பக்கத்து கடையை சேர்ந்த முஜ்பூர்ரஹ்மானிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த முஜ்பூர்ரஹ்மான், மெஹருதின் நிஷாவை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை பார்த்த அவரது மகள் மற்றும் பேரன் அங்கு வந்து அவரை சமாதானம் செய்தனர்.
அப்போது மேலும் ஆதிதரம் அடைந்த அவர் அங்கிருந்த இருப்பு கம்பியை எடுத்து மெஹருதின் நிஷாவை தாக்கினார். இதனை பார்த்த முஜ்பூர்ரஹ்மானின் தம்பிகள் ரபிதீன் (40), பரூக் (45) மற்றும் உறவினர் ஆசிக் (25) ஆகியோரும் அங்கு வந்து அவர்களை மிரட்டினர்.
இதுகுறித்து மெஹருதின் நிஷா மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முஜ்பூர்ரஹ்மான், ரபிதீன், பரூக், ஆசிக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முஜ்பூர்ரஹ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மெஹருநிஷா மகன் முகமதுஷரிப் (19) என்பவர் தனது உறவினர்கள் பாரிஷா (40) மற்றும் பரிதா (37) ஆகியோருடன் சென்று முஜ்பூர் ரஹ்மானின் கடையை அடித்து நொறுக்கி உள்ளார். இதுகுறித்து முஜ்பூர்ரஹ்மானின் மகள் கொடுத்த புகாரின் பேரில் முகமதுஷரிப், பாரிஷா, பரிதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ‘சிகரெட்‘ கேட்ட 2 பேர் கைவரிசை - மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
- சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே சரக்கல்விளை, வலியாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் வேதக்கண். இவரது மனைவி சரசம் (வயது 67) இவர்கள் வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு 7 மணி அளவில் சரசம் மட்டும் கடையில் இருந்த போது 2 மர்ம நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து சிகரெட் கேட்டார்கள். சரசம் சிகரெட் எடுத்து திரும்பும் போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அந்த வாலிபர்கள் பறித்தனர். அதனை எதிர்பாராத சரசம் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
வாலிபர்கள் பறித்த செயினில் இருந்த டாலர் கீழே விழுந்தது. இதனை அவசரத்தில் விட்டு சென்று விட்டார்கள். நகையின் மதிப்பு ரூ 1 லட்சம் 30 ஆயிரம் ஆகும். சரசத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள்.
அவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். உடனே இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் சரசம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிவிடி காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்