என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234387"

    • காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.
    • 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கோவில்பட்டி:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பிறகும் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தலின் போதும், குறைவெண் வரம்பின்மை, கோர்ட்டு வழக்கு மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஆகிய காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல் மற்றும் பதவி நீக்கம் காரணமாக 31.7.22 வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

    தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த செல்வக்குமார் பதவி விலகியதால் அந்த பதவி காலியாக இருந்தது. இந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு தேர்தல் நடந்தது.

    போட்டியின்றி தேர்வு

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜெயசீலி முன்னிலையில் தேர்தல் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 17 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதைத் தொடர்ந்து 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை 2-வது வார்டு மிக்கேல் நவமணி முன்மொழிந்தார். 4-வது வார்டு தங்கமாரியம்மாள் வழி மொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக க.சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    வாழ்த்து

    இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் துணைத்தலைவர் சந்திரசேகர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் துணைத்தலைவர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தடம் எண் 70 சி என்ற அரசு பஸ் உடன்குடி, பெரியதாழை, உவரி வழியாக நாகர்கோவில் சென்றது.
    • 3 பஸ்களையும் மீண்டும் இதேவழி தடத்தில் விடவேண்டும் என்று உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தார்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து தினசரிமாலை 5.15 மணிக்கு தடம் எண் 624 என்ற ஈரோடு விரைவு அரசு பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டது.

    இந்த பஸ் சாத்தான்குளம், நெல்லை, மதுரை, வழியாக சென்றது. இதைப் போல உடன்குடியில் இருந்து தினசரி மாலை 5:20க்கு தடம் எண் 632 என்ற அரசு விரைவு பஸ் கோவைக்கு பல ஆண்டுகளாக ஓடியது. திருச்செந்தூர் தூத்துக்குடி, மதுரை வழியாக சென்றது.

    அதைப்போல திருச்செந்தூரில் தினசரி அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட தடம் எண் 70 சி என்ற அரசு பஸ் சீர்காட்சி, பிச்சிவிளை, உடன்குடி, பெரியதாழை, உவரி வழியாக நாகர்கோவில் சென்றது.

    மீண்டும் இதே வழிதடத்தில் திருச்செந்தூருக்கு வந்துவிட்டு திருச்செந்தூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இதே வழித்தடத்தில் நாகர்கோவில் சென்று திரும்பிவரும். இந்த மூன்று பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டது.

    இதனால்இந்த பஸ்சை நம்பி பயணம் செய்த சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கிராமமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த 3 பஸ்களையும் மீண்டும் இதேவழி தடத்தில் விடவேண்டும் என்று உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • உடன்குடி சந்தையில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட் டத்தின் 2-வது மிகப்பெரிய வாரச்சந்தை உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில் தினசரி மக்கள் கூடும் இடத்தல் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யவும், சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் பொருட்களை வாங்கவும் திங்கள்கிழமை தோறும் இங்கு வருவார்கள்.

    இச்சந்தையில் வியபாரிகள், பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய உடன்குடி பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது

    இப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு உடன்குடிபேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார்.பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர்மால்ராஜேஷ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல்லை நாட்டி சந்தை மேம்பாட்டுப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார்.

    வியாபாரிகள் சிறந்த முறையில் பொருட்களை விற்கும் வகையிலும், பொதுமக்கள் எந்தவித இடையூறுமின்றி பொருட்களை வாங்கக் கூடிய வகையிலும் மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்ககர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், பேரூராட்சி மன்ற நியமனக்குழு உறுப்பினர் ஜான் பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சலீம், தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில்பிள்ளை, ராம்குமார், தி.மு.க. மாவட்ட சார்பு ஆணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜூதீன், ஓன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பைஸ், அஜய், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், ஓன்றிய மகளிரணி அமைப்பாளர் ராஜேஸ்வரி, குலசேகரன் பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கணேசன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் நடராஜன், மாவட்டப் பிரதிநிதிமதன்ராஜ் மற்றும் முரளி, ஆனந்த், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான தண்டுபத்தில் தங்கி இருந்தபோது விவசாயிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
    • மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதி குளங்கள், குட்டைகள் மற்றும் கால்வாய்களை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டை அமைச்சருக்கு தெரிவித்தனர்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான உடன்குடி தண்டுபத்தில் தங்கி இருந்தபோது உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் பல்வேறுபொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோர் நேரில் சென்று அமைச்சருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும்தெரிவித்தனர்.

    அப்போது வருகின்ற மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆகியவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும், மேலும் செட்டியாவது ஊராட்சியில் புதியதாக குளம் அமைப்பதற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர். அப்போது செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கூட்டுறவு சங்க தலைவர் அசாப் அலி, உடன்குடி நகர பஞ்சாயத்து துணை தலைவர் மால்ராஜேஷ் தி.மு.க.வை சேர்ந்த கிழக்குஒன்றிய இளங்கோ, சந்தையடியூர் ரவிராஜா, அஜய், பாய்ஸ், ஜெயபிரகாஷ் உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்,

    • தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
    • காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    அறக்கட்டளை செயலர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் நடராஜன், செந்தில்குமார், வேல்ராமகிருஷ்ணன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடுங்கள். கிராமங்களில் உள்ளவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் நிறுவி மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. அரசு தான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று பேசினார்.

    நலத்திட்ட உதவிகள்

    பின்பு அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதன்படி வருகிற 15- ந்தேதி உடன்குடி மேல பஜாரில் நண்பகல் 12 மணி அளவில் 4 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்துடன் உணவு வழங்குதல், மாலை 6 மணிக்கு 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உட்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை,பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக நெய்தல் கலை விழா நேற்று மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சி, வருகிற 10-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்க்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய உணவு குறித்த ஸ்டால்கள் திறக்கப்பட்டுஇருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதன் முன்பாக முன்பாக ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் நின்று நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இதன் மூலம் நேற்றைய நிகழ்ச்சியில் செல்பி ஸ்பாட்டாக அப்பகுதி திகழ்ந்தது.நெய்தல் விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.யுடன் அமர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையர் சாருஸ்ரீ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    • தமிழக மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
    • முதல்-அமைச்சருக்கு நாம் என்றும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மாதவன்குறிச்சி அமராபுரம் கிராமங்கள் இடையே ரூ.8 கோடியில் உயர் மட்ட இணைப்பு பாலம் அமைக்கும் பணியின் தொடக்க விழா நடந்தது.

    மழைக்காலங்களில் இப்பாலத்தில் மழை நீர் பலமாதம் தேங்கி நிற்பதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த தரைபாலத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என இரு கிராம மக்களும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

    இதற்கான தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தலைமை தாங்கினார். மாதவன் குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சேர்மத்துரை, துணைத் தலைவர் கருப்பசாமி, யூனியன் கவுன்சிலர் ஜெயகமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சுமார் 10 வருடங்களாக இந்த தரை மட்ட பாலத்தை உயர் மட்டபாலமாக அமைக்க வேண்டும் என்று இருகிராம மக்களும்கோரிக்கை வைத்தனர்.அப்போது நான் எதிர்கட்சிஎம்.எல்.ஏ.வாக இருந்ததால் எனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

    தரைமட்ட பாலத்தில் போக்குவரத்து தடைபட்டுகிராம மக்களும் கடும் அவதிப்பட்டனர். அவசர தேவைக்கு கூட சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றிசெல்ல வேண்டிய அவலநிலை இருந்தது. அப்படி இருந்தும் எனது கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது .

    தற்போது தி.மு.க. அரசு அமைந்தவுடன் இக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நிறைவேற்றி வருகிறார்.

    இப்படிப்பட்ட முதல்-அமைச்சருக்கு நாம் என்றும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க.மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசிபொன்ராணி,

    உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சேர்மத்துரை, பாலமுருகன், காமராஜ், கமலம், தி.மு. க. நிர்வாகிகள் கனகராஜ், ஜெயப்பிரகாஷ், தன்ராஜ், சேர்மத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×